செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பேராசிரியர்.சி மௌனகுருவின் தமிழ்க் கூத்துக்கலை ( வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைநூல்)

 

பேராசிரியர்.அ.சண்முகதாஸ்

பேராசிரியர்.சி மௌனகுருவின் தமிழ்க் கூத்துக்கலை
( வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைநூல்)

 

மட்டக்களப்பு (கிழக்கிலங்கை) மௌனகுரு எனும் பேராசிரியரைப் பெற்றமைக்காகப் பெருமைப்பட வேண்டும். மக்கள் கலை ஒன்றினைத் தான் கற்று, மற்றவர்களுக்கு ஆதனைக் கலையாகப் பயிற்றி, அக்கலையிலே பல்வேறு பரிசோதனைகள் செய்து நிறைவாக அதனை ஒரு கல்விசார் துறையாக ஆக்கி தந்துள்ள பேராசிரியர் மௌனகுரு மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். தமிழ்க் கூத்துக் கலை என்னும் இந்நூல் அவருடைய ஆளுமையினையும் திறனையும் எதிர்கால நோக்கினையும் தெளிவுறுத்துவதாயுள்ளது.--

அருகி வரும் இத்தாளக் கட்டுக்களையும் ஆட்டமுறைகளையும் முதலிற் பதிவு செய்து உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தவர் என் ஆசான் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள். இவையாவும் பேணப்படுவதுடன் அவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படவும் வேண்டும் என நாம் விரும்பினோம்.'  (பக்-16)

என்று பேராசிரியர் மௌனகுரு கூறுவது இந்நூலினுடைய தோற்றத்தினையும் தேவையினையும் எமக்கு உணர்த்துவதாய் உள்ளது. ஒரு துறையின் வளர்ச்சியின் உச்ச நிலை அது ஒரு கற்கை நெறியாக மாறுவதாகும். பேராசிரியர் வித்தியானந்தன் போனறோh ;நாட்டார் கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். பேணுகை நிலையிலிருந்து, அதனை மாணவர்கள் அறிதலும் ஆய்வுகளை மேற்கொள்வதுமான நிலைக்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டுமானால் அது ஒரு கற்கை நெறியாக மாணவரிடையே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில் பேராசிரியர் க.கைலாசபதி கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்த் துறையிலே நாட்டாரியலை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்தினார். இதுதான் பின்னர் நாடகமும் அரங்கியலும் பாடநெறித் தோற்றத்திற்கும் வழிவகுத்தது.

நாட்டாரியலும் நாடகமும் அரங்கியலிலும் ஒரு பகுதியாக அமைந்திருந்த கூத்தினை பேராசிரியர் மௌனகுருதான் ஒரு தனியான கற்கை நெறியாக இனங்கண்;டு அதன் வளர்ச்சிக்கான பணிகளைப் படிப்படியாகச் செய்து வந்தார். இப்பணியின் பயன் தகு விளைவாக அமைவதே தமிழ்க் கூத்துக் கலை எனும் இந்நூலாகும். நோர்வேயிலுள்ள ஒஸ்லோ இசைக் கலாசாரக் கல்லூரி (2010) இந்நூலை வெளியிட்டுள்ளது. வடமோடி ஆடற் பயிற்சிக்கான கைநூல் என இது கொள்ளப்படுகின்றது. எனவே தமிழ்க் கூத்துக் கலை எனும் கற்கை நெறியின் ஒரு பகுதிக் கற்கைப் பயிற்சிக்குரிய நூலாக இது அமைகிறது எனலாம்.

தென்மோடிக்கும் வசந்தன் ஆட்டங்களுக்கும் சிந்து நடை காமன் கூத்துக்கும் இத்தகைய கைநூல் எழுதப்பட வேண்டியுள்ளது.

தமிழ்க் கூத்து மரபுகளை ஐரோப்பிய ஒபெரா மரபுடன் ஒப்பிட்டு ஆசிரியர் ஒரு சிறிய முன்னுரை எழுதியுள்ளார். அடுத்து கூத்து கற்கும் மாணவர்களுக்கு ஆட்ட அறிமுகமும் ஆட்டப் பயிற்சிகளும் தரப்படுகின்றன. ஆட்டப்பயிற்சிகள் பற்றி மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்த முறையில் தெளிவுடனும் ஏற்ற விளக்கங்களுடனும் கூறப்பட்டுள்ளது. ஆட்டக் கோலங்கள் அமையும்முறை ஏற்ற குறியீடுகளுடனும் படங்களுடனும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாட்ட முறைகள் ஆண் பாத்திரங்களுக்கும் பெண் பாத்திரங்களுக்கும் வௌ;வேறு முறையிலே அமைவதால், அதற்கேற்றபடி பயிற்சி விளக்கம் தரப்பட்;டுள்ளது. மேலும் வீரர்கள் குதிரையிலே செல்லுதல், தேரிலே செல்லுதல், குரங்குகள் என்பனவற்றுக்கு ஏற்றபடி சிறப்பான ஆட்டங்கள் இருக்கின்றன. அவை நூலிலே விளக்கம் பெறுகின்றன.

வடமோடிக் கூத்துத் தாளக் கட்டுக்கள் விரிவாக நோக்கப் படுகின்றன.

தமிழ்க் கூத்துக் கலையின் ஒரு பகுதியான வடமோடிக் கூத்தின் பாடல் பரப்பினைத் தரும் ஆசிரியர் அப்பாட நெறியின் அமைப்பினையும்இந்நூலிலே தந்துள்ளார். கோட்பாட்டறிவும் செயற்பாட்டறிவுடைய ஆக்கத்திறனுடைய கலைஞர் தலைமுறையை உருவாக்கவும், தமிழரின் ஆட்ட இசைநாடக வகையினைத் தேற்றுவிக்கவும் உலக அரங்கில் இத்தகைய ஆட்ட இசைநாடக மரபினை அங்கீகாரம் பெற்றதாக இடம் பெற வைக்கவும் இக்கற்கை நெறி உதவும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியர் வித்தியானந்தன் மௌனகுருவை கூத்துக் கலைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மௌனகுரு பேராசிரியர் வித்தியானந்தனின் பங்களிப்புகளை அறிமுகம் செய்து வைப்பதுடன் தமிழ்க் கூத்தினை தமது அடுத்த தலைமுறைக்கு ஓர் கல்வி சார் கற்கை நெறியாக இந்நூலூடாக அறிமுகப்படுத்தி வைக்கிறார். 'ஆட்டப் பயிற்சியில் எளிமையாகவும் இலகுவாகவும் ஆட்டப் பயிற்சி செல்லப்படுகின்றது. ஆட்டத்திற்கு மிக இன்றியமையாத அங்கம், பிரத்தியாங்கம் என்பனவற்றிற்கான கடும் பயிற்சிகளும் இவற்றுள் அடங்கும். கூத்துத் தானே ஆடிவிடலாம் என்று ஒரு வகை இளக்கார நினைப்போடு வருபவர்கட்கு இப்பகுதி சற்றுச் சிரமம் தரக்கூடும்' (பக்-17) என்று மௌனகுரு கூறுவது இக்கற்கை நெறியின் கல்விசார் பண்பினை வெளிப்படுத்துவதுவதாயுள்ளது.

   மட்டக்களப்பு (கிழக்கிலங்கை) மௌனகுரு எனும் பேராசிரியரைப் பெற்றமைக்காகப் பெருமைப்ப் வேண்டும் மக்கள் கலை ஒன்றினைத் தான் கற்று, மற்றவர்களுக்கு ஆதனைக் கலையாகப் பயிற்றி, அக்கலையிலே பல்வேறு பரிசோதனைகள் செய்து நிறைவாக அதனை ஒரு கல்விசார் துறையாக ஆக்கி தந்துள்ள பேராசிரியர் மௌனகுரு மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். தமிழ்க் கூத்துக் கலை என்னும் இந்நூல் அவருடைய ஆளுமையினையும் திறனையும் எதிர்கால நோக்கினையும் தெளிவுறுத்துவதாயுள்ளது.

 

அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.