செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

காவல்துறையினருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் மோதல்

 

காவல் துறையினருக்கும் விமானப் படையினருக்கும் இடையில் மோதல்

 

 
காவல்துறையினருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் பார்க் மைதானத்தில் இந்த மோதல்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
காவல்துறையினருக்கும், விமானப்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கழக மட்டத்திலான ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட முறுகளே இந்தமோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடிய வீரர்கள் முதலில் மோதிக்கொண்டதாகவும், பின்னர் ஆதரவாளர்களும் மோதலில் இணைந்து கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த ரக்பி போட்டியில் 31 – 14 என்ற எண்ணிக்கை அடிப்படையில் காவல்துறை அணி, விமானப்படையை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.