விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் நடத்துனர் மற்றும் சாரதியால் தாக்கப்பட்டனர்

 

பஸ்சில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் படுகாயம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் நடத்துனர் மற்றும் சாரதியால் தாக்கப்பட்டனர்


 

வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் பெருமபான்மையின நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தள்ளி வீழ்த்தப்பட்டதால் படுகாயமடைந்த சம்பவமொன்று இன்றிரவு யாழ்.நகரில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தை பஸ்தியான் சந்திப்பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் மூவர் வவுனியா செல்ல பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர். 

வழமையாக யாழ்ப்பாணம் - வவுனியா கட்டணமாக ரூபா 180 மட்டுமே அறவிடப்பட்டுவருகின்றது. எனினும் குறித்த பேருந்தின் நடத்துனரோ ரூபா 250 இனை கட்டணமாக செலுத்த பணித்துள்ளார். அதையடுத்து அவருடன் முரண்பட்ட இளைஞர்கள் பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தால் குறித்த கட்டணத்தை செலுத்த சம்மதித்தனர்.

அவ்வேளையில் நடத்துனர் மற்றும் சாரதியுள்ளிட்டவர்கள் இளைஞர்களை தாக்க தொடங்கியுள்ளனர். அத்துடன் இவர்களை வாகனத்திலிருந்து தள்ளிவி;ட்டு பேருந்தினை இயக்க முற்பட்டுள்ளனர்.

