செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

’டெலி’நோக்குப் பார்வை - ஞாநி.

 

உண்மைகளைத் தோண்டுவதற்கு நடந்ததா, அல்லது அடிக்கற மாதிரி அடி, அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கண் துடைப்பு ஏற்பாடா

’டெலி’நோக்குப் பார்வை - ஞாநி.

  

 
ஸ்பெக்ட்ரம்
 
புகழ் ஆ.ராசா, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள் வீடுகளில் இந்த மாதம் சி.பி.ஐ நடத்திய ரெய்ட் நிஜமாகவே உண்மைகளைத் தோண்டுவதற்கு நடந்ததா, அல்லது அடிக்கற மாதிரி அடி, அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கண் துடைப்பு ஏற்பாடா என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கவேண்டிய ரெய்டுகளை இப்போது செய்தால் என்ன சிக்கும் என்ற நியாயமான கேள்வி எழுகிறது. தமிழில் ராசா எழுதி வைத்த சங்கேதக் குறிப்புகள் உள்ள டயரி சி.பி.ஐயிடம் சிக்கியிருப்பதாக உறுதியாகாத செய்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு டயரியை இத்தனை காலம் ராசா தன் வீட்டிலேயே வைத்திருந்தது உண்மையென்றால் தன்மீது யாரும் கைவைக்க முடியாது என்று அவருக்கு இருந்த தன்னம்பிக்கையையும் அரசியல் செல்வாக்கையும்தான் அது காட்டும். அல்லது இப்போது ரெய்டில் என்னை மாட்டினால், நீங்களும் அழிவீர்கள் என்று இன்னும் மாட்டாதவர்களை மிரட்டுவதற்காக வேண்டுமென்றே டயரியை சிக்க வைத்திருக்கவேண்டும்.
 
இந்த ஊழலில் கடைசியில் உண்மை வெளியாகி அயோக்கியர்கள் எல்லாரும் பிடிபட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு தேசத்தின் பணம் மீட்கப்படுமா என்பது இன்னும் கேள்விக் குறிதான். இதுவரை நடந்துள்ளவை கூட உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுகளினாலேயே நடந்துள்ளன.,
 
இரு வருடங்களாக ராசா தொடர்பான முறைகேடுகளை பயனீர் ஆங்கில ஏட்டில் நிருபர் கோபிகிருஷ்ணன் விவரமாக எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 
 
டிசம்பர்
11,2008 :
 
ராசா 2004ல் சுற்றுச் சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்ற நான்கு மாதங்கள் கழித்து உருவான நிறுவனம்தான் கிரீன் ஹவுஸ் ப்ரமோட்ட்டர்ஸ். இதன் முதலீடு வெறும் ஒரு லட்சம் ரூபாய்கள். ராசாவின் நண்பர் சாதிக் பாஷா நிர்வாக இயக்குநர். பாஷாவின் மனைவி ,ராசாவின் சகோதரர் கலியபெருமாள், மருமகன் பரமேஷ் குமார், ராசாவின் மூத்த சகோதரர் ராமசந்திரனின் மகன் ராம் கணேஷ், மருமகள், உறவுமுறையினர் பலரும் இதில் இயக்குநர்கள். கம்பெனி தொடங்கி 14 மாதங்களில் அதன் முதலீடு மூன்று கோடி ஆகிவிட்டது. ராசாவின் மனைவி பரமேஸ்வரி பிப்ரவரி 2007ல் இயக்குநராக்கப்பட்டார். நிறுவனம் அமைச்சர் ராசாவின் அதிகாரப்பூர்வமான வீட்டு முகவரியிலிருதே இயங்கி வருகிறது. விதிகளின்படி ராசா இந்தத் தகவல்களை பிரதமரிடம் தெரிவிக்கவே இல்லை. அமைச்சர் சிவராஜ் பட்டீலின் மகன் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவர் முகவரியில் இயங்கிவருவது பற்றி செய்தி வெளியானதும் ராசா திடுக்கிட்டார். அதையடுத்து ராசாவின் மனைவியின் பங்குகள் ராசாவின் மருமகனாகிய அரசு வழக்கறிஞரின் மனைவி மலர்விழிக்கு மாற்றப்பட்டன.
 
திடீரேன்று நான்கே வருடங்களில் தி.நகர் கனரா வங்கிக் கிளை கணக்கில் இந்தக் கம்பெனிக்கு 150 கோடி ரூபாய் வரவு மத்திய கிழக்கு நாடுகள், ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்தது. கம்பெனி சிங்கப்பூரிலும் கிளை தொடங்கியது.
 
