விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நீட்டப்படும் நேசக்கரங்களும் முஸ்லீம் தலமைகளின் சலுகை அரசியலும் - நடராசா குருபரன்.

 

அன்புள்ள ஹக்கீம் மற்றும் பசீர் சேகுதாவுத் அவர்களுக்கு பகிரங்க கடிதம்:-

நீட்டப்படும் நேசக்கரங்களும் முஸ்லீம் தலமைகளின் சலுகை அரசியலும் - நடராசா குருபரன்.

 

நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நீங்கள் இருவரும் எனது வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றுச் சென்றமை என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அது மட்டும் அல்லாது நான் கடத்தப்பட்ட அன்றே ஊடகங்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் நீங்கள் வெளியிட்ட காரசாரமான கண்டன அறிக்கையையும் இப்பொழுதும் ஆவணமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். என் மீது நீங்களும் உங்கள் இருவர் மீது நானும் தனிப்பட்ட வகையில் வைத்திருக்கும் மதிப்புப்பற்றி  எங்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும்.

சூரியன் எவ் எம்மெனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக் கூறுமாறு நான் அழைத்த போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் நீங்களும் உங்களது நண்பரும் எனது நண்பருமான பசீர் சேகுதாவுத்தும் கலந்து கொண்டு உங்கள் அரசியற் கருத்துக்களை என்னுடனும் வாசர்களுடனும் பகிந்து கொண்டிருந்தீர்கள்.

நான் இலங்கையில் இருந்து நீங்கி லண்டன் வந்த பின்பு ஆரம்பித்த குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கும் ஜீரீபீசி வானொலிக்கும் கூட எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது நீங்கள் செவ்விகளையும் கருத்துக்களையும்  வழங்கியதை நினைவு கூருகிறேன்.

இன்றைக்கு மீண்டும் ஒரு முறை பொதுத்தளத்தில் உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று உணர்கிறேன்.

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் நிற்கின்றன. நீங்களும் நானும் இந்தச்சிறுபான்மை இனங்களின் உறுப்பினர்கள் என்ற வகையில் இந்தச்சந்தர்பத்தில் பெறுமதியான ஒரு உரையாடலை செய்ய வேண்டிய தேவை உள்ளது.

21 வருடகால ஊடகவாழ்வில் பல அனுபவங்களை நடைமுறையில் பெற்றுக் கொண்டவன் என்ற வகையில் எமது சகோதர இனமான முஸ்ஸீம் மக்களை நோக்கியும் அதன் வழி முஸ்லீம்மக்களின் பெருந்தலைவர்கள் என்ற வகையில் உங்கள் இருவரை நோக்கியும் நீங்கள் என் நண்பர்கள் என்ற உரிமையுடன் சில முக்கியமான விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். இதனால் உங்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதற்காக முன்கூட்டியே என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போருக்குப் பின்னான அல்லது புலிகள் அழிக்கப்பட்ட பின்னான சூழலிலும் கூட சிங்களப் பெருந் தேசியவாதத்தின் தொடர்ச்சியான ஒடுக்குதல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வரும் சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களூம் மலையகமக்களும் தம்மிடையே பரஸ்பர புரிந்துணர்வும் அங்கீகாரமும் கொண்ட ஐக்கிய முன்னணியை அல்லது அதற்குத் தேவையான அடிப்படையான வேலைத் திட்டத்தையாவது உருவாக்க வேண்டும் என்ற பலமான எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இன்றைக்கு எழுந்து வருகின்றன. தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் சாதாரண மக்கள் தொடங்கி  இவற்றின் சனநாயகச்சிந்தனை மிக்க புத்திசீவிகள் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் இந்த எதிர்பார்ப்பே நிரம்பியிருக்கிறது.

மகிந்த அரசாங்கத்தினது கடுமையான அழுத்தங்கள் மற்றும் கட்சிக்குள் உள்ளவர்களின் அழுத்தங்கள் காரணமாக நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கவரிசைக்குச் சென்றீர்கள்.

சலுகைகள் இன்றி நெடுநாள் எதிர்க்கட்சியாக இருந்து களைத்துப் போனதன்  விளைவில் கட்சிக்குள் எழுந்த அழுத்தங்கள் காரணமாக நீங்கள் மகிந்தவின் அழுத்தங்களுக்கு பணிந்து கொண்டதை ஒருவகையில் எங்களாற் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தின் தேவை இலங்கை சுதந்திரமடைந்தநாளில் இருந்து கடுமையாக பேசப்பட்டும் உணரப்பட்டும் வருவதை நாங்கள் இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கொள்வோம்.

இந்த நிலையிற் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஒட்டி முஸ்லீம் காங்கிரஸ் அல்லது நீங்கள் வெளியிடும் அறிக்கைகள் சிறுபான்மைச் சமூகங்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

நேற்று (23.07.12) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லீம் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.*1ஹசன் அலியினுடைய இந்த அறிக்கை நீங்கள் பங்காளியாக இருக்கும் அரசாங்கத்தை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களை ஆசுவாசப்படுத்துவதற்காகவும் அவசர அவசரமாக விடப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்.

அது மட்டும் அல்ல உங்கள் பங்காளியைத் திருப்திப்படுத்த நீங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கீறீர்கள் என்பதனைக் வெளிப்படுத்தஆளும் கட்சியுடன் எந்த முரண்பாடும் கிடையாது*2என நீங்கள்கூட அண்மையில் அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தீர்கள்.

ஆனால் இப்போது மாகாணசபைத் தேர்தல் என்றதொரு விடயம் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை கோரிநிற்கிற முக்கியமான வரலாற்றுக் கணத்தில் ஆளும் பேரினவாத சர்வாதிகார மற்றும் இராணுவ முகம் கொண்ட வலிமையான சனநாயக மறுப்பு அரசொன்றுக்கு சாதகமாக உங்களது அறிக்கைகள்  வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தவிடத்தில் தற்போதுள்ள மாகாணசபைகளுக்கு எந்த அரசியற் பெறுமானமும் இல்லை என்பதையும் சிறுபான்மை இனங்களின் அடிபடையான அரசியற் பிரச்சனைகளுக்கு எந்ததீர்வையும் தரக்கூடிய அதிகாரங்கள் எதனையும் அவை கொண்டவையல்ல என்பதையும் நாங்கள் நினைவிற் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல தற்போதைய மாகாண சபைகளை ஏற்றுக் கொள்வது என்பது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சட்ட ரீதியானதும் நடைமுறைசார்ந்ததுமான அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். டக்கையும் கிழக்கையும் பிரித்த பின் இவ் மாகாண சபைத் தேர்தலில் ஏன் சிறுபான்மை இன அரசியல்வாதிகள் பங்கு பற்ற வேண்டும்? மத்திய அரசினுடைய இரும்பு பிடிக்குள் இருந்து மாகாணசபையூடாக எதனைச் சாதிக்க முடியும்? என்பன போன்ற நியாயமான கேள்விகள் எழுகிறன.

ஆனால் நடைமுறையைப் பார்ப்போமானால் ஆறாவது  திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டு அதாவது இலங்கை நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம், ஒருமைப்பாடு, ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு சத்தியப் பிரமாம் செய்து இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு தமிழ் அரசியல் தலமைகள், அரசியல்வாதிகள் முன்வைக்கிற  அதே காரணங்களை இந்த மாகாண சபைத் தேர்தலில் நிற்பதற்கான காரணங்களாக சிறுபான்மை இன அரசியல்வாதிகள் வைக்கிறார்கள் எனக் கருதிக்கொள்வோம்.

இந்த நிலையில் இந்தத் தேர்தலால் ஏற்படக்கூடிய ஒரே ஒரு நன்மை என்னவெனில் அதாவது இந்த மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் பலத்தை வெளிக்காட்ட முடியும் என்பதே.

அந்த வகையில் சிறுபான்மையினங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்தத் தேர்தலை எதிர்கொண்டு கிழக்கிலும் பின்னர் வடக்கிலும் பிற்போக்கான சிங்களப் பெருந்தேசியவாதத்தின் சட்டரீதியான ஆளுமைக்குச் சவால்விடுக்க முனையவேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தவிடத்தில் சலுகை அரசியல் பற்றியும் ஒரு முறை திரும்பிப்பார்ப்போம்.

காலாதிகாலமாக இலங்கையின் ஆளும் பேரினவாதக் கட்சிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்துகொண்டு (இப்போ சில தமிழ் அரசில்வாதிகளும் இதற்கு விலக்கல்ல) பெற்ற சலுகைகள் யாருக்குப்பலன் தருபவையாக இருந்தன என்ற கேள்வி எழுகிறது.

அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் அரசியற் செயற்பாட்டாளாரனான திரு பௌசர் பின்வருமாறு கூறுகிறார்:*3

இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், முஸ்லிம் மக்களின் தேசிய இன உரிமைகளையோ, அவர்களுக்கான சமத்துவ இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்பது பகிரங்கமாக தெரிந்த உண்மைதான். ஒரு படி மேலாக இந்த அரசாங்கத்தினுள் அமைச்சர்களாக ,பிரதி அமைச்சர்களாக பதவி வகிக்கின்ற முஸ்லிம் மக்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரிந்ததே. ஆனாலும் ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் இன்று உள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள பதினாறு முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்நான்கு பேர், ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களே. அரசாங்கத்திற்கு யார் கூடிய விசுவாசத்தினை காட்டமுடியும் என்ற சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருப் பவர்களாகவும், யாரை கவிழ்த்து முழு அதிகாரத்தினை பெறலாம் என சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய காய்நகர்த்தலில் கைதேர்ந்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல*3

இன்னுமொரு அரசியற் செயற்பாட்டாளாரான    லத்தீப் பாரூக் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

“'தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கம் அளித்த சலுகைகளின் பின்னாற் சென்றனர்.  பலவீனமான எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை எனவும் அரசுடன் சேர்ந்து எமது சமூகத்திற்கு நல்லது செய்வோம் எனவும் கூறப்பட்டது.

இப்போது அவர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள்.  எனவே முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கவனம் எடுப்பார்கள் என முஸ்லீம்கள் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்களே தவிர சமூகத்திற்கு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

முஸ்லீம் அரசியல்வாதிகள்அதிகாரத்திற்கும் தங்களது நலன்களுக்குமாக முஸ்லீம் மக்களைப் பயன்படுத்தியதன் பின் கைவிட்டுவிட்டதாகவும் முஸ்லீம் மக்களை உண்மையிலும் பிரதிநிதிப் படுத்துபவர்களாக இருக்கவில்லை எனவும் முஸ்லீம் சமூகத்துள் எண்ணம் வளர்ந்து வருகிறது.

உதாரணமாக அண்மையில் வினைத்திறனற்றுத் தொழிற்படும் நிறுவனங்களையும் அவற்றின் சொத்துக்களையும் சுவீகரிக்கும் அரசின் சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது நிசப்தமே நிலவியது.   முஸ்லீம் அரசியல்வாதிகள் வாயே திறக்கவில்லை! 

தீவிர சிங்களத்தேசியவாதிகளான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் கூட தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.*4

உங்கள் கட்சியில் இருந்தவரும் மக்றூம் அஸ்ரப் அவர்களின் உறவினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுர்க்கனி 1990 களில் முதலாவது முஸ்லீம் காங்கிரஸ் மகாநாட்டிற்கா மலரை என்னிடம் அச்சிட வந்தபோது (அப்பொழுது நான் அச்சுக்கூட உரிமையாளராகவும் இருந்தேன்) நிகழ்ந்த உரையாடலின் போது பின்வருமாறு கூறி வருத்தப்பட்டார்.

 “குருபரன் எங்களுடைய அரசியல் என்பது நான் உட்பட சலுகைகளை நோக்கியதாக மாறிவருகிறது. தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்ட அரசியல் போலல்லாது இப்போ இந்தப் பேரினவாத அரசாங்கங்களுடன் சலுகைகளுக்கான பேரம் பேசும் அரசியலாக முஸ்லீம் அரசியல் இழுபட்டுச் செல்கிறது

இவற்றில் இருந்து மிகவும் தெளிவாகத் தெரிவது என்னவெனில் சலுகை அரசியலால் சாதாரணமான முஸ்லீம் மக்கள் எந்த நன்மையையும் அடையவில்லை என்பதுடன் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகும். அது மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தின் உண்மையான அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் சனநாயகவாதிகளும் இந்த அரசியல் நிலைபாட்டுடன் உடன்பாடு கொள்ளவில்லை என்பதும் வெளிப்படுகிறது. ஒருசிலரின் நலன்களுக்கு மட்டும் பிரயோசனப்படும் இந்தச்சலுகை அரசியலை என்றேன்றும் கட்டிகொண்டிருப்பதற்காகத்தான்

இங்கே இன்னொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது “சட்டத்தரணியான மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் அவரிக் கீழ் நான் நீதி அமைச்சராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்*5என நீங்கள் அன்று கூறியிருந்தீர்கள்

உள்நாட்டிற்  சிங்களப் புத்திஜீவிகளில் இருந்து சிங்கள மனித உரிமைவாதிகள் வரையும் சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகளில் இருந்தும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் வரையும் மகிந்த ராஜபக்ஸமீதும் அவரது சகோதரர்கள் மீதும் இலங்கைப்படைகள் மீதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் பற்றிக் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருந்த போது சிறந்த சட்டத்தரணியும் சட்ட வல்லுரும், அரசியற் புத்திஜீவியாகவும் மதிக்கப்படும் நீங்கள் மகிந்தவின் ஆட்சியில் அவரின் கீழ் நீதி அமைச்சராக இருப்பதற்கு பாக்கியம் செய்திருப்பதாக தெரிவித்தமையை உங்களின் ஆன்மாவின் மரணமென்று சொல்ல வேண்டாமென்று சொல்வீர்களோ?

சரி இவற்றையெல்லாம் விட்டு விடுங்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மைக்கட்சி ஒன்றுடன் ஏன் உங்களால் கூட்டுச்சேர முடியாது அதனைத்தடுத்து நிற்பது இந்தப்பாழாய்ப்போன சலுகை அரசியல்தானே?

சிறுபான்மை இனங்களுடன் கூட்டுச்சேர்வதால் நிட்சயமாக அரசியல் உரிமைகளுக்கு பலமாக கோரிக்கை வைக்க முடியும் ஆனால் எந்தச் சலுகைகளயும் பெறமுடியாது.

மற்றப்படித் தமிழ்த்தலைவர்களும் விடுதலைப்புலிகளும் இழைத்த வரலாற்றுத் தவறுகளாற்தான் அவர்களுடன் கூட்டுச்சேர முடியாதுள்ளது என நீங்கள் கூறுவது அர்த்தமற்றது என்றே கருதுகிறேன். ஏனேனில் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து முஸ்ஸிம் மக்களுக்கு மோசமான கொடுமைகளைச் செய்த சிங்கள அரசுகளுக்கு முஸ்லீம் தலைமைகள் பரிபூரண ஆதரவை அளித்தே வந்துள்ளன.

இவற்றுக்கான உதாரணங்களாகச் சிலவற்றைக் கீழே தருவதற்கு முன் அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான்ஜான் கனடாவில் ஆற்றிய உரை ஒன்றையும் இங்கு தருகிறேன்.

 

"தம்புள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்பது ஒன்றும் முதன்முதலாக நடப்பது அல்ல. புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமது கவனங்களை யுத்தத்தை ஆதரிப்பதில் தீவிரமாக குவித்திருந்த சிங்கள தேசியவாதிகள், யுத்தம் முடிந்த உடனேயே தமக்கான புதிய இலக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றின்மீது தமது தாக்குதல்களை தொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். மலையக மக்களது இந்து ஆலயங்கள் மணி அடிப்பது தொடர்பான பிரச்சனையை கிளப்பியதிலிருந்து அடுத்து அடுத்து வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்சனையை கிளப்பி வந்தவர்களின் அண்மைக்கால இலக்குத்தான் தம்புள்ள பள்ளிவாசலாகும். இந்த போக்கு இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் சிங்கள தேசியவாதத்தின் இருப்பானது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலமாகவே தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். சிங்கள அரசியல் தலைமையும், சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய படையினரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாதவர்களான இருக்கும் வரையில் இந்த சிங்கள தேசியவாத சக்திகள் முழுச்சுதந்திரமாக செயற்படமுடியும்: அவ்வாறுதான் செயற்படும். ஏனெனில் சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள சமூகத்தின் மீது தமது சித்தாந்த மேலாண்மையை திடமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் வரையில், இலங்கை சமூக உருவாக்கத்தின் திசைவழியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக இவர்களே திகழப்போகிறார்கள்" *6      அந்த வகையில் 

 

இலங்கையின் வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்  1915ல் முதன்முதலாகக் கண்டியிற் மிகப்பெரிய கலவரம் முஸ்லீம்களுக்கு எதிராகப் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டது. அது பின் நாடு முழுவதுமாக பரவியது. இதில் பெருமளவு உயிரழிவுகளும் சொத்து அழிவுகளும் ஏற்பட்ட.

முஸ்லீம்களுக்கு எதிரான இரண்டாவது மிகப் பெரிய இனக் கலவரம் புத்தளத்தில் 1976 ஆம் ஆண்டு இடம்பெற்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்தக் கலவரத்தில் புத்தளமும் அதனை அண்மித்த கிராமங்களும் முஸ்லீம் பள்ளிவாசல்களும் கடுமையாக தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் பல முஸ்லீம்கள் கொல்லவும்பட்டனர்.

1982ல் ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் காலியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதன் பின்னர் தொடர்ச்சியாக கண்டி மாவட்டம் மாவனல்லவில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இனக் கலவரத்திற் கோடிக்கணக்கா சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இவை தவிரவும் களுத்துறை, பேருவில பகுதிகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்ததனை வரலாறு மறக்காது.

சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இறுதித் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்னவில் முஸ்லீம் இளைஞர்கள் துடி துடிக்கக் கொல்லப்பட்டார்கள். (இது உங்களது சொந்த மாவட்டடம்.) அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான  அனுருத்த ரத்வத்தை முஸ்லீம் காங்கிரசிற்கும் உங்களுக்கும்  சவால் விடுத்து தனது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் மூலம் இந்த முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று முடித்தார். அவரை இந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடைசிவரை பாதுகாத்தது.

இவைதவிர இன்றுவரையும் முஸ்லீம்மக்கள் அனுபவித்து வரும் சில முக்கியமான பிரச்சனைகளையும் பார்ப்போம்

அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி பிரதேசத்தைச் சூழ உள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுடைய நிலங்கள் சிங்களத் தரப்பால் அபகரிப்பப்பட்டு வருகின்றன.

அந்நிலங்கள் தொடர்பாக முஸ்லிம்கள் நீதிமன்றுக்குச் சென்று நீதிமன்றம் அவை முஸ்லிம்களுடைய நிலங்கள் தான் என்று தீர்ப்புரைத்த பின்னரும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் அந்நிலங்கள் முஸ்லிம்களிடம் திருப்பி வழங்கப்படவில்லை (இது உங்களுக்கும் ஏனைய முஸ்லீம் தலைமைகளுக்கும் தெரியும்.)

தம்புல்லவில் அரை நூற்றாண்டாக முஸ்லீம்களால் பேணப்பட்டு வணங்கப்பட்டு வந்த பள்ளிவாசல் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும் போதே  மிகப் பிரபலமான பௌத்த பிக்குவொன்றின் தலைமையில் வெளிப்படையாகவே அடித்து நொருக்கப்பட்டது மட்டுமன்றி இது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக நீறுபூத்த நெருப்பாக உள்ளது( நேற்று இது பற்றி அஸ்கிரிய பீடாதிபதி மீண்டும் வெளியிட்டுள்ள கருத்தை இணைப்பில் பார்க்க*7)

மேலும் தெகிவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்குத் தொடர்ச்சியாக பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பின்பும்  தனிப்பட்ட சலுகைகளுக்காக அவர்களுடன் கை கோர்க்க முடியுமென்றால்…. இன்றைக்கு ஒட்டுமொத்தமான சிறுபான்மை நலன்களுக்காக, நேசக்கரம் நீட்டும் தமிழ்பேசும் மக்களுடன்  ஏன் உங்களாற் கரம் கோர்க்க முடியாது..

