வடக்குகிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது இலங்கை அரசாங்கம் -
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எந்த இடங்களில் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது இலங்கை அரசாங்கம் எனவும் ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு அமையவே சரத் பொன்சேக்கா மட்டுமல்லாது, சம்பந்தன் போன்றோர் வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருவதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற ஜே.வி.பியின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இலங்கையில் இராணுவ முகாம்கள், வடக்கில், வன்னியில், கிழக்கில், மாத்தறையில் எந்த இடங்களில் இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும். அரசாங்கத்துடன் இருக்கும் நல்லது கெட்டவை நாங்கள் தீர்த்து கொள்கிறோம். அது மக்களின் வேலை. சரத் பொன்சேக்கா, சிறையில் இருந்து விடுதலையானதும், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அடுத்து சம்பந்தன் அவர்கள் இதனை தொடர்ந்தும் கூறிவருகிறார். சம்பந்தன் என்பவர் சர்வதேசத்துடன் இணைந்து ஈழத்தை உருவாக்க போவதாக கூறி வருபவர்.அதனை அவர் அண்மையில் கூட தெரிவித்திருந்தார். ஆனால் இராணுவ முகாம்கள் அகற்ற வேண்டும் எனக் கூறும் பொன்சேக்கா அதற்கான அடிப்படை காரணத்தை தெரிவிக்க வேண்டும். காரணம் அவர் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார் எனவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.