பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவே நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணம் என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி நாட்டின் ஏனைய பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காவல்துறைத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத் திணைக்களம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கும் பொருளாதார வீழ்ச்சியே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர், நீதிமன்றத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
விரிவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அவர் சுட்க்காட்டியுள்ளார்.