தமிழ் சமூகத்திற்கு தனது நல்லெண்ணத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிக்காட்ட முஸ்லீம் தலைவர்களான நீங்கள் ஏன் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.

தமிழ்த் தலைவர்கள் இந்த நிலையில் தங்களது ஆதிக்க உணர்வையும் பிரபுத்துவ உணர்வையும் விட்டு சனநாய உணர்வுடன் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகள் என்ற பெரும் தளத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் தமிழ்மக்களுக்கும் உள்ளது. 

இதேவேளை 1980களின் பின் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசிய ஆயுத போராட்டம் முஸ்லீம்கள் தொடர்பில் சரியான புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை என்பதனை அரசியல்அறிவு படைத்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மதிக்கிற தமிழ்த்தரப்புகள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. 1990களின் நடுப்பகுதியில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதனைத் தேசியத் தற்கொலை எனத் தமிழ்த் தரப்பினர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தாம் முஸ்லீம்களை வெளியேற்றியது வேண்டத்தகாத கசப்பான சம்பவம் என புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் உங்களிம் நேரடியாக மன்னிப்புக் கேட்டிருந்தார்கள். தவிரவும் புலிகளுக்கு முன்பிருந்த இயக்கங்களால் கிழக்கில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் காலம் தாழ்த்தினாலும் அவர்கள் இப்போ தமதுசுயவிமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் முஸ்லீம் ஊர்காவற் படையினராலும், கிழக்கில் அரச படைகளுடன் இயங்கிய முஸ்லீம் ஆயுததாரிகளாலும் மற்றும் புலனாய்வாளர்களால் கிழக்கில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டமை குறித்தோ அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தோ எனது அறிவுக்கு எட்டியவகையில் முஸ்லீம் தலமைகளோ, புத்திஜீவிகளோ, உலாமாக்கள் சபைகளோ, பள்ளிவாயில்களோ வருத்தம் தெரிவித்ததாகப் பதிவுகள் இல்லை. இதனைக் கூறுவதன் நோக்கம் பழையவைகளைக் கிளறி பிரிவினையை வளர்ப்பதல்ல மாறாக ஒரு நடுநிலையான பத்திரிகையாளன் என்ற வகையில் நிகழ்வுகளை நிதானமாக எடைபோடவேண்டியே.

ஒரு நுற்றாண்டு காலமாக முஸ்லீம்களைக் கிள்ளுக் கீரையாகப் பயன்படுத்தும் பிற்போக்கான சிங்களப் பெருந்தேசியவாத அரசாங்கங்களோடு, முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து விதமான அராஜகங்களுக்கும் இன்றுவரையும் ஒரு வருத்தத்தையேனும் தெரிவிக்காத அரசாங்கங்களோடு கூட்டுச்சேர முடியுமென்றால்… நேசக்கரம் நீட்டும் தமிழர்களோடு ஏன் முடியாது..?

புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.

புலிகள் முஸ்லீம்களை விரட்டிய கதையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சொல்லி அரசியல் நடத்தப் போகிறீர்கள்?

பசீர் சேகுதாவுத் அவர்களே கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்பு லண்டனில் இருந்து உங்களோடு ஒரு முறை தொலைபேசியில் கதைக்கும் போது நீங்கள் கூறினீர்கள்

இனிமேல் நாம் சிங்களத் தலைமைகள் முஸ்லீம்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதனை கேட்பதனை விட தமிழ்த் தேசியம் முஸ்லீம் தேசியத்திற்கு என்ன செய்யப் போகிறது எனக் கேட்பது தான் முக்கியமானது எனச் சொன்னீர்கள்.

ஆம் இப்போ தமிழ்த்தேசியம் உங்களைச் சகோதர இனமாக மதித்து ஒட்டு மொத்தமான சிறுபான்மை இனங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு முதற்படியைப் போடுவதற்காக நேசக்கரம் நீட்டுகிறது…

சரி இந்தக்கரங்களைப்பற்ற விருப்பமில்லை என்று வையுங்கள் ஆனால் உங்களை ஒடுக்குகிறவனின் கரங்களைப் பற்றாமலாவது விடமுடியுமல்லவா?

அதன் மூலம் தமிழ்த் தேசியத்தாலும் சிங்களத் தேசியத்தாலும் ஒடுக்கப்படுகிற முஸ்ஸீம் சமூகம் மறந்து போயும் ஒடுக்குபவனுக்குப் துணைபோகவில்லை என்று அழியாப்புகழ் தரும் வரலாறு உங்களுக்கு!!!

இந்த வரலாற்றுத் தடத்தில் உங்கள் கையில் உள்ள பேனா முஸ்லீம் மக்களின் (ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகத்தின்) உரிமைகள் தான் முக்கியம் என்று எழுதப் போகிறதா? அல்லது நூற்றாண்டுகள் கடந்தாலும் எமது அரசியற் லைமைகளின் தனிப்பட்ட  சலுகைகள் தான் எமக்கு முக்கியம் என எழுதப் போகிறதா என்பதனை நீங்களே தீர்மானியுங்கள்.

 

*1தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை - ஹசன் அலி

23 ஜூலை 12 11:15 (GMT)

* 2 - ஆளும் கட்சியுடன் எவ்வித முரண்பாடும் கிடையாது - ஹக்கீம்

மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல -

 

 

 

 

 

அனுப்புக Home, Articles, Muslims
அபிப்பிராயங்கள்
(14) அபிப்பிராயங்கள்
24-07-2012, 01:25
 - Posted by Anonymous
அற்புதமான கருத்துகள் ...ஆழமாக சிந்திந்த்து எழுதப்பட்ட எல்லோரும் ஒரு தடவை வாசிக்க வேண்டிய விடயம் ..எபோதும் சொலொமன் போன்றவர்களுக்கு பதிவு எழுதும் போது நான் குறிபிட்ட சில உண்மையான நேர்மையான என் ஆதங்கங்கள்(முஸ்லிம் குழுக்கள் மேற்கொண்ட்ட கொலைகள் தொடர்பிலான) சிலவும் உங்கள் மடலில் இணைக்க பட்டிருப்பது மகிழ்ச்சி ...சொலமன் போன்ற சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள் இதை வாசிப்பது மிக அவசியம் ..சலுகை அரசியல் மிக அடிமட்ட மூன்றாம் உலக அரசியலின் கண்டு பிடிப்பு ..வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்களில் தங்கி இருக்கும் மக்கள் கூட்டம் அதிகம் ..இந்த வசதி குறைந்த மக்களை அடிப்படையாக கொண்டு அரச, அரச சார்பற்ற நிகழ்வுகளில் கட்டாயபடுத்தி கலந்து கொண்டு நிவாரணம் வழங்குவது ,திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என இவர்கள் பிரசாரம் செய்வதுடன் ..அதனை அபிவிருத்தி என தவறாக விளக்கம் வேற செய்கிறார்கள் ..இது எங்கள் மக்களின் சாபகேடு ....டக்லஸ் ,பிள்ளையான் போன்றவர்களும் இதில் அடக்கம்
நன்றி அண்ணா.....
24-07-2012, 02:31
 - Posted by Solomon
குருபரன், அவர்களுக்கு உங்களுக்கு இருக்கும் அரசியல் அனுபவம் எனக்கு இல்லாவிடாலும் என் மனதில் படைதனை கூறுகிறேன். நீங்கள் கூறுவதுபோல் தமிழ் அரசியல் வாதிகள் இந்த தேறுதல் காலங்களில் மட்டும் கூறும் தற்காலிக கை நீட்டலே இது என்று எண்ணுகிறேன். வடக்கில் இருந்து துரத்தப்பட்டு மீளவும் குடியேற சென்ற ஆயரம் ஆயரம் முஸ்லிம் அகதிகளுக்கு இந்த அரசியல் வாதிகள் செய்த உதவிகள் தான் என்ன ? இவர்கள் தடையாக இருக்கின்ற செய்திகள் தன அதிகம். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் கூட "முஸ்லிம்கள் தங்களுடைய பிரச்சனைகளை அவர்களாக அரசுடன் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்று ஒரே வார்த்தையில் கூறி பிரித்து வைத்த பேச்சுக்களை எப்படி மறப்பது ? எந்த வகையில் இவர்களை நம்பலாம் என்று கூறுங்கள். தமிழ் பேசும் இனம் ஒன்றாக சகோதரத்துவத்துடன் குரல் கொடுக்கும் காலம் வரத்தான் வேண்டும். ஆனால் அது ஒரு பக்கத்து பிரதேச தமிழ் பேசும் இனத்தின் ஆளுமைக்கு உட்பட்டதாக வர கூடாது . கடந்த வரலாறுகள் எந்த நன்மையையும் காட்டவில்லை.
முஸ்லிம்கள் தலைவர்கள் எல்லோரும் தனிப்பட்ட சலுகை அரசியல் மட்டுமே செய்தார்கள் என்று ஒரே அடியாக மட்டமாக கூறிவிடாதீகள். கிழக்கில் வாகனத்தில் பயணம் செய்யும் பொது மாறி மாறி வரும் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் கிராமங்களையும் நகரங்களையும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். எப்படி தெரியுமா ? கல் மதி சுவர் , மாடி வீடுகள், பெரிய கடை தொகுதி, நல்லா பாட சாலைகள், அழகான வீதி அம்மைப்புகள் இருந்தால் அது முஸ்லிம்கள் வாழும் இடம். இந்த செயப்பும் வளர்ச்சியும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரசுடன் சேர்ந்த நடவடிகல்களால் ஆக்க முடிந்ததையும் அறிவீர்கள். அத்துடன் சேகுதாவுத் அரசுடன் சேர்ந்து அக்கரைபற்றுக்கு செய்திருக்கும் சேவைகள் எண்ணில் அடங்காதவை. (ரப் ஹக்கேம் நீங்கள் கூறும் தனிப்பட்ட அரசியல் சலுகைகளுக்காக வாழும் ஐஸ் க்ரீம் வியாபாரியாக இருக்கலாம். ஹக்கீமால் ஒரு செங்கல் கூட கிழக்கில் நாடப்படவில்லை என்பது உண்மை. முஸ்ம்களுக்கு நடந்த நாசம் இவரின் கையில் முஸ்லிம் காங்கிரசு போய் இருப்பது.). காத்தான்குடி, சம்மாந்துறை , கல்முனை. அக்கரைப்பட்ட்று என்று முஸ்லிம் எம் பி மார் இருக்கும் பகுதிகளின் அபிவிருத்தி எதிக் கட்சியில் இருந்த நிந்தவூர் எம்பி மாருக்கு கிடைக்க வில்லை என்பதையும் சுட்டி காட்ட விருபுகிறேன்.
தமிழ் பேசும் இனம் ஒரு அரசியல் கூட்டணியாக மாற முதலில் தமிழ் தலைவர்கள் தங்கள் நல் எண்ணத்தை வார்த்தை ஜாலங்களில் காட்டுவதை விட மீண்டும் திரும்பி யாழ், மானார் ,கிளிநொச்சி ,வன்னி வந்திருக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதன் மூலமாவது கட்டட்டும்.
சம்பந்தரை நம்பலாம். பழம் பெரும் மூத்தவர். மற்ற இயக்கங்களில் இருந்து இப்போது அரசியல் பேசுபவர்கள் மீது கவனமாகவே இருக்கவேண்டி இருக்கும .

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. நீங்கள் எழுதியது போல் தமிழ் பேசும் இனம் தங்களை மீள் ஆய்வு செய்யும் காலம் நெருங்கி விட்டது.
24-07-2012, 10:02
 - Posted by AVATHAANY
இந்க் கட்டுரை முஸ்லீம் தலைமைகளின் கண்களைத் திறக்காவிடில் அவர்கள் தூங்குபவர்கள் நடிப்பவர்கள் என்றே சொல்ல முடியும்.

திரு.சொலமனின் கருத்துப் பகிர்வில் அவரே முஸ்லீம்களுக்கு தேவையானது உரிமைகள் அல்ல சலுகைகள்தான் என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.புலிகள் விட்ட தவறுகளையோ தமிழ்த்தலைமைகள் விட்ட தவறுகளையோ தமிழர்கள் மனச்சாட்சியின்படி ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுமிருக்கின்றார்கள்.

இதனை முஸ்லீம் தலைமைகள் உணரவில்லையென்று சொல்ல முடியாது.ஆனால் அவர்கள் உரிமைசார்ந்த அரசியல் நீரோட்டத்திற்குள் வருவதை சலுகைசார்ந்த அரசியல் விடவில்லை.

மஸ்லீம்களின் பலவீனம் என்ன என்பதை இலங்கை அரசு தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றது.அதற்கமையவே அவர்கள் காயை நகர்த்துகின்றார்கள்.

கிழக்கு மகாகாணத் தேர்தல் சம்பந்தமாக நேரத்துக்கொரு முரண்பாடான அறிக்கைகளை விடுகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என இன்னொரு செய்தியில் நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அதற்குப் பல எதிர்க்கருத்துக்கள் வரும் என எதிர்பார்த்தேன் வரவேயில்லை. வந்தால் அதற்கம் பதில் சொல்லத் தயாராகவே இருந்தேன். இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலகள் அமைப்பு கலைக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

அந்தக கருத்தோடு எனது இந்தக் கருத்து தொடர்புடையது.தடைகளாகக் கருதப்படும் இடறப்படும் எல்லாத்தடைகளும் நீக்கப்பட்டுப் பிசிறில்லாத அரசியல்பாதை செப்பனிட்ட பாதையாக உருவாக்கப்படல் வேண்டும்.தமிழ் மொழி பேசும் மக்கள் என்பதற்குள் முஸ்லீம் மக்கள் இணைய வேண்டும். மதத்தை ஒரு பக்கம் தூக்கி வைத்தவிட்டு இணைவதே நல்லது.
24-07-2012, 11:34
 - Posted by Siva.
மேற்குறித்த கட்டுரை பல தரப்பினருக்கும், தம்மை/ தம் செயற்பாடுகளை, எடை போடத் தூண்டுமென்பதில் ஐயமில்லை! ஆனால் கள நிலைப்படி, நடவடிக்கைகளில் பெரிதாக எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துமென நம்ப முடியாது! இன்று தனி மனிதர்களாக இவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சிறுபான்மை இனத்தினரின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிப்பதன் மூலம், முழு சிறுபான்மையினரும் அனுபவிக்கவல்ல, ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில், சந்தேகமில்லை!

அடிமைத் தளையில் இருந்து விடுபடாத, சிறுபான்மை இனத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சில அரசியல்வாதிகள், தம் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, தம் செயற்பாடுகளை நியாயப்படுத்த, நிலைமைக்கு ஏற்ப, முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவது, கவலைக்குரியது. தமது கருத்துக்கள் ஏற்புடையனவல்ல, என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள்! இருந்தாலும் சூழ்நிலைக் கைதிகளான அவர்களுக்கு, தாம் அனுபவிக்கும் பகசுகளை/ சலுகைகளை, தாம் சார்ந்த சமூகத்துக்காக விட்டுக் கொடுக்கும் தாராள மனப்பாங்கு, இல்லாது போவது, துர்லபமே! தேர்தல் காலத்தில், ஒரு சமூகம்/ ஒரு குடிமகன், தன் வாக்கைத் தன் விருப்பப்படி பயன்படுத்துகிறான்! அதுதான் ஜனநாயகம்! ஆனால், கண்ணியமான ஒரு வேட்பாளர், தேர்தலில் வென்றபின், இன்ன சமூகம்/ இந்தப் பிரதேச மக்கள், தன்னை ஆதரிக்கவில்லை, என்று கறுவிக்கொண்டு, குறிப்பிட்ட அப் பிரதேச அபிவிருத்திகளைப் புறக்கணிப்பது, நியாயமேயல்ல! இங்கு ஒரு வாசகர் குறிப்பிடுவது போல், கிழக்கில் இஸ்லாமியர் செறிந்து வாழும் பிரதேசம் செழிப்பாகவும், தமிழர் செறிந்து வாழும் பிரதேசம் அபிவிருத்திகளின்றி காய்ந்து கிடக்கின்றன என்று கூறுவதும், பெருமைக்குரிய விடயமேயல்ல! வெட்கப்படவேண்டிய குறுகிய மன உணர்வுகளை, பெருமையாகக் கூறுவது, அவர் தம் சிறுமையையே பறைசாற்றுவதாகின்றது! தேர்தலில் வெற்றி பெற்றவர், அப் பிரதேச மக்கள் பிரதிநிதி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்! பிரதேச அபிவிருத்திகளில் பேதம் காண்பது, கண்ணியமேயல்ல! கடந்த காலக் கசப்பான நினைவுகளைச் சுட்டிக் காட்டிச் சன்னதம் ஆடுவது, எம் பிரதேசங்களை எதிரிகளின் கைகளில் தாரை வார்ப்பதற்கு ஒப்பானது, என்பதை மறக்க வேண்டாம்! அரசின் சதித் திட்டமும் அதுதான், என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்! இஸ்லாமிய வாக்குகள் பலதரப்பட்ட கட்சிகளினாலும் சிதறடிக்கப்படுகின்றன! தமிழ் வாக்காளர் நிலையும் அதுவே! போதாததற்கு, தமிழ் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் அச்சுறுத்தி, தேர்தலில் பங்கு பற்றும் உரிமை பறிக்கப்படும் நிலைமையும் காணப்படுகிறது! ஆக, அரசின் அடிவருடிகள் 100 , 150 வாக்குகள் பெற்று, அரச சார்பு மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன! இந்த நிலையை அனுமதிக்கப் போகின்றோமா?, என்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்! மக்கள் பிரதிநிதிகளாகி, பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதை இரண்டாம் பட்சமாக்கி, பிரதேச உரிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் ஒரு தேர்தலாக, இத் தேர்தல் அமையவேண்டும்!
24-07-2012, 12:43
 - Posted by Solomon
தேறுதல் காலங்களில் மட்டும் த்டீர் என்று வரும் ஒற்றுமை உணர்வு , வாக்குறுதிகள், கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நம்பத்தகுந்ததல்ல. யுத்தம் முடிந்து புலிகள் அழிந்து போன பின் முஸ்லிம் காங்கிரசு , TNA ஆகியவை எதிர்கட்சியில் தான் இருந்து ஒன்றாக குரல் கொடுத்தார்கள். ஆனால் அரசுடன் பேச்சுவார்த்தை என்று வந்த பொது TNA தங்கள் மட்டும் தனியே போனதன் காரணம் என்ன ? அதனனையும் பழையது மறப்போம் என்று சொல்லுவதா ?. இந்த யுத்தம் இலாத புலிகளின் ஆக்கிரமிப்பு தங்கள் மேல் இல்லாத அரசியல் விடுதலை கிடைத்த காலத்தில் TNA அரசியல் வாதிகள் முஸ்லிம்களை நோக்கி அல்லது முஸ்லிம்களுக்காக செய்த நன்மைகள் தான் என்ன ? "அதுக்குதான் உங்கள் அரசியல் வாதிகள் இருகிரர்களே " என்று நொண்டி சாட்டு சொல்லாதீர்கள். தங்கள் பிரதேசத்துக்கு திரும்பி வர விரும்பும் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு தமிழ் எம்பிக்கள் நேசக்கரம் நீட்டினார்கள்.? அது என்ன திடீர் என்று இப்போது மட்டும்.?. தங்கள் தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்து கொள்ள மற்றைய சமுதாயத்தை ஒற்றுமையாக இருப்போம் என்று கூறுவது "அரசியல்" தவிர வேறு எதுவும் இல்லை.

//கிழக்கில் இஸ்லாமியர் செறிந்து வாழும் பிரதேசம் செழிப்பாகவும், தமிழர் செறிந்து வாழும் பிரதேசம் அபிவிருத்திகளின்றி காய்ந்து கிடக்கின்றன என்று கூறுவதும், பெருமைக்குரிய விடயமேயல்ல! வெட்கப்படவேண்டிய குறுகிய மன உணர்வுகளை, // நான் கூறியது இஸ்லாமிய அரசியல் வாதிகள் சுயநல அரசியல் மட்டும் நடத்த வில்லை என்று கூறவே அப்படி கூறினேன். சில விடயங்கள் கசப்பாக இருந்தாலும் யதார்த்தம் தவிக்க முடியாது.

