வடக்கில் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தனித்து வாழும் தாய்மார் தங்களது பிள்ளைகளை இந்த சிறுவர் பாதுகாப்புநிலையங்களில் விட்டு, வேலைக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில்இவ்வாறு சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையுமமுன்னெடுக்க முடியவில்லை எனவும், தற்போது இவ்வாறான சமூக நலத் திட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.