கடல் வழியாக வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் வழியாக படகுகளின் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் கோரிய 600க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை என ஈழப் புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பின் அமைப்பின் தலைவர் சந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
1980களில் ஆரம்பம் முதல் இவ்வாறு யுத்த வலயத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகுப் பயணிகளை அழைத்துச் செல்லும் முகவர்கள் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை துன்புறுத்தி அந்தப் பழியை இந்திய அரசாங்கத்தின் மீது சுமத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாஙகம் இலங்கைத் தமிழ் அகதிகளை நல்ல விதமாக பராமரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரதாசன், இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதி அமரர் தந்தை செல்வாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் வழிப் பயணங்களில் ஆயிரக் கணக்கானோரின் உயிர்கள் காவு
கொல்லப்பட்டுள்ளதாகவும், பயண முகவர்கள் பெருந்தொகை பணத்தை சம்பவதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில இலங்கையர்கள் புகலிடக் கோரிக்கை பெற்று பசுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், பலர் மிகவும் கஸ்டமான அனுபவங்களையும் நெருக்கடிகளையுமே எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்திய அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பல இலங்கையர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் பொறியில் சிக்கிக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக பெருந்தொகைப் பணத்தை செலுத்தி மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணங்களை
மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.