நிலக்கண்ணி வெடிகளை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதன் பின்னர் வடக்கில் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில்குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ரணில்சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றாமையே தேர்தல் நடத்தாமைக்கான காரணம் எனஅரசாங்கம் தெரிவிப்பதில் எதுவித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி மற்றும்பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே நிலக்கண்ணி வெடி தொடர்பான அரசாங்கத்தின் கருத்துஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானதுஎன ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தின் கோரிக்கைக்கு அமையவே மாகாணசபைகள்உருவாக்கப்பட்டதாகவும், வடக்கு மக்கள் இதுவரையில் மாகாணசபைத் தேர்தலில்வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.