செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஜனநாயக முறையிலான ஆர்பாட்டத்தில் புலிக்கொடியுடன் வலம் வந்தது யார்?

 

அரச புலனாய்வுப் பிரிவிரா? என சந்தேகம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஜனநாயக முறையிலான ஆர்பாட்டத்தில் புலிக்கொடியுடன் வலம் வந்தது யார்?

 

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டம் நெல்லியடி பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது.

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் வட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட அரசியல் தலைவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது யாரோ இனம்தெரியாத நபர்கள் தங்களை அடையாளம் காணமுடியாதவாறு தலைக்கவசம் அணிந்த வன்னம் இரு மோட்டார் சைக்கில்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியை சுற்றி வந்ததாகவும், வயோதிபர் ஒருவரை மோதிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த புலிக்கொடி ஏந்திய நபர்களின் செயற்பாடுகள் குறித்து கண்டுகொல்லவில்லை எனவும், அவர்களை தடுத்து நிறுத்தவோ, விசாரணைச் செய்யவோ இல்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பொதுமக்களை அமைதியா இருக்கும்படி கோரியதுடன் ஆத்திரமடைந்த மக்களை அமைதிப்படுத்தினார்.

ஜனநாயக ரீதியில் தாம் போராட்டத்தை மேற்கொள்ளும் போது தமக்கு புலி முத்திரைக் குத்துவதற்காக இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நாசகார செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராஜ கஜேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையினை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(7) அபிப்பிராயங்கள்
18-07-2012, 11:45
 - Posted by தமிழன்
சந்தேகமே வேண்டாம் அவர்கள்தான்.
திருவாளர் சொலமன் அவர்களே உங்கள் ஞானக்கண்ணை திந்து சொல்லுங்கள் பார்ப்போம்
18-07-2012, 13:58
 - Posted by Siva.
அவரிடம் போய்க் கருத்துக் கேட்கிறீர்களே!அரசிடம் மாதச் சம்பளம் பெறும், கௌரவமாக, 'அரச புலனாய்வாளர்கள்', என நாமகரணம் சூட்டப்பட்ட அடிவருடிகள் செய்தார்கள் என்றா, அவர் சொல்லுவார்? புலிக் காய்ச்சல் பிடித்த அவர், புலி.....புலி ...என்றுதானே கூச்சலிடுவார்!
18-07-2012, 14:04
 - Posted by Solomon
இலங்கையில் மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க கூடிய சுதந்திரத்தை செய்திகளில் வாசிக்கும் பொது புலிகளின் கீழ் அடக்கி ஒடுக்கபட்ட மக்களின் குரல் இப்போது சுதந்திரமாக வருவது சந்தோசமாக இருக்கிறது. அத்துடன் நாங்கள் புலி கோடி பிடிக்கவில்லை என்று "தலையில் அடித்து சத்தியம் " செய்யும் அளவுக்கு மக்கள் திருந்தி இருக்கிறார்கள். அரசியல் கைதிகளை பற்றி தெரியாது (மரணமடைத்த இளைஞரை முனால் புலிகளின் போராளியின் வீர மரணம் என்று ஒரு வானொலியில் சொல்ல கேட்டதன் பின் ..) ஆனால் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு திருவித்து எங்கள் ஆதரவையும் தெருவித்து கொள்கிறோம். புலிகளால் எங்கள் காணிகள் காணிகள் அபகரிக்கப்பட்டு "அவர்களின் உறவுகளுக்கு " பலாத் காரமாக மாற்றப்பட்ட வலிகளை நாங்களும் அறிவோம். வாழ்க ஜனநாயகம் .

