விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :

 

TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :

 

யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
 
சம்பந்தன் - சுமந்திரன் - மாவை சேனாதிராஜா ஆகிய மூன்று பேர் கொண்ட குழு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் உடையும்.அவர்கள் ஐக்கியமாக இல்லை. நாங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 25 முதல் 27 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் முன்னாள் முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஏன் போட்டியிடுகிறது எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
19-07-2012, 05:38
 - Posted by Anonymous
என்னுடைய கணிப்பின்படி பிள்ளையன் இந்த தேர்தலில் வெல்ல கூடிய நிலைமைகள் இல்லை என்றே தெரிகிறது .....சின்ஹல அரசின் மீதான மக்கள் வெறுப்பு ,தமிழ் தேசியத்தின் மீதான மக்கள் அரவம்,கூடமைப்பு வேட்பாளர்கள் மீதான புகழ்/கவர்ச்சி இலகுவில் இந்த எட்டபனை தோற்கடித்து விடும் ....துணைவேந்தர் முதல் ஊடகவியல் போராளிகள் பலரை கொலை செய்து சின்ஹல அரச படை முகாமில் இன்றும் செயற்படும் இவர் இந்திய அரசின் புலனாய்வு துரையின் கைக்கூலி ...வங்கி கொள்ளை ,பணத்திற்கு ஆக சிறுமி கொலை என இவர் கொலைகள் அதிகம் ...தன்னுடன் கூட வந்த திலீபன் ,சிந்துஜன் போன்ற பலரின் கொலையின் சூத்திரதாரி .....TRO உருபினர்களை கற்பழித்து கொலை செய்த கேடி ...தமிழரசு உறுபினர்களை அரசுக்கு எதிராக வாக்களிக்க விடாமல் தடுக்க கடத்திய பேர்வழி ....புலிகள் படையில் இருந்த போதே கொலை ஒன்றுக்காக தண்டிக்க பட்டவர் ...கோட்டபாயவுக்கு ஆக இலங்கை முழுவதும் தமிழர்களை கடத்தி கொலை செய்த நபர்களில் ஐவரும் ஒருவர் ....தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலையில் டௌக்லஸ் யுடன் இவருக்கும் பணக்கு இருக்கிறது ...கடந்த முதலவர் காலபகுதியல் நிறைய சொத்துகள் வாங்கி வாங்கி வைத்திருக்கும் இவர் இலங்கை படையுடன் சேர்ந்து நிறைய கொடுமைகளை இந்த தேர்தல் காலத்தில் செய்ய கூடும் ....புலிகள் இயக்கத்தில் சாதாரண உறுபினராக இருந்த இவர் இன்று மட்டகளப்பில் பெரும் பணக்காரர் ....இலங்கை அரசு சார்பில் மட்டகளப்பில் முஸ்லிம் வேட்பலர்களே தெரிவு செய்ய கூடிய வைப்பு இருக்கிறது......இலங்கை சின்ஹல அரசு தமிழர்களுக்கு தீர்வு கொடுக்காமல் இருபதர்க்காக இந்த மாதிரி பொம்மைகளை காலத்துக்கு காலம் பயன்படுத்தி வருகிறது ..... குடி குட்டி என வாழும் இவர் சின்ஹல அரசு தயவில் இருபதனால் தான் தான் மீதான தவறுகளை மறைக்க முடிகிறது ......இன்றோவரை மட்டகளப்பு மது சாலை அதிகாரி இந்த நபருக்கு எதிராக பண பறிப்பு சமந்தமாக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.......எல்லோரையும் எல்லா காலமும் எம்ம்ற முடியாது ....இவருக்கு இந்த தேர்தல் தான் சங்கு
19-07-2012, 05:55
 - Posted by Siva.
அடி தடி அச்சுறுத்தல் இல்லாத ஒரு தேர்தல் நடைபெறுமானால், இந்த முந்நாள், இனி என்றுமே முந்நாள் தான், என்பதில் ஐயமில்லை! ஒரு ஜனநாயக் நாட்டில் எவரும் என்றும் தேர்தலில் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாது விடலாம்! TNA, இன்று ஏன் தேர்தலில் போட்டியிடுகிறது என்ற கேள்வியே நியாயமற்றது! முடிந்தால், எதிராகப் போட்டியிட்டு வென்று காட்டட்டுமே!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.