செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் ஈக்வடோர் நாட்டில் தஞ்சம் கோரியுள்ளார்:-

 

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் ஈக்வடோர் நாட்டில் தஞ்சம் கோரியுள்ளார்:-

 விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் தென் அமெரிக்க நாடான எக்வடோரில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், அவர் நேற்றைய இரவை லண்டனிலுள்ள அந்நாட்டின் தூதரகத்தில் கழித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க அவர் முயற்சிக்கிறார்.

ஸ்வீடனில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழலுக்கு தீர்வு காண தாம் எக்வடோர் நாட்டுடன் செயலாற்றவிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் ராஜாங்க தகவல் பரிமாற்றங்களை இணையதளத்தில் கசியவிட்டதாலேயே தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக அசாஞ்ச் கூறுகிறார்.

BBC

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.