செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என ரணசிங்க பிரேமதாச எச்சரிக்கைவிடுத்தார் – மெஹ்ரோட்ரா

 

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என ரணசிங்க பிரேமதாச எச்சரிக்கைவிடுத்தார் – மெஹ்ரோட்ரா

 

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்கபிரேமதாச எச்சரிக்கை விடுத்ததாக இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் லக்ஹான்லால் மெஹ்ரோட்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதி காக்கும் படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என பிரேமதாச எச்சரிகi;க விடுத்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.

இந்திய - இலங்கை உறவுகள் தொடர்பில் அண்மையில் கொழும்பில்நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது மெஹ்ரோட்ரா இதனைத்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேடபிரதிநிதியான பி.ஜீ. தேஷ்முக்கிடம், பிரேமதாச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

1989 ஆண்டு ஜூலை இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் மத்திய அரசாங்கம்ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கா விட்டால் தனது அரசியல் வாழ்க்கைசூன்யமாகிவிடும் என பிரேமதாச தெரிவித்தார்.

1989ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதிக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால்தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என பிரேமதாச குறிப்பிட்டார்.

இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக போராடுவதற்கு தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கினார்.

இந்திய அமைதி காக்கும் படையினரை நாட்டை விட்டு வெளியேற்ற எந்தஎல்லைக்கும் செல்லத் தயார் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளைதுண்டித்துக் கொள்ளவும் தயார் எனவும் பிரேமதாச தெரிவித்தார் என மெஹ்ரோட்ராகுறிப்பிட்டுள்ளார்

தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையும் நோக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

1990ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி அனைத்து அமைதி காக்கும்படையினரும் இந்தியா திரும்பினர்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(15) அபிப்பிராயங்கள்
05-08-2012, 17:39
 - Posted by Solomon
// இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக போராடுவதற்கு தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கினார்.// புலிகள் ஓட்டுக்குளுகளாக சிங்கள ரானுவத்தயுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் , ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைங்கர்களையும் பலி எடுத்த உண்மை சரித்திரம்.
06-08-2012, 03:09
 - Posted by Anonymous
இது வெறும் செய்தி மட்டுமல்ல.. ..!முன்னாள் உயர்ஸ்தானிகர் லக்ஹான்லால் மெஹ்ரோட்ரா மட்டுமன்றி இன்னும் பலர் மறைந்த தலைவர் பிரேமதாச அவர்களின் -இந்திய உறவு -புலிகளுடனான உறவு -பற்றி இன்னும் அலசுவார்களாயின் இன்னும் பல "உண்மைகள்: வரலாம்..." வரதன்.
06-08-2012, 04:26
 - Posted by Solomon

முஸ்லிம் ஊர்காவல் படைகளையும் , டக்ளசை ஏசுபவர்கள் புலிகளின் ஒட்டுக்குழு சரித்தரதையும் மறக்க கூடாது. மிக கேவலாமான கூட்டம் அது.
06-08-2012, 05:43
 - Posted by Anonymous
புலிகள் ராணுவத்தோட சேர்ந்து தமிழ் பொதுமக்கள் மீது நடத்திய ஒரு தாக்குதல் சொல்லுங்கள் ...அண்ணே ...பொய் உங்கள் kula tholila ....
06-08-2012, 08:07
 - Posted by Solomon

போதுசந்தைகளில் வாய்த்த குண்டு. கொழும்பு , அனுராதபுரம் ,வவுனியா என்று இலங்கையில் இருக்கும் நகரம் எல்லாம் பாடசாலை குழந்தைகள், பொதுமக்கள் செல்லும் பஸ் வண்டிகளில் குண்டு வைத்து விடுதலை போராடம் நடத்தின சரித்திரம் மறந்துடீங்களா? எந்த இடத்தில் இவர்கள் குண்டு வைக்கவில்லை ?

வடக்கு கிழக்கு இணைந்து முஸ்லிம்களும் தமிழர்களும் வரதராஜ பெருமாளின் தலைமையின்கீழ் ஒற்றுமையாக இருந்தது பொறுக்காத பிரபாகரன் பிரேமதாசவுடன் (இலங்கை ராணுவத்துடன் ஒட்டுக்குழுவாக ) சேர்ந்து தமிழ் இளைங்கர்களையும் குடும்பங்களையும் கிராமம் கிராமமாக தேடித் தேடி கொலை செய்தது எப்பிடி உங்கள் புத்திக்கு படாமல் போனது ?
அதுசரி ஒண்டா ரெண்டா ?