அவ்வேளையில் சில்லினுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள்  நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களை தாக்க தொடங்கினர். அத்துடன் அவர்களை பொலிஸாரிடம் கையளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்பிற்கான பாதையனுமதி தமிழ்த் தரப்புக்களுக்கு மறுதலிக்கப்பட்டு பெருமளவில் அரசியல் செல்வாக்கில் தெற்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(12) அபிப்பிராயங்கள்
05-08-2012, 04:28
 - Posted by Anonymous
இது அதிசயமில்லை , இன ஒடுக்குமுறையின் ஒரு சிறிய வெளிப்பாடு.......... தமிழனின் தலைவிதி............ஆயினும் இது ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து பின்பு மனிதனைக் கடித்த கதையாய் வெகு விரைவில் மாறும்..........
05-08-2012, 08:38
 - Posted by Solomon
// அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களை தாக்க தொடங்கினர். அத்துடன் அவர்களை பொலிஸாரிடம் கையளித்தனர்.// பல லட்சம் சிங்களவர்களும் , பல லட்சம் தமிழர்களும் வசிக்கும் வடக்கில் இப்படி ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாதுதான். மக்கள் பலமும் சட்டத்துறையும் நீதி நிலைநாட கூடிய அளவு சுதந்திரம் இருக்கிறது என்பது இந்த செய்தி மூலம் தெரிகிறது.
05-08-2012, 09:16
 - Posted by Siva.
முழுக்க முழுக்கத் தமிழ்ப் பயணிகளைக் கொண்ட ஒரு வழித் தடத்தில், பெரும்பான்மையினர் போக்கு - வரத்துச் சேவையை நடத்த அனுமதித்ததே முதல் தவறு! தாம் எதைச் செய்தாலும், தமக்கு காவல்த் துறையும் ராணுவமும் துணை நிற்கும் என்னும் மமதையில், எதையும் செய்யத் துணியும் சேவை வழங்குனர்கள், கண்ணியமாக நடப்பது, அதை விட முக்கியம்! இச் சம்பவம் குறித்து, சட்டம், நீதி நிலை நாட்டப்படுமா?, என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
05-08-2012, 11:27
 - Posted by Anonymous User
// அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களை தாக்க தொடங்கினர். அத்துடன் அவர்களை பொலிஸாரிடம் கையளித்தனர்.// பல லட்சம் சிங்களவர்களும் , பல லட்சம் தமிழர்களும் வசிக்கும் வடக்கில் இப்படி ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாதுதான். மக்கள் பலமும் சட்டத்துறையும் நீதி நிலைநாட கூடிய அளவு சுதந்திரம் இருக்கிறது என்பது இந்த செய்தி மூலம் தெரிகிறது.
05-08-2012, 12:33
 - Posted by Irem
சொலமன், உங்களது ஒவ்வொரு கருத்துக்களைப் பார்க்கும் போதும் உங்களை வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விட மாட்டோமா என்ற பேராவல் கூடுகிறது. உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கும்,facebook நண்பர்களாக இணைவதற்கும் என்னைப் போல் நிறையப் பேர் ஆவலாக காத்திருப்பார்கள் . உங்களது உண்மையான identityயை இனியாவது வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் தான் ராமராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு என்ன பயம்? ''மக்கள் பலமும் சட்டத்துறையும் நீதி நிலைநாட கூடிய அளவு சுதந்திரம் இருக்கிறது என்பது இந்த செய்தி மூலம் தெரிகிறது.''QUOTE BY SOLOMON
05-08-2012, 14:04
 - Posted by Anonymous User
பொது மக்கள் சிங்கள சாரதியையும் நடத்துணரையும் தாக்கியதிலிருந்து ஒன்றை மட்டும் உணர்த்தியுள்ளார்கள் முள்ளிவாய்க்கால் கொலைகாரரின் அதிகாரத்தையோ அல்லது அவரது கூலிப்படையின் அதிகாரத்தையோ தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் ஏற்றுக்கொள்ளவும் இல்லை , ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லையென்று, கொடூர கொலைகாரனின் அந்நியப் படைகள் தமிழ் மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட வேன்டியவர்களே தவிர அரவணைக்க படவேன்டியவர்கள் அல்ல என தமிழ் மக்கள் நிரூபித்து இருக்கின்றார்கள், மெல் எனப்பாயும் தண்ணீர் கல்லையும் மீறுமாம், ராஜன்.
05-08-2012, 14:46
 - Posted by Nimmi
சொலமன் எப்படி முகமூடியை கழட்டுவார்? தொடை நடுங்குகிறதே! building strong basement week என்று இவருக்கு தான் வடிவேலு சொல்லியிருக்கார். மறைந்திருந்து கல் எறிவது தான் அவரது வீரதீரம். அவரது தனித்துவம்.
05-08-2012, 17:24
 - Posted by Solomon
தொடை நடுங்கிகள் நீங்கள் என்பது எப்போதோ உலகத்துக்கே தெரியும். "Building Strong ஆனா basement Weak " என்று தெரிந்துதான் மே மாதம் 19 தில் நொங்கு கொங்கு என்று நோங்கிரர்கள்!. வேடக்மில்லியா ?. வாய் கொழுப்புக்கு மட்டும் குறைச்சலில்லை.!

காயத்த்ரி, உங்களைப்போல் தான் நானும் மிக ஆவலாக இருக்கிறேன். என்னை காண நீங்கள் ஆவலாக இருப்பது கண்டு மெய்சிலிர்த்துப்போம். உங்கள் விலாசத்தை உத்தமியான நீங்கள் கூறி உங்கள் வீர தீரத்தை காட்டுங்கள். நீங்களும் உங்கள் பழைய பல்லவிகளும் மாறவே இல்லை.. இப்படி மிரட்டித்தான் பணம் பறித்து, கொலை செய்து கடைசியில் முள்ளி வாக்காளில் கொண்டுபோய் நிறுத்தினீர்கள்.

