செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் - ஜேம்ஸ் வார்டோன்

 

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் - ஜேம்ஸ் வார்டோன்

 

 

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுத் தலைவர் ஜேம்ஸ் வார்டோன் தெரிவித்துள்ளார். வெளிசக்திகளினால் தீர்வுத் திட்டங்களை திணிக்க முடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நாட்டின் அனைத்துஅரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமென அவர்தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த போது ஊடகவயிலாளர்களிடம் ஜேம்ஸ் வார்டோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
 

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளிநாடுகளிலிந்து வரமாட்டாது உள்நாட்டிலேயே பேசித் தீருங்கள்:-UK

02-08-2012 -13:42

 

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளிநாடுகளிலிந்து வரமாட்டாதென தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தீர்வை உள்நாட்டினுள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். 

இன்றைய தினம் யாழ்ப்பாணதிற்கு சென்றிருந்த குழுவினர் முன்னதாக அரச அதிபரை சந்தித்து பேசினர். பலாலிக்கு விமானப்படை விமானம் முலம் சென்று சேர்ந்த அவர்கள் அங்கிருந்து விமானப்படை உலங்கு வானூர்தி முலம் யாழ். மத்தியகல்லூரி மைதானத்தை சென்றடைந்திருந்தனர். 

வழமை போன்றே தாமதமாக வரவேற்க சென்று சேர்ந்த யாழ்.அரச அதிபருக்காக குழுவினர் காத்திருக்க வேண்டியிருந்தது.

அரியாலை பகுதிக்கு வியஜம் செய்த குழுவினர் அங்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டி வழங்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் அவ்வேளையில் பொதுமக்களையும் சந்தித்து உரையாடினர். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர்கள்  தீர்வை உள்நாட்டிலேயே பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். 

அவர்கள் வணிகர் கழகம்  உள்ளிட்ட தரப்புகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பலாலியில் அவர்கள் பாதுகாப்பு தரப்பினரடன் பேச்சுக்களை நடத்தியதாக கூறப்பட்ட போதும் அது தொடர்பான தகவல்கள் வெளியாகிருக்கவில்லை.

இதனிடையே பிரித்தானிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டி ஜனாதிபதி மாளிகையில்  இன்று காலை சந்தித்து உரையாடியுள்ளனர். 

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் வர்டன், மார்க் மென்சிஸ், அன்ரூ ஸ்டீவன்சன், எய்டன் பர்லே, கொன்னர் பேர்ன்ஸ், மெத்திவ் ஒப்ரிட், டேவிட் மொரிஸ், பொபி பிளக்மன், நிக்கொலா பிளக்மன், இயன் பேஸ்லே ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றனர். ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோர்டன் தலைமை வகிக்கிறார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், சரத் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல, எஸ்.பீ. திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். குழுவினர் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
04-08-2012, 08:33
 - Posted by Solomon
/வெளிசக்திகளினால் தீர்வுத் திட்டங்களை திணிக்க முடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்// YAP!
04-08-2012, 12:10
 - Posted by Siva.
தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது, என்ற பிரித்தானிய பாராளுமன்றக் குழுத் தலைவர் ஜேம்ஸ் வார்டோன் கூற்று நியாயமானதே! ஆனால், 30 வருடச் சாத்வீகப் போராட்டமும், 30 வருட ஆயுதப் போராட்டமும் கூட, எத் தீர்வையும் கொடுக்கும் சிந்தனையை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தவில்லையே! இனிமேலும் கூட, சிங்கள அரசுகள் ஒரு தீர்வை முன்வைக்கும் என்பதில் நம்பிக்கை அற்ற ஒரு நிலைமையே காணப்படுகிறது! முன்னேற்றமற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகளை விடுத்து, சர்வதேசக் கண்காணிப்புடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தை மேற்கொள்வதுதான், பயனளிக்கும் போலும்!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.