கடைசியாக தயவு செய்து தமிழ் பதாகைகளை தலைகீழாக பிடிக்காதீர்கள். தங்கள் என்னத்தை கையில் ஏந்தி இருக்கிறோம் என்பதே தெரியாமல் கூடத்தில் நிற்பது .... என்ன வாத்தையில் சொல்லலாம் என்று புரியவில்லை.
18-07-2012, 14:06
 - Posted by Solomon
இலங்கையில் மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க கூடிய சுதந்திரத்தை செய்திகளில் வாசிக்கும் பொது புலிகளின் கீழ் அடக்கி ஒடுக்கபட்ட மக்களின் குரல் இப்போது சுதந்திரமாக வருவது சந்தோசமாக இருக்கிறது. அத்துடன் நாங்கள் புலி கோடி பிடிக்கவில்லை என்று "தலையில் அடித்து சத்தியம் " செய்யும் அளவுக்கு மக்கள் திருந்தி இருக்கிறார்கள். அரசியல் கைதிகளை பற்றி தெரியாது (மரணமடைத்த இளைஞரை முனால் புலிகளின் போராளியின் வீர மரணம் என்று ஒரு வானொலியில் சொல்ல கேட்டதன் பின் ..) ஆனால் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு திருவித்து எங்கள் ஆதரவையும் தெருவித்து கொள்கிறோம். புலிகளால் எங்கள் காணிகள் காணிகள் அபகரிக்கப்பட்டு "அவர்களின் உறவுகளுக்கு " பலாத் காரமாக மாற்றப்பட்ட வலிகளை நாங்களும் அறிவோம். வாழ்க ஜனநாயகம் .

. தயவு செய்து தமிழ் பதாகைகளை தலைகீழாக பிடிக்காதீர்கள். தங்கள் என்னத்தை கையில் ஏந்தி இருக்கிறோம் என்பதே தெரியாமல் கூடத்தில் நிற்பது .... என்ன வாத்தையில் சொல்லலாம் என்று புரியவில்லை. இதைதான் ஞானக்கண் என்று சொன்னீர்களா ?!
18-07-2012, 18:06
 - Posted by Solomon
மூன்றாவது படம் சாத்வீக போராட்டவரலாற்றில் எப்போதும் பேசப்படும். புகைப்பட கலைஞருக்கு குறும்பு ஜாஸ்தி. அருமை. தனித் தமிழில் எழுதி அதனை தலைகீலகவும் பிடிக்கும் வல்லமை கிறங்க அடிக்குது.
அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா.!
18-07-2012, 19:40
 - Posted by Anonymous
சொலமன் அண்ணே ,முஸ்லிம் குழுக்கள் தமிழர் காணிகளை அபகரித்து ,கிராமங்களை அழித்தது,கோவில்களில் கொலை செய்தது என்ன கணக்கண்ணே ????
(உங்களுக்கு வந்த ரத்தம் ..எங்களுக்கு வந்த தக்காளி சட்னிய அண்ணே )..சின்ஹல அரசு இந்த அற்பட்டங்களுக்கு எதிராக நடத்தும் அச்சுறுத்தல்கள் ,கழிவு ஆயில் தாக்குதல்கள் உங்கள் ஜனனஜகத்தின் பகுதிகள ?????உயிரை பணயம் வைத்து ஆர்பாட்டம் நடத்தும் மக்கள் பிரதி நிதிகள் இவர்கள் ???...நீதி மன்ற துணை நின்றதால் நடந்த அற்பட்டம் ..விலை போன நீதவன்களுள் இவர் படும் விலை போகாமல் இருபது உண்மையில் மகிழ்ச்சியானது
18-07-2012, 20:09
 - Posted by Siva.
இன்றைய கொடூரமான ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில், அரசுக்கெதிரான ஒரு போராட்டத்தில் தமிழர் ஒருவர் பங்கு பற்றுவதே போற்றுதலுக்குரியது! இதில், ஊனக் கண், ஞானக் கண் என்றெல்லாம் பேசுபவருக்கு சற்றுச் சிரமமெடுத்து வாசிப்பதால், ஒன்றும் குறைந்து விடாது! தமிழைக் கொலை செய்யும் இவர், மற்றையோர் எழுதுவதை சரியாகப் புரிந்துகொள்ளும் திறனற்ற இவர், இச் சிறு விடயத்தில் நொட்டை பிடிப்பது, கவலைக்குரியது. ஓரோர் சமயம், அந்த அட்டையைத் தாங்கி இருப்பவர் எழுத்தறிவற்ற ஒரு பாமரனாகவும் இருக்கக் கூடும்! பிறரில் குறை காண்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட இவருக்கு, நல்லனவற்றைப் பார்க்கும் அறிவு இல்லை, என்பதைத் தினமும் தானே வலிந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.