செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இலங்கைத்தீவில் இனப்படுகொலை : அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தாடல் களம்

 

பேராசிரியர் சேரன், பேராசிரியர் மணிவண்ணன், US வழக்கறிஞர் Ali Beydoun , Libra Institute கற்கைநெறி மையத்தின் தலைவர் Dr.Maria Szonert உரைகள் இணைப்பு

 


இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பிலாக கருத்தாடல் நிகழ்வொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பொஸ்ரன் பகுதியில் இடம்பெற்றிருந்த இக்கருத்தாடல்களத்தில், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன், கனடாவில் இருந்து பேராசிரியர் சேரன் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Ali Beydoun , Libra Institute கற்கைநெறி மையத்தின் தலைவர் Dr.Maria Szonert உட்பட பல வளஅறிஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தாடலை நெறிப்படுத்தினார்.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை மையமிட்டு இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடு  இக்கருத்தாடலின் மையப்பேசு பொருளாக அமைந்திருந்தது.
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
25-07-2012, 20:53
 - Posted by Anonymous User
நானும் ஏதோ அமெரிக்க அரசாங்கம் ஒரு கூட்டம் போட்டதோ என்று அடிச்சு புடிச்சு போனா ...நம்ம குஞ்சுகள்..!. .இவர்கள் கூடினால் என்ன பேசுவார்கள்..

பாவம், இவர்களால் கைவிடப்பட்ட வன்னி தமிழர்கள்.!. ஒரு வார்த்தை ஊஹும்....

நான் கலூரியில் படிக்கும் பொது நடந்த மாணவர் கூட்டம் ஞாபகம் வந்தது.

அரைத்த மாவு !
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.