திருந்துன்கோவன்.!
05-08-2012, 20:14
 - Posted by Irem
சொலொமன் நீங்கள் ஒரு கேவலமான மனிதர் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சான்று வேண்டுமா ? கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க முடியவ்வில்லை என்பதற்காக எனக்கும் முத்திரை குத்த வேண்டாம் . புத்திசாலித்தனம், அறிவு எதுவும் இல்லாவிட்டாலும் வார்த்தைகளால் காயப் படுத்த நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நோன்புக் காலத்தில் உயிர்கள் மீது இவ்வளவு அன்பை வெளிப் படுத்த உங்களைத் தவிர யாரால் முடியும் ????
06-08-2012, 00:41
 - Posted by Anonymous User
மே 19,ல் நாங்கள் யுத்தம் செய்தோம், வெற்றியோ தோல்வியோ எங்களது கெளரவப்பிரச்சினை, தம்புள்ளவில் இருந்து சிங்களவர் நொங்கு நொங்கென்று நொங்கியபின்பும் .... .. தொடை நடுங்கி இல்லை தமிழர், ... எல்லாம் எங்களைப் பார்த்து விமர்சனம் செய்யக்கூடாது, பள்ளிக்கு முன்னால் இருந்து சிங்களவர் சன்டித்தனம் செய்யும் பொளுது அதை தட்டிக் கேட் க்க முடியாதவர்கள், புலிகளின் அட்டூழியங்களை த்டுத்து நிறுத்தென்று ஆர்ப்பாட்டம் நடத்தி சிங்கள மாத்தையாக்களை சந்தோசப் படுத்துகின்றரார்கள் இப்படி துப்புக்கெட்ட வாழ்க்கை தேவையா, ... ???? ராஜன்.
06-08-2012, 03:49
 - Posted by Solomon
மத வெறி பிடித்த புத்தபிக்கு ஒருசிலர் ஆர்பாட்டமும் , அடாவடி நடாத்த முயன்ற பள்ளிவாசல்கள் அனைத்திலும் இன்றும் மிக சிறப்பாக (முன்பை விட௦) தொழுகைகளும் நோன்புகால இரவுநேர "த்ராவிகு " தொழுகைகளும் நடு நிசிவரை நடை பெறுகிறது உங்களுக்கு பிடிக்காத செய்தி தான். ( ஒரு இனம் அல்லது மனிதன் அழிவது மட்டும் தானே உங்களுக்கு ருசிகரமான செய்தி). தலிபாங்ககள் உலகின் மிக பாரம்பரியமான , மிக பெரிய புத்த சிலைகளை குண்டுவைத்து அழித்தபோது கூட இலங்கை முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் எந்த பழிவாங்கும் நடவடிகைகளியும் செய்யவில்லை என்பதனை ஞாபக படுத்ட விரும்புகின்றோம். அத்துடன் இந்தியாவில் ஹிந்து மதவாதிகள் அடித்து உடைத்து துவம்சம் செய்த சரித்திரத்தையும் ஞ்பகபடுதுகின்றோம். மத வெறிபிடித்த புலிகள் ஐந்துக்கும் மேற்பட்ட பளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுகொண்டிருந்த நிர்ரயுதபாணி முஸ்லிம்களை கொன்றுகுவித்த கொடுமைகளுடன் ஒப்பிடும்போது இந்த புத்தபிக்குகளின் கூக்குரல் ஜுஜுபி.
06-08-2012, 05:41
 - Posted by Anonymous
சொலமன் பொய்யை திருப்பி திருப்பி எழுதுவதால் உண்மை ஆகி விடாது .....முஸ்லிம் குழுக்கள் பத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மீது நடத்திய கொலைகள் என்ன வகை ..அதற்கு பதிலாக தன் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் ....அண்ணே ,நீங்கள் வால் பிடிக்கும் உங்கள் மகிந்த என்ன ithuvarai இந்த பிக்குகள் மீது நடவடிக்கை edukka வில்லை ..இப்படி ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் மத குறு செய்து விட்டு தப்ப முடியுமா ....மேலும் மிக விரைவில் தம்புள்ள பள்ளி வாசல் அழிக்க மகிந்த கடந்த கிழமை ஆணை இட்டுள்ளார்..இதை அந்த பிக்குவும் uruthi செய்துள்ளார் ..பூனை கண் மூடினால் உலகம் இருண்டதக்க்கி விடாது ....
ஏன் உலகில் நடக்கும் குறைகளை கொண்டு சின்ஹல இனவாதிகளை காப்பாற்ற முனைகிரிர்கள்..எங்கு நடந்தாலும் thavru தன்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.