எதிர்காலத்தில் தமிழ் அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளே "தமிழர்" ஒற்றுமையை நிர்ணயம் செய்யும். தனியே கிழக்கு தேறுதலில் போட்டி இட முடிவு எடுத்த முஸ்லிம் காங்கிரசு , TNA உடன் சேர்ந்து எதிகட்சியில் போராடும் என்று எதிபார்க்கலாம். சிலவருடங்களுக்கு முன் பல வருடங்களாக ஒன்றாக இருந்தவர்கள் தானே. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
24-07-2012, 13:25
 - Posted by Siva.
ஆக, நில உரிமை, பிரதேச உரிமைகள் பறிபோனாலும் பரவாயில்லை! இஸ்லாமிய- தமிழர் ஒற்றுமை என்றைக்குமே கூடாது, என்று சொல்லும் சொலமனின் கருத்தை, அவரைத் தவிர, வேறு எந்தச் சாதாரண இஸ்லாமியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது, சத்தியமான உண்மையாகும்! சலுகைகளை எவரும் விரும்பி ஏற்பது யதார்த்தமே! ஆனால், உரிமைகள் என்று வரும் போது, எவருமே அவற்றை இழக்கத் தயாராக மாட்டார்கள்! ( விதி விலக்கு சொலமனைத் தவிர!) சிவா என்றால் தமிழ்ச் சமூகமோ அன்றி சொலமன் என்றால் இஸ்லாமியச் சமூகமோ, அல்ல! மாரித் தவளை! சாகும் வரை கத்தட்டும்!!
24-07-2012, 14:09
 - Posted by Solomon
ஆக உங்களுக்கு நான் என்ன சொல்லுகிறேன் என்றே விளங்கவில்லை. இஸ்லாமிய- தமிழர் ஒற்றுமை என்றைக்குமே கூடாது, என்று கூறவே இல்லை . // புலிகள் அழிந்து போன பின் முஸ்லிம் காங்கிரசு , TNA ஆகியவை எதிர்கட்சியில் தான் இருந்து ஒன்றாக குரல் கொடுத்தார்கள் // // சிலவருடங்களுக்கு முன் பல வருடங்களாக ஒன்றாக இருந்தவர்கள் தானே. அரசியலில் எதுவும் நடக்கலாம். // என்று கூறியவைகளை மீதும் உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகின்றேன். இன ஒற்றுமைக்கு தமிழ் அரசியல் வாதிகள் செய்த முன் எடுப்புகள் என்ன ?. இருபத்து ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சென்ற முஸ்லிம் மக்களை கேளுங்கள், எப்படி இவர்கள் துவேசம் காட்டுகிறார்கள் என்று புரியும். சுயநலத்துக்காக , தங்கள் இருக்கையை உலகுக்கு காட்ட முஸ்லிம்களை "பாவிக்க" இவர்கள் முய்ட்சிகிறர்களோ என்றுதான் பாமர முஸ்லிம்களும் சந்தேக படுகிறார்கள். நியாயந்தானே ? இவர்கள் தங்கள் வசதிக்கு தேவைப்படும் பொது கூப்பிடும் பொது எல்லாம் "ஆமாம் சாமி" என்று தலையாடினாலத்தான் ஒற்றுமை என்று கூறுவது சரியாக படவில்லை.

அரசியலில் எதுவும் நடக்கலாம் !.
24-07-2012, 16:28
 - Posted by Siva.
சொலமனின் வாதப்படி, இஸ்லாமியர் தமிழருடன் இணையவேண்டும் என்ற கோரிக்கை, முற்று முழுதாகத் தமிழர் நலன் சார்ந்ததே, என்பதுபோல் இருக்கிறது! மேற் குறித்த கட்டுரையில், அண்மைக் காலங்களில், மாறி மாறி வந்த சிங்கள அரசுகள், இஸ்லாமியருக் கெதிராகச் செய்த அட்டூழியங்களை விலாவாரியாகச் சொல்கிறது. இருந்தும், சிங்கள அரசுகள் தங்கள் வசதிக் கேற்பக் கூப்பிடும்போது எல்லாம் இஸ்லாமியத் தலைவர்கள்,'ஆமாம் சாமி', என்று தலையை ஆட்டி, அரசில் அங்கம் வகிக்கவில்லையா? அங்கு மட்டும், இது எல்லாம் சகஜமோ? நில உரிமையைக் காக்க கை கொடுங்கள், என்று TNA , கேட்டால் மட்டும் அது துரோகமாகப் படுகிறது! புலித் துவேஷி சொலமனால், புலியை உச்சரிக்காமல், ஒரு விமர்சனத்தைத் தானும் செய்ய முடிகின்றதா? முதலில் பொது எதிரியை விரட்டுவது பற்றிச் சிந்திப்பதை விடுத்து,- இவர் பாஷையில், புலிகள் அழிந்து போனபின்- , அவர்கள் கதை இங்கு எதற்கு? இஸ்லாமிய ஊடகர், திரு சலீம், கிழக்கு இஸ்லாமியரின் உண்மையான மன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றார்! அவர் கருத்துப்படி,கிழக்கு இஸ்லாமியர், சலுகைகள் பெறுவதை விட நில மற்றும் மொழி உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்குவது புலனாகிறது! இந்த மாரித் தவளை கத்திச் சாவதால், யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை!
24-07-2012, 20:23
 - Posted by Anonymous
சொலமன் போன்றவர்கள் விதண்டவாதம் பேசுவதிலேயே காலம் செலுத்துபவர்கள் ..1980/1990 கால பகுதியில் முஸ்லிம் குழுக்கள் சின்ஹல ஆர்சொடு சேர்ந்து செய்த அட்டுழியங்கள் ,அதற்க்கு பதிலாக தமிழர் தரப்பு மேற்கொண்ட்ட தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் உறவை பாதித்து இருகின்றன .இங்கே காலவோட்டத்தில் தமிழர் தரப்பு புலிகள் உட்பட முஸ்லிம் இனத்தவர்களுக்கு தவறுகளை திருத்தி வெளிப்படையான மன்னிப்பை கோரி போதிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் /வழங்க தயாரக இருக்கிறார்கள் (இதற்கு காரணமான முஸ்லிம் அரசியல் .ஆயுத வியாபாரிகள் இது வரை எதுவும் சொல்லவில்லை ....சொலமன் கூட வாய் திறக்க வில்லை )..தமிழர் தரப்பில் பரளமன்ர உறுப்பினர் பதவி கூட முஸ்லிம் இனம் சார்ந்தவர்களுக்கு வழங்க பட்டது ...
...மீள் குடியேற்றம் ,உட்பட்ட விடயங்களில் போதிய ஆதரவை வழங்கினார்கள் ....பரளமன்ரத்தில் இன்று வரை எந்த கூடமைப்பு உருபினர்களும் முஸ்லிம் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை ..சமாதான காலத்தில் கிழங்கின் காணி பிரச்சனை உட்பட்ட பல விடய்னகளில் புலிகள் தரப்பு போதிய ஒத்துழைப்பு வழங்கிய விடயங்களை முஸ்லிம் கட்சிகளே ஒத்து கொண்டு இருகின்றன ...சலுகை முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ததாக சொல்லுவது பெரிதும் கற்பனை .....மிக சில விடயங்களில் இவர்களின் தாக்கங்கள் இருந்தாலும் பெரிய அளவில் இருக்க வில்லை ...தேசிய ரீதியான அரச அரச சார்பற்ற திட்டங்களில் தமிழ் பகுதிகள் புறகணிக்க பட்ட அதே நேரம் முஸ்லிம் பகுதிகள் மிக குறுகிய அடிப்படையில் செர்கபட்டன .....அவர்ர்ரை இந்த சலுகை அரசியல் வாதிகள் தங்கள் சாதனையாக குறித்து கொண்டனர் ..இங்கே ஆரம்பிக்கபட்ட பலகலை கழகம் ,துறை முகம் தவிர்ந்த வேறு எதாவது நல்ல திட்டங்கள் இருகிறதா ????/..இது கூட முழுமை பெற சின்ஹல அரசியல் வாதிகள் அனுமதிக்க வில்லை ..இந்த காலபகுதியில் எந்த வொரு விடமைப்பு திட்டங்கள் ,கைத்தொழில் வாய்புகள் ,விசேட வேலை வாய்புகள் கூட பெற்று கொடுக்க பட வில்லை ....குறைந்தது ஆசிரியர் இடம் மாற்றம், முஸ்லிம் அரச அதிபர் ,அரச நிர்வாக நியமனங்கள் ,மத வழிபட்டு சுதந்திரம் ,காணி அபகரிப்பு ,சுனாமி விடமைப்பு திட்டம் போன்ற எதிலும் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் மக்களுக்கு நன்மை பெற்று தரவில்லை ..
மாறாக சின்ஹல அரசோடு சேர்ந்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரன அவசரகால திட்டங்களை ஆதரிப்பது உட்பட்ட பதினெட்டம் திருத்தம் உட்பட பல விடயங்களில் இணைந்து தங்கள் சுய நன்மையை பெற்று இருக்கிறார்கள் ..சொலமன் போன்றோர் இதற்கு என்ன சொல்ல போகின்றனர்....
ஆமியோடு சேர்ந்து வாடா கிழக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகள் ,முதலளில்கள் காணி பிடித்தல் ,அடாவடியாக வியாபார உரிமம் பெறுதல் உட்பட்ட பல நடவைக்கைகள் இடுபடுவது இந்த சொலமன் போன்றவர்களுக்கு தெரிய வில்லிய???
மாறாக கடந்த பத்து ஆண்டுகளில் தமிழர் தரப்பு முஸ்லிம் விரோதமாக எதாவது செய்தததா ?????? தமிழர் தீர்வு பேசும் பொது சின்ஹல அரசோடு சேர்ந்து தடையாக இருப்பது என் ...எல்லா காலங்களிலும் அரசில் இருக்கும் இவர்கள் தீர்வு குறித்து எதுவும் பேசாமல் ..தமிழர் தரப்பு எங்கயாவது தீர்வு முயற்சி ஆரம்பிக்கும் பொது அதற்க்கு தடையாக இவர்களை பயன்படுத்த அனுமதிப்பது ஏன்????
எல்லாவற்றையும் விடுவோம் .....இன்று முஸ்லிம் மீள் குடி அமர்வு விடயத்தில் தடையாக இருப்பது யார் ????? ஜெனீவா விடயத்தில் முஸ்லிம் தரப்புகள் சின்ஹல அரசோடு சேர்ந்து பொய்க்கு துணை போனது ஏன் ????/ கைதி கொலை விடயங்களில் இதுவரை ஏன் இவர்கள் பேச வில்லை ???? இன்று புலிகள் இல்லை ...சின்ஹல அரசு செய்யும் கொடூர காணி அபகரிப்பு ,சட்ட விரோத விகாரைகள் ,குடியேற்றங்கள் தொடர்பில் ஏன் எங்களுக்காக பேச வில்லை ???? மாறாக தம்புள்ள உட்பட சகல விடயங்களிலும் தமிழர் தரப்பு முஸ்லிம் தரப்புக்கு போதிய ஒத்துழைப்பை தந்தது ....இன்று யாழ் பணம் உட்பட எந்த பகுதியிலும் தமிழர் தரப்பு முஸ்லிம் விவகாரங்களில் முரண் பட்டை ஏற்புடுதி இருகிறதா ??????கிழக்கு தேர்தலில் கூட முதலமைச்சர் பதவிக்கு ஒப்புதல் கொடுத்தது ...யார் பிரச்சனைகளை ஏற்படுத்துவது ...இன்று தேர்தலுக்கு அப்பால் தமிழர் தரப்பு போதிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது ...அனால் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இதற்க்கு ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள் ....
சொலமன்,,,,,,,இவளவு ஒத்துழைப்பை தமிழர் தரப்பு தந்த பினரும் தமிழர் ஒத்துளிக்க வில்லை என கூறும் நீங்கள் இதுவரி முஸ்லிம் தரப்பு தமிழ் முஸ்லிம் உறவுக்கு என்ன செய்தது ?????
25-07-2012, 00:58
 - Posted by Solomon
// .1980/1990 கால பகுதியில் முஸ்லிம் குழுக்கள் சின்ஹல ஆர்சொடு சேர்ந்து செய்த அட்டுழியங்கள் ,அதற்க்கு பதிலாக தமிழர் தரப்பு மேற்கொண்ட்ட தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் உறவை பாதித்து இருகின்றன // 1980 களில் புலிகளின் பிரதேச தளபதிகளாக (அக்கறை பற்று , மூதூர் ) முஸ்லிம்கள் இருந்தார்கள். மன்னார் பள்ளிவாசல் கொலை இல் துவங்கி வடக்கில் இருந்து லட்சகணக்கான முஸ்லீம்களை நில அகபரிப்பு, மண் கொள்ளை அடித்து அனுப்பியதன் பின் தான் முஸ்லிம் இளைஞர்கள் கிழக்கில் தட்பாதுகாபுகாக ஒரு புலி தாக்குதலுக்கு ஐந்து கொடுத்து அடக்கினார்கள். அதுவும் இன மானம் காக்க தமிழ் பேசும் முஸ்லிம்கள் தன்குள் நிலம் கலாச்சாரம் பொருளாதாரங்களை பாதுகாக்க நடத்திய "போராட்டம்தான்.". யார் இதனை ஆரம்பித்து வைத்தார்கள் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

//தமிழர் தரப்பில் பரளமன்ர உறுப்பினர் பதவி கூட முஸ்லிம் இனம் சார்ந்தவர்களுக்கு வழங்க பட்டது ...// நல்ல விஷயம் !. அவர்களுடைய பெயர்கள் என்னவோ ?

//.மீள் குடியேற்றம் ,உட்பட்ட விடயங்களில் போதிய ஆதரவை வழங்கினார்கள் ..// புல்லரிக்குது !. எந்த நாட்டில் இது நடந்தது. ? இலங்கையில் இருக்கும் என் உறவுகள் "எங்கட ஆகளுக்கே இல்லை உங்களுக்கு எப்பிடி ?" என்று இல்லாத கஷ்டங்களை கொடுப்பது சர்வசாதரணமாக எல்லோரும் அறிந்த விஷயம். வடக்கு அரச திணைக்களத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளின் அடாவடித்தனம் ஊர் அறிந்த விடையம்.

//குறைந்தது ஆசிரியர் இடம் மாற்றம், முஸ்லிம் அரச அதிபர் ,அரச நிர்வாக நியமனங்கள் ,மத வழிபட்டு சுதந்திரம் ,காணி அபகரிப்பு ,சுனாமி விடமைப்பு திட்டம் போன்ற எதிலும் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் மக்களுக்கு நன்மை பெற்று தரவில்லை ..// ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.கடந்த முப்பது கால "உரிமை போராடத்தில்" தமிழ் இனத்துக்கு என்ன கிடைத்தது ?. தமிழரின் சனத்தொகை லட்சக்கணக்கில் குறைந்தது, வழமாக வாழ்ந்த வின்னி மக்களின் பொருளாதாரம் உட்பட தமிழரின் பொருளாதாரம் சீரழிந்து போனது, கல்வி என்பது என்ன கிலோ என்று கேட்ட்கும் அளவுக்கு சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்தி கொண்டுபோய் கொளைகள்த்தில் விட்டது என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதேவேளை முஸ்லிம்கள் சமுதாயம் வேறு திசையில் வளர்ந்து சென்றார்கள். ஆனால் என் அருமை தமிழ் நண்பர்களும் வலு கட்டாயமாக இந்த இனப்போரில் தங்கள் வாழ்வை இழந்தது மன்னிக்க முடியாதது.

//மாறாக சின்ஹல அரசோடு சேர்ந்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரன அவசரகால திட்டங்களை ஆதரிப்பது உட்பட்ட பதினெட்டம் திருத்தம் உட்பட பல விடயங்களில் இணைந்து தங்கள் சுய நன்மையை பெற்று இருக்கிறார்கள் ..சொலமன் போன்றோர் இதற்கு என்ன சொல்ல போகின்றனர்....// நீங்கள் "வேறு ஆக்கள்" "சோனி" "காக்கமார் " என்று அடித்து துரத்திய பின் எதனை எதிர் பார்கிறீர்கள்.?

//மாறாக கடந்த பத்து ஆண்டுகளில் தமிழர் தரப்பு முஸ்லிம் விரோதமாக எதாவது செய்தததா ??????// புலிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்கள். அவர்கள் அழிந்க்து போன பின் வந்த தமிழ் தலைவர்கள் என்ன நன்மை செய்து கிழித்தார்கள் ? என்ன விரோதமாக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மேலே கூறி இருக்கிறேன்., மீள வாசியுங்கள்.

//.இன்று முஸ்லிம் மீள் குடி அமர்வு விடயத்தில் தடையாக இருப்பது யார் ?????// மேலே இதுக்கு யார் காரணம் என்று கூறியாகிவிட்டது. ரிசார் பதுவுதீன் போன்றோகள் ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது.

//ஜெனீவா விடயத்தில் முஸ்லிம் தரப்புகள் சின்ஹல அரசோடு சேர்ந்து பொய்க்கு துணை போனது ஏன் ????/// முதலாவது உங்கள் தமிழ் தலைவர்கள் இந்த ஜெனீவா மகாநாட்டுக்கு போக மாட்டோம் என்று "வெளியில் இருந்து " சின்ஹல அரசுக்கு ஆதரவு கொடுத்ததை நினைத்து இங்கத கேள்வியை எண்டா கேட்டோம் என்று வெட்கப்படுங்கள். அதற்க்கு பிறகு முஸ்லிம்கள் பற்றி யோசியுங்கள்.

//மாறாக தம்புள்ள உட்பட சகல விடயங்களிலும் தமிழர் தரப்பு முஸ்லிம் தரப்புக்கு போதிய ஒத்துழைப்பை தந்தது // எப்பிடி ? எரியும் நெருப்பில் என்னை ஊற்றி இன துவேசத்தை வளர்த்தா ? நடக்காதுடி ?

//இன்று தேர்தலுக்கு அப்பால் தமிழர் தரப்பு போதிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது // இவர்கள் செய்த ஒரு சில நன்மையான இன ஒற்றுமை படுத்தும் விடயங்கள் கூறுங்கள்.

//இதுவரி முஸ்லிம் தரப்பு தமிழ் முஸ்லிம் உறவுக்கு என்ன செய்தது ?????// சின்ன உதாரணம். அதிக ஆசனங்களை பெற்று இருந்தாலும் கிழக்கு மாகாணத்தின் முதல்வனாக ஒரு தமிழ் சகோதரனை ஒற்றுமையாக தெரிவு செய்தோம். பெருமை படுத்தினோம். எங்கள் ஊரில் நடக்கும் தமிழ் முஸ்லிம் த்ரயுவிலாகளின் இன்னமும் நாங்கள் சகொதரகளாக வாழ்கிறோம். வாழ்வோம்.

கடைசியாக எந்த தமிழ் தலைவருடன் கை கோர்ப்பது ? . சுரேஷ் ஒன்று சொன்னால் அடுத்த நாள் சம்பந்தர் "அது அப்பிடி இல்லை" என்கிறார். சிவாஜி லிங்கம் உலகம் எல்லாம் இருக்கும் வானொலிகளில் இந்த ரெண்டுபேரும் துரோகிகள் என்பது போல் பேசுகிறார். அவர்களுக்கு உள்ளேயே அவர்கள் கை கொடுபதில்லை அப்படி இருக்கும் பொது ... வேணாம் விடுங்கோ...
25-07-2012, 03:11
 - Posted by Anonymous
அன்புள்ள குருபரன். காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்ட விவரணம் இது. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் இன்றைய தேவையாகக் கருதுபவர்கள் உங்கள் கடிதத்தின் அவசியத்தைப் பாராட்டுவார்கள். உங்களுக்க இந்தக் கடிதம் எழுத என்ன உரிமை இருக்கிறது என்பதற்கு- இதன் முதல் வரிகளில்- அதனைத் தெரிவித்து விட்டீர்கள்.அடுத்து உங்களது சமுகப்பொறுப்பாண்மையயையும்- இன்றைய தமிழ் முஸ்லிம் சமுகங்களின் தேவை - அரசியலுக்கப்பாற்பட்ட நிலையில் என்ன எனபதனையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
உள்நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இந்தப்பணியைச் செய்வது கடினம். சிலர் உள்ளுரில் புகழ் மரியாதை பெறவும் சிலர் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பாராட்டுவிழாவும் விமானற்ரிக்கெற் பெறவும் -கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதவேண்டிய நிலையில் - எ ங்கள் ஊடக நிலைமை! தமிழத் தேசியக் கூட்டமைப்பு எனபதற்கான அத்திவராமிட்டவர்களில் ஊடகவியலாளரகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் இன்று ஊரில் இல்லை. இன்று வெளிநாடுகளிலுள்ள தமிழ் வெப் தளங்களும் காலத்தின் தேவை அறிந்தாற்றுவதாகத் தெரியவில்லை.சிறுவன் 'முஸ'லிம்' ஒருவரால் கடத்தப்பட்டார். என்று இனம் சார்ந்து எழுதுவது- இனறைய காலகட்டத்திலும்- தேவையா என்று சிந்திகத் தெரியாதவர்களாலதான் தமிழ் வெப் ஊடகங்கள் நடத்தப்படுகின்றன். (இதற்கு தொலைக்காட்சி வானொலி ஊடகங்களும் தவறல்ல). வின்செனற் மகளிர் கல்லூரி சரஸ்வதி சிலை விவகாரத்தை செய்தியாக வெளியிட்ட விதம் - கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களை -எவ்வளவு மனம் நோகச் செய்யும்- என்பதை - இன்றும் உணராமல் செயதி எழுதுகிறார்கள். குருபரனின் தளத்தில் வந்திருந்தால் -இனத்தைப் பிரிக்க மகிந்த அரசு அல்லது கே பி காசு n கொடுத்ததாகவும் எழுதியிருப்பார்கள். மன்னார் ஆயர் சனாதிபதியுடன் அடிக்கடி தேனீர் அருந்துவதாகவும் ஒரு தமிழ்ப்பெரியார் (த தே கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பிரதிநிதி என்று தம்மை அழைத்தவர்) - எழுதியதை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன. இப்படி அறிக்கை விடுபவர்கள் தான்- மன்னார் ஆயருக்கும் அமைச்சர் ரிசாத் குழுமத்திற்கும் இடையில் நடைபெறும் 'கூத்தை' ப் பார்த்துக் கொண்டிருபு;பார்கள் என்று ஏன் சொல்ல முடியாது? . வெளியில் இருந்து நாம் என்ன செய்யலாம் எம் மக்களுக்கு என்பதே இன்றைய தேவை. கம்பன் விழாவுக்கு தலைவர் ஹக்கீம் அழைக்கப்பட்டதற்கு லெற்றஹெட் அமைப்பொன்று அறிக்கை விட- அதையெல்லாம் பீற்றிக்கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள் தங்கள் பணி என்னவெனறு தெரியாமலே இவற்றைச் செய்வதாக நாம் கருதமுடியும்! அல்லவா?.எஸ் டி சிவநாயகத்திறகு;ம் சற்றடே ரிவியு சிவநாயகத்திறகும் இடையில் வித்தியாசம் தெரியாதவர்கள் - சம்பந்தனுக்கு ஆலோசனை -சொல்கிறார்கள்! இவற்றையெல்லாம் பார்க்கவும் கேட்கவும் வேண்டியது புலம்பெயர் தமிழரின் தலைவிதி!இந்த வகையில் அரசியலிலும் ஊடகவியலிலும் அனுபவமிக்க நீங்கள் எழுதியுள்ள இக்குறிபபை சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் வாசித்து- தங்களால் வெளியில் சொல்லக்கூடிய விடயங்களை- சொல்வார்கள் அல்லது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம! (அணமையில் ஒரு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் (ததேகூ) ஒருவர்- சம்பந்தன் ஐயா கொடி பிடித்தது- இராசதந்திரம் என்று சொல்ல அதை ஒரு தமிழ் ஊடகம்-செயதியாக வெளியிட்டதையும் -இது அரசியல்+ஊடக நகைச்சுவை)! தலைவர் ஹக்கீம் அவரகளும் பஷீர் அண்ணரும்-தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் ச pறந்த நண்பர்கள். அவர்களை நாங்கள் முஸ்லிம் இனத்துக்கான (மட்டும்) தலைவர்களாக நாம் பார்ப்பதில்லை. அவர்களுடன் உறவாடியவர்களுக்குத் தெரியும். அந்த உரிமையில தான் குருபரன் இந்தக் கடிதததை எழுதியுள்ளார் எனபதை நான் உணர்கிறேன்.! முனபொருமுறை விழுதுகள் நிகழ்சச்சியில் ஜேவிபி பா உ வான-நண்பரும் தோழருமான சந்திரசேகரன் உங்களது தொடர்சியான வினாக்கணைகளுக்கு- ஒரேயொரு பதிலைச்'செல்'லடியாகத் தந்தார்..அவர் சொன்ன பதில் 'குருபரன் நீங்கள் ஒரு பழைய போராளி! உங்களுடன் பதில் சொல்ல எனக்கு எல்லாம் முடியாது!.." அவர் சென்னதை நான் மீண்டும் ஒருசிறு மாறுதலுடன் சொலகிறேன். நீங்கள் ஒரு ஊடகப் போராளிதான் போங்கள்! வரதராஜன் நியுசிலாந்து.
25-07-2012, 06:57
 - Posted by Anonymous
புலிகள் இயக்கத்தில் முஸ்லிம்கள் இருந்ததை யாரும் மறுக்கவில்லை ....இது எல்லோருக்கும் தெரியும் ..தமிழர்களுக்கு சமாந்தரமாக முஸ்லிம்களுக்கும் புலிகள் இயக்கத்தில் உயர் நிலைய்கள் வழங்கப்பட்டன ....புலிகள் இயக்கத்தில் இனவாதம் இருக்கவில்லை என்பதற்கு இது ஒரு சம்பவம் ஊதாரணம்
ஆனால் நீங்கள் வழமை போல உங்கள் கோமாளி வாதத்திற்கு ஆக புலிகள் தாக்கிய பின்னர் தற்காப்புக்கு தாக்கியதாக பொய் சொளுகிரிர்கள் .....கிழக்கிலே டெலோ போராளியை 1985 காலபகுதியில் காட்டி கொடுத்து கொலை செய்த தொடக்கம் முஸ்லிம் குழுக்கள் தமிழர்களை திட்டமிட்டு வேட்டையாடியதை மறைக்க பர்கிரிகள் ...கோவில்களில் தமிழர்களை கொலை செய்தல் ,கற்பழித்தல் ,கிராமங்களை அழித்தல் (இன்றும் கிழக்கில் இப்படி நிறைய கிராமங்கள் இருகின்றன ..நேரில் பார்க்கலாம் ),காடி கொடுத்தல் ,கட்டாயமாக மத மாற்றம் செய்தல் ,என்று இந்த முஸ்லிம் குழுக்கள் சின்ஹல அரசோடு சேர்ந்து வெறியாட்டம் நடத்திய பின்னர் தான் அந்த வலியை புரிய வைக்க புலிகள் பதில் தாக்குதல் நடத்தினார்கள் ..வடக்கில் ஜெமில் போன்றோரின் காட்டி கொடுப்புகள் அடாவடியாக அதிகரித்து பதினோரு போராளிகள் கொல்லப்பட்ட பினர் தான் புலிகள் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக தண்டிக்க வேண்டி வந்தது ...எப்படி இருந்தாலும் இது தவறு தான் ..இதை புலிகள் கூட ஏற்று கொண்ட்டர்கள் ......ஆனால் உங்கள் கோமாளி அரசியல் வியாபாரிகள் இன்றும் இத தொடர்பில் வாய் திறக்க வில்லை ....குருபரன் அண்ணா தெளிவாக இதை பற்றி சொன்ன பினரும் திருப்பி திருப்பி பொய் பேசுவதால் உண்மை ஆகி விடாது ..புலிகள் காலத்தில் இமாம் அவர்கள் தேசிய பட்டியல் பாராள மன்ற உறுபினராக நியமிக்கப்படு தமிழர் தரப்பில் உணமையான விசுவாசம் சொல்ல பட்டது ..வாசிக்கும் அறிவு இல்லாத உங்களுக்கு இவை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை ...இன்று வரை முஸ்லிம் மீள் குடியேற்றத்தில் எந்த நெருக்கடியும் கொடுக்க பட்டதாக எந்த முறை படும் இல்லை ..வாய்க்கு வந்த படி பேசுவது உங்கள் கோமாளி புத்தி .....புலிகள் ,தமிழ் கூட்டமைப்பு உட்பட பலரும் சமாதான காலத்தில் இருந்தது இதனை செமையாக ஆதரித்தார்கள் ..சில முஸ்லிம் முதலாளி மார் கோமாளி அரசியல் வாதிகளுடன் சேர்ந்து தமிழர் காணிகளை அடாவடியாக பிட்டிக்கும் காரியம்மும் நட்டந்து வருகின்றது ....கிள்ளிநொச்சி,புது குடியிருப்பு போன்ற இடங்களில் இது நடந்து வருகின்றது ..இருந்தும் தமிழர் தரப்பில் வெளிப்படையான எதிர்ப்பு இன்னும் கட்டப்பட்ட வில்லை ...முஸ்லிம் வியாபாரிகள் பரவலான வியாபாரங்களில் எந்த தலை ஏதுமின்றி செய்கிறார்கள் .....இவர்களில் சிலர் கற்பழிப்பு ,மத மாற்றம் போன்றவறில் இடுபட்டு இன்று நீதி மன்றில் பிடிபட்டு இருக்கிறார்கள் ...இது தொடர்பில் யாரும் மொத்த முஸ்லிம் சமுகத்தை எதிர்க்க வில்லை ..மீள் குடி ஈரும் மக்களுக்கு தமிழர் அமைப்புகள் நிறைய உதவிகள் செய்கின்றனர் ...மாறாக கோமாளி முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இந்த ஒருமையை தடுக்க பிரச்னையை ஏற்படுத்துகின்றனர் ....
அது சரி ..நாங்கள் அழிந்து போனோம்.....நீங்கள் என்ன முனேற வில்லை ....எல்லோரும் அரசில் இருந்தும் ஒரு நீதியான இடம் மாற்றம் ஒன்றை கூட பெற வில்லை ...என்ன?????? கல்வி ரீதியில் யுத்த நெருகடிய்ளும் நான்கள் தேசிய ரீதியில் சாதனைகள் படைத்தோம் ...நான் இறுதி யுத்த கலபகுதில் பரிட்ச்சிக்கு தோற்றி தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பெற்றான் ...ஆனால் எங்கள் கலுரிக்கு பக்கத்தில் வைத்து ராணுவம் பரிட்ச்சை நேரங்களில் கூட தாக்குதல் நடத்தியது ....ஆனால் இன்று திட்டமிட்டு கல்வி வேலை வைப்பு என்பவருக்கு என்ன நடக்கிறது
இந்த சட்ட மூலங்கள் தமிழர்க்கு மட்டுமல்ல ..முஸ்லிம்களுக்கும் அநீதி இளைத்து இருக்கிறது ....இது கூட உங்களுக்கு தெரியாத????தமிழர் தரப்பில் வெளிப்படையான ஆதரவு ,ஒத்துழைப்பு தரப்பட்ட பினரும் தங்கள் சமூகத்தையே பாதிக்கும் இந்த விடயங்களில் என் சரியான முடிவு எடுக்க வில்லை
ஆரம்பத்தில் இருந்து இவர்கள் சொந்த நன்மைக்காக இதுவல்ல என்னவும் செய்வார்கள் ..இந்த பிரச்சனிக்கு இந்த கோமாளிகள் தான் காரணம்..இன்று கூட குருநாகலில் பள்ளி வாசல் ஒன்று மூடபட்டு இருக்கிறது ....உங்கள் கோமாளிகள் வாய் மூடி இருக்கிறார்கள் ........
மிக பெரிய பொய் ...கொட்டபயவின் அச்சுறுதல்லுக்கு பயந்து முஸ்லிம் முதல்வர் பதவி விட்டு கொடுக்க பட்டது என உங்கள் அமைச்சர் பௌசி சொன்னது என்ன மாதிரி ......துணை ஆயுத குழுக்களை வளர்த்து தமிழர் பலத்தை இல்லாமல் ஆக்க சிங்கள அரசோடு சேர்ந்து சில கோமாளிகள் அடிய கூத்து ..ஆனால் தமிழர்கள் தொடர்ந்து வந்த தேர்தல்களில் சின்ஹல அரசை தோற்கடித்து தங்கள் ஒரும்மையை தெளிவாக காட்டி இருக்கிறார்கள் ..இன்னும் காட்டுவார்கள்....தமிழர் தரப்பு ஜெனீவாவில் கலந்து கொள்ளாத போதும் அவர்கள் மேற்கொண்ட/சமர்பித்த அறிக்கைகள் தான் சின்ஹல அரசு அங்கு தோற்றுபோக காரணம் ..இதை சின்ஹல அரசே சொல்லி இருக்கிறது .....அது இருக்கட்டும் ....ஏன் முஸ்லிம் தரப்பு ....உண்மைகளை தெளிவாக தெரிந்து இருந்தும் ஜெனீவா சென்று சின்ஹல அரசோடு சேர்ந்து பொய் சொன்னது ..இது எந்த வகையில் சமுக ஒருமைக்கு வழி வாக்குக்கும்
சொலமன் நீங்கள் சரியான போகிரி தனமான ஆள் .....தமிழர் தரப்பில் எந்த குழப்பமும் இல்லை ....கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம் ..அது எந்த விதத்லிம் தமிழ் முஸ்லிம் உறவுகளை பாதிக்கும் வகையில் இல்லை ..சின்ஹல அரச கொள்கைளை ஏற்று கொண்டு ஒரு அரசில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குழுக்களில் இர்ருக்கும் ஒற்றுமையை விட எங்களிடும் பொது விடயங்கள் ,போராட்டங்கள் ,தேர்தல் போன்ற எல்லாவற்றிலும் இணைந்து செயற்படுகின்ற ஒற்றுமை இருக்கிறது ....
குரு அண்ணா சொன்ன மாதிரி தமிழர் தரப்பில் நல்லன்னே விடயங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக கட்ட படுகிற போதும் முஸ்லிம் போலி வியாபாரிகள் எந்த விடயத்திலும் இணங்கி செயற்படவில்லை ....தங்கள் நலனை முக்கியம் கொடுக்கும் இவர்கள் ஒரு போதும் சமுக நன்மையை எதிர் கொள்ள மாட்டார்கள் ..பொய்களை மட்டும் பேசும் சொலமன் இதற்க்கு ஊதாரணம்
25-07-2012, 14:01
 - Posted by Solomon
நீங்கள் கோமாளிகள் சொல்லும் அளவுக்கு கேவலமான முஸ்லிம் அரசியல்வாதிகளை வர்களின் முட்டாள்தனமான செயல்களை தொடர்ந்து செய்ய விடுங்கள். முள்ளிவாக்கால் வரை கொண்டுபோய் விட்ட உங்கள் அறிவு மிக்க , மனிதாபிம்மணம் உள்ள . அரசியல் சாணக்கியம் உள்ள தமிழ் அரசியல் வாதிகளை வழிபடுங்கள்.
இருபத்து ஐந்து வருடங்களாக அகதிகளாக சீரழிந்த வடக்கு முஸ்லிம்களுக்கு (இவ்வளவுகாலமும் இவர்கள் எங்கே போனார்கள் ?)அறிவு மிக்க , மனித நேயம் கொப்பளிக்கும் உங்கள் தமிழ் அரசியல்வாதிகள் செய்துவரும் அருமை பெருமைகளை அறிந்து புல்லரித்துப்போனோம். என் முஸ்லிம் / தமிழ் நண்பர்களும் கூட அசந்து போனார்கள்.

வெளிநாட்டு தமிழ் வானொலிகளுக்கு சுரேஷ் / சிவாஜி ங்கம் போன்றோர் கொடுக்கும் பெட்டிகளை கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்லும் முஸ்லிம்களின் வளர்ச்சி பற்றியும் எப்படி முஸ்லிம்கள்
//.புலிகள் இயக்கத்தில் இனவாதம் இருக்கவில்லை என்பதற்கு இது ஒரு சம்பவம் ஊதாரணம் // துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களிடமும் , கிழக்கின் பழைய போராளிகளிடமும் கேட்டால் மட்டுமல்ல உலகமே அறியும். கொலைகார புலிகளின் இன குரோத செயல்கள். இப்படி எழுத மனசு கூசவில்லையா? புலிகள் இன வாதிகள் மட்டுமல்ல பிரதேச வாதிகளும் கூட என்பது கிழக்கில் புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயரம் ஆயரம் இளைஞர்கள் விட்டு விலகியதும் , மிஈதமாக வடக்கில் அகபட்டுப்போன நூறுக்கணக்கான கிழக்கு தமிழ் இளைஞர்களை புலிகள் போட்டுதள்ளியதுமே ஒரு சிறு ஒரு சம்பவம் ஊதாரணம்.

தமிழ் தலைவர்கள் எப்போது முஸ்லிம்களுக்காக பேசினார்கள். ?. இன துவேசத்துக்கு சிங்களவர்களுடன் சண்டைபிடிக்கும் வகையில் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் எது "புதிதாக " பாசம் வததுபோல் பாசாங்கு செய்வது தவிர. தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவங்கள் போன்ற சிறு அசம்பாவிதங்களை ஊதிப் பெருபிப்பதில் தான் கவனம் செலுத்தினார்கள். இவர்கள் என்ன புத்த்பிக்குவிடமோ அரசாங்கத்திடமோ பேசினார்களா? சமாதானமாக வாழ திர்யாதவர்கள். "சண்டைக்கு நிற்பதுதான்" இன உரிமை போராடம் என்று சொல்லுபவர்கள் இவர்கள்.

உலகில் ஆயுதம் மூலம் விடுதலை பெற்ற ஒரே நாடு கியுபா மட்டுமே என்பது தெரியுமா?


திரு குருபரன் அவர்கள் குறிப்பிடிருக்கும் சம்பவங்கள் மனதை உருகுபவன . உண்மைதான். ஆனால் அவற்ற்றை விட பல மடங்கு கொடூரங்களை , கொடூர சம்பவங்களை முஸ்லிம் சமுதாயம் புலிகளால் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் பல தமிழ் தலைமைகள் அப்பொழுது புலிகளுக்கு ஜால்ரா அடித்து கொண்டு அவர்களோடு இருந்தவர்கள் தான் என்பதினையும் மறக்க கூடாது. ஏதோ இவர்கள் வானத்தில் இருந்து வந்த தேவதைகள் போல் வருணம் பூச முயட்சிகாதீர்கள்.

சரித்திரம் ஒரு வழிகாட்டி. தமிழ் தலைமைகள் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ததாக சரித்திரம் இல்லை.


26-07-2012, 09:39
 - Posted by Nimmi
என்றைக்குமே சாச்சா அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டு இருப்பார். அவரின் எல்லா விமர்சனமும் ஒரே மாதிரி தான் இருக்கும். படங்களில் காமெடியாக காட்டப்படும் ஆங்கிலம் பேசத் தெரியாத ஆட்கள் எல்லாவற்றுக்கும் போடுவது போல் இவரும் எல்லாவற்றிற்கும் புலியை சம்பந்தப்படுத்தி தான் அரைத்துக் கொண்டிருப்பார். அது பேசுவதற்க்கு பொருந்துதோ இல்லையோ அதை பற்றி சிந்தனையே இல்லாமல் தாம் பெரும் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்தவர்கள் என்ற நினைப்பில் உளறிக் கொண்டிருப்பார். போர் ஓய்ந்த பிறகும் இவர்களின் அடாவடித்தனம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. இன்றும் வட கிழக்கு பிரதேசங்களை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். களவு கொள்ளை கற்பழிப்பு என்று அங்கு இவர்கள் செய்யும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சமில்லை. தண்ணீர் குடிப்பது போல் வீடுகளுக்கு போய் வீட்டை நோட்டம் விட்டு கொள்ளையடிப்பது அங்கு இவர்களின் வாடிக்கை. ஆனால் இங்கு வந்து நபி வழியை அப்படியே பின்பற்றும் உத்தமர்களாக காட்டிக் கொள்ள தலைப்படுகின்றனர். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடும் என்றது போல் இருக்கிறது இவரின் செயல். என்ன தான் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற மாதிரி புளுகிக் கொண்டிருந்தாலும் நீங்கள் உத்தமர்களாக தமிழர்களோடு வாழவில்லை, வாழவும் மாடீர்கள் என்பது தன் நிதர்சனம்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.