கிரீன்ஹவுஸ்
 
கம்பெனி தொடங்கி சில மாதங்களிலேயே இன்னொரு கம்பெனி தொடங்கப்பட்டது. இதிலும் ராசாவின் மனைவியும் இதர உறவினர்களும் முக்கியஸ்தர்களும் இயக்குநர்கள். இந்த முறையும் விதிப்படி பிரதமருக்கு ராசா தகவல் தெரிவிக்கவில்லை.இந்தக் கம்பெனியும் நில பேர வர்த்தகத்தில் ஈடுபட்டது. முதல் வருடத்திலேயே இதில் 755 கோடி ரூபாய்கள் புரண்டன!
 
டிசம்பர்
16,2008: 
 
அந்தக் கம்பெனியின் பெயர் ஈக்வஸ் எஸ்டேட்ஸ். என்ன தயாரித்தார்கள், என்ன விற்றார்கள், என்ன சேவை வழங்கினார்கள் எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்ற விவரங்கள் பதிவாளருக்கு 23 ஏசி படிவத்தில் சட்டப்படி தெரிவிக்கப் படவில்லை.
 
அலைக்கற்றை 2ஜி லைசன்சை சர்ச்சைகுரிய விதத்தில் பெற்ற ஸ்வான் டெலிகாம், கிரீன்ஹவுஸ் கம்பெனியில் ஆயிரம் கோடி ரூபாய் விலையில் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கப்போவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி பயனீர் நிருபர் போனில் கேட்டபோது யார் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று தெரிவிக்க முடியாது என்று சாதிக் பாஷா, கம்பெனி ஆலோசகர் கெவின்,ஸ்வான் டெலிகாம் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஷாஹித் பல்வா மூவரும் மறுத்துவிட்டனர். ஸ்வான் கம்பெனி அக்டோபரில் 13 வட்டங்களுக்கான லைசன்ஸை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய சில வாரங்களிலேயே தன் 45 சதவிகிதப் பங்குகளை ஐக்கிய அரபுக் குடியரசு டெலிகாம் கம்பெனியான எடிசலாட்டுக்கு 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. 
 
இன்னொரு நில பேர கம்பெனியான யூனிடெக்கும் 22 வட்டங்களுக்கான லைசன்சை 1651 கோடிக்கு வாங்கிய சில வாரங்களில் தன் கம்பெனியின் 60 சத விகித பங்குகளை நார்வே கம்பெனியான டெலினாருக்கு 6120 கோடிக்கு விற்றுவிட்டது. டெலினார் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் இயங்கும் கம்பெனி. ராசா டெலிகாம் மந்திரியான இரு வருடங்களில் பல நில பேர கம்பெனிகள் டெலிகாம் துறைக்கு வரத்தொடங்கின. விதிகள் பல மீறப்பட்டன. இது பற்றி பிரதமரிடமே பழைய டெலிகாம் கம்பெனிகள் புகார் செய்தன. டெலிகாம் துறையில் ஏகபோகத்தை நீக்கவே தான் இப்படி செய்வதாக ராசா கூறினார். தனக்கும் கிரீன்ஹவுஸ் கம்பெனிக்கும் தொடர்பில்லை என்று மறுத்தார். தன் மனைவி இயக்குநர்(சட்டம்) என்ற பொறுப்பையே வகித்ததாகத் தெரிவித்தார். அவருக்கு கம்பெனியில் பங்கு இல்லை என்று சாதிக் பாஷா கூறினார்.
 
டிசம்பர்
18,2008: 
 
ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் முறைகேட்டில் அமைச்சர் ராசாவின் ராஜினாமா கோரிப் பெரும் சர்ச்சை உள்ளது. இப்போது அவர் அரசின் பி.எஸ்.என்.எல் கம்பெனிக்கு சொந்தமான அலைக்கற்றையை தனக்கு வேண்டிய ஸ்வான் கம்பெனிக்கு ஏறத்தாழ இலவசமாகத் தர வழி செய்துள்ளார். வட்டங்களுக்கிடையிலான உலாவும் வசதிக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஸ்வானுக்கு பி.எச்.என்.எல்லின் சேவை வசதி தரப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று போடப்பட்ட இந்த ஒப்ப்நதத்தில் ஸ்வானுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை. பி.எஸ்.என் எல் தலைவர் கோயல், கட்டணம் பின்னர் பார்த்துக் கொள்ளப்படும் என்றார். இந்த ஒப்பந்தத்தைக் காட்டித்தான் ஸ்வான் தன் பங்குகளை எடிசலாட்டுக்கு விற்றிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் குஷ்வாஹாவும் ஜாவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர். 
 
ஜனவரி
12,2009 
 
ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவரது உறவினர் ஸ்ரீதர் அதே அமைச்சகத்தில் டெபுடி டைரக்டர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். கோவை ஷெல்ட்டர்ஸ் கம்பெனியில் 15 சத பங்குகளுடன் தான் இயக்குநராக இருப்பதை அவரும் ராசாவும் பிரதமரிடம் மறைத்துவிட்டனர். ஜனவரி 2007ல் தொடங்கிய இந்த கம்பெனியின் தலைவர் ராசாவின் பெரம்பலூர் நண்பரான டாக்டர் சி.கிருஷ்ணமூர்த்தி.  தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கும் கண்ணனிடம் பி.எச்.டி செய்த ஸ்ரீதர் அவரிடம் ஐந்தாண்டுகள் பணி செய்ததாக பொய் சான்றிதழ் கொடுத்துஅரசுப் பதவியைப் பெற்றுள்ளார். ராசாவின் மருமகள்கள் ஆனந்தபுவனேஸ்வரி, சந்தானல‌ஷ்மி ஆகியோருக்கும் கோவை கம்பெனியில் தலா 15 சதவிகித பங்கு உள்ளது. கம்பெனியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் கட்டிடத்தில்தான் ராசா வக்கீலாக இருந்தபோது ஆபீஸ் வைத்திருந்தார். இந்த கம்பெனிகள் எல்லாம் ராசா அமைச்சரானதும் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜனவரி
29,2009: 
 
வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீட்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெனெக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் என்ற தமிழ்நாட்டு கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் உள்ள ஸ்வான் கம்பெனியின் 380 கோடி ரூபாய் பங்குகள் தரப்பட்டுள்ளன.
 
கீழக்கரையை சேர்ந்தவர்களான முகமது ஹாசன், அகமது ஷகிர் இதன் இயக்குநர்கள் ஸ்வான் போர்டில் எக்சிம் சார்பாக இருப்பவர் சையத் சலாவுதின். அகமத் சையத் சலாவுதின் துபாயில் இருக்கும் தமிழர் சையத் முகமது சலாவுதீனின் மகன். சையதின் ஈ.டி.ஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் தமிழ்நாட்டில் பல நில பேர கம்பெனிகளை தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னர், ராசா சுற்றுச்சூழல் அமைச்சரானதும் தொடங்கியது. தமிழ்நாட்டில் 3750 கோடி ரூபாய் மதிப்பில் காஞ்சிபுரம் அருகே 500 ஏக்கரில் ஐ.டி மண்டலம் தொடங்க அரசுடன் ஈ.டி.ஏ மே 2007ல் ஒப்பந்தம் போட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டார். இவ்வளவு பெரிய கம்பெனி ஏன் வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு உள்ள ஜெனெக்சைக் கொண்டு ஸ்வான் நிர்வாகத்தில் நுழையவேண்டுமென்பது மர்மமாக இருக்கிறது. ஸ்வானின் 10 சத பங்கை வாங்க ஜெனெக்சுக்கு எங்கிருந்து வருவாய் என்று கேட்டால் பதில் தர மறுத்துவிட்டார்கள். முன்னதாக கிரீன்ஹவுஸ் கம்பெனியைல் பங்கு வாங்க<font face="Times New Ro
அனுப்புக Home, Indian News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
23-12-2010, 13:34
 - Posted by யதார்த்தன்
"உண்மைகளைத் தோண்டுவதற்கு நடந்ததா அல்லது அடிக்கிற மாதிரி அடி அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கண் துடைப்பு ஏற்பாடா"

மேலே சொன்னதுதான் உண்மை.இந்த ஊழலில் பலரைச் சிக்க வைத்து கனிமொழி உட்பட தமிழக அரசையே சிக்க வைத்திருக்கிறார் இராசா.பாதாளத்தில் விழுந்தால் உங்களையும் இழுத்துக் கொண்டுதான் விழுவேன் என்பதற்கான சமிக்ஞையே இது.எல்லாவற்றுக்கும் கவிதை நடையில் அறிக்கை விடும் தமிழக முதல்வரின் பேனாவிற்குக்கூட அச்சம் வந்தவிட்டதா?.இன்னும் சில நாட்களில் இந்த விசாரணைகள் பிசு பிசுத்துப் போய்விடும்.ஐஸ்கட்டி தண்ணீராவது போல் கரைந்து கடலில் சேர்ந்துவிடும்.இராசாவின் ஊழலைப் பார்க்கும் இலங்கையின் கேரளத் தேங்காய் வியாபரமும் இப்படித்தான் ஆகும்.இறக்குமதிக்கு ஒரு அனுமதி வேண்டும் அவ்வளவுதான்.
நாலு மூட்டை அவியல் தேங்காயை காட்டி என்னென்னவோ ஊழல் நடக்கப் போகின்றது.தேங்காய் விளைகிற நாட்டில் தேங்காயை இறக்குமதி செய்கிறார்கள்.இது ஊழலே.


THE FOLLOWING MINISTERS,WHO THEY ARE DOING WHAT?
HON.MAHINDA YAPA ABEYWARDENA (MINISTER OF AGRICULTURE)
HON.JAGATH PUSHPAKUMARA (Minister of Coconut Development &Janata Estate Development)
Hon.S.M.CHANDRASENA (Minister of Agrarian Services & Wildlife)
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.