செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிணங்களை தூக்கி செல்வதையும் வெள்ளைக் கொடிகளை தொங்கவிடுவதையும் பார்த்து கொண்டிருக் முடியாது –

 

நிர்மால் ரஞ்சித்திற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் ஜனநாயகம் சுதந்திரம் தொடர்பான பிரச்சினையாகும்

பிணங்களை தூக்கி செல்வதையும் வெள்ளைக் கொடிகளை தொங்கவிடுவதையும் பார்த்து கொண்டிருக் முடியாது –

 

 
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் சர்வதிகார பயணம் தொடர்பில், தேவைக்கு அதிகமான உதாரணங்கள் இருப்பதாக பல்லைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஹிட்லரை விட சிறந்த முறையில் தற்போதைய ஹிட்லர்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமில தேரர் இதனை கூறியுள்ளார்.
 
பல்லைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
 
இந்த சம்பவமானது பல்லைக்கழக விரிவுரையாளருக்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதவில்லை. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஜனநாயகம் சுதந்திரம் தொடர்பான பிரச்சினையாகும். தொடர்ந்தும் பிணங்களை தூக்கி செல்வதையும் வெள்ளை கொடிகளை தொங்கவிடுவதையும் பார்த்து கொண்டிருக்காது,  இந்த செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் குறிபபிட்டுள்ளார்.
 
அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்துள்ள தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை குழப்பவும், தொழிற்சங்க பிரமுகர்களை அச்சுறுத்தவும் அதிகாரிகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தொழிற்சங்க போராட்டடமானது வெறுமனே ஊதியத்தை அதிகரித்து கொள்வதற்கான போராட்டமல்ல. நாட்டில் இலவச கல்வியையும் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பாரிய போராட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே. 
 
இதனால் வெள்ளை வேன்களை அனுப்புவதன் மூலமோ, அவப்பெயரை ஏற்படுத்துவதன் மூலமோ, அச்றுத்தல்கள் மூலமோ, நாட்டின் தேசிய தேவைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை எந்த விதத்திலும் நிறுத்த முடியாது எனவும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.