கடைசியாக மேலே படத்தில் சிரித்துகொண்டிருக்கும் (பணமும் ஆயுதமும் பாதுகாப்பான தங்கள் இடமும் தந்த ) பிரேமதாசவுக்கு கடைசியாக சீதா நன்றிகடன் தெரியுமா ?. மறக்கவில்லையே ?. எத்தனை என்று நான் சொல்ல்வது ?. முடியல்லே கண்ணு !
06-08-2012, 10:07
 - Posted by Anonymous
நான் கேட்டது புலிகள் எப்போதாவது ராணுவத்தோட சேர்ந்து பொது மக்களை தாக்கினார்களா என்று.. இதற்க்கு நீங்கள் பதில் சொல்ல வில்லை ..கவச வாகனத்தில் இருந்து காட்டி கொடுத்தார்களா ????ராணுவத்துக்கு ... கொடுத்தார்களா ???? கடத்தல் நடவடிக்கைகளில் இடுபட்டர்களா ???
.வடக்கு கிழக்கு பகுதியில் ராணுவம் இலங்கை துணை படைகள் கொடூர தாக்குதல்கள் ,கொலைகள் ,கடத்தல்கள் நடத்திய போது தான் புலிகள் இவரை தடுபதர்க்காக ,இதன் வலியை புரிய வைபதர்க்காக சில இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள் ......இந்த தாக்குதல்கள் தான் தமிழர் தாயகத்தில் ராணுவ தாக்குதலகளை ஒரு குறுகிய காலத்துக்கு ஆவது நிறுத்தின ....
இந்த மாகாணசபை பற்றி இன்றைய பத்திரிகைகளுக்கு இந்திய ராணுவ அதிகாரி தெளிவான பதிலை வழங்கி இருக்கிறார் .இதில் புலிகள் குற்றவாளி இல்லை என சொல்லி இருக்கிறார் ..இதில் உள்ள குளறுபடிகள் ,,,,,தமிழர் தரப்பு எப்படி எமர்ரபட்டது என பலரும் எழுதி இருக்கிறார்கள் ..நான் நினைக்கிறன் அஸ்ரப் கூட இதில் பங்கு பற்ற வில்லை என்று ....உங்களுக்கு எபை பேசுவது தானே தொழில் ..இது தொடர்பில் தெளிவான விளக்கம் ஒன்றை தெளிவாக பல்கலை கழக விருவுரையாளர் கொடுத்த விளக்கத்தை கேட்டு பாருங்கள் ..இன்று தமிழர் சிவில் சமூகம் கூட தெளிவாக வலி யுறுத்தி இருக்கிறது அச்ப்க்ஸ்)
இந்த சந்தர்பத்தில் இந்திய அரசு தமிழ் ஆயுத குழுக்களை பயன்படுத்தி நடத்திய கொலைகள் ,சட்டவிரோத கடத்தல்கள் ,கற்பழிப்புகள் எல்லாம் என்ன கணக்கு ????...இந்த சந்தர்பத்தில் எந்த அப்பாவி பொது மகனையாவது புலிகள் கொன்ற ஒரு உதாரணம் சொல்லுங்கள் ...பொய் சொல்லாதிர்கள் ....
பிரேமதாசா வழமை போல பேசிக்கொண்டே புலிகளின் தலைமையை அழிக்க முயன்ர்ரர் ....புலிகள் முந்தி கொண்டார்கள் ...இதில் என்ன தவறு ...பிரேமதாசா தொடர்பில் எல்லோருக்கும் இது தெரியும் ..பொய் பேசுவதை விடுங்கள் ..நோன்பு காலத்தில் கூட இவளவு பொய் பேசுவது உங்கள் அறிவிலித்தனம்
06-08-2012, 12:08
 - Posted by Solomon

அட கொக்கா மக்கா,
//வடக்கு கிழக்கு இணைந்து முஸ்லிம்களும் தமிழர்களும் வரதராஜ பெருமாளின் தலைமையின்கீழ் ஒற்றுமையாக இருந்தது பொறுக்காத பிரபாகரன் பிரேமதாசவுடன் (இலங்கை ராணுவத்துடன் ஒட்டுக்குழுவாக ) சேர்ந்து தமிழ் இளைங்கர்களையும் குடும்பங்களையும் கிராமம் கிராமமாக தேடித் தேடி கொலை செய்தது எப்பிடி உங்கள் புத்திக்கு படாமல் போனது ?//

நான் எங்கள் ஊரில் தான் அந்த அட்டூழியங்கள் நடக்கும் பொது இருந்தேன் . எங்கள் ஊரில் தமிழ் பிரதேசத்தில் உயருடன் தமிழ் இளைன்கர்கள் புலிகளால் டயர் போட்டு எரிக்கப்படார்கள். அவர்கள் வீடுகளும் குடும்பங்களும் கிரனைக்கும் குங்கும் வைத்து அளிக்கப்படன. பொதுமக்கள் கூடுவதட்க்கு தடி போடப்பட்டு. பொதுமக்கள் கூடிய இடங்கள் கண்மூடி தனமாக தாகப்படன

புலிகள் இலங்கை அரசாங்கத்து கவசவாகனகளில், "பிக்கப் " கலீல் ராஜ பவனி வந்து அராஜககம் செய்தது மறக்கவில்ல்வில்லை. அரச வாகனகளில் தானே கிழக்கில் ஓடித்திரிந்தார்கள். கட்டிகொடுப்பது புலிகளுக்கு புதிய தொழில் போல் சொல்லுகிறீர்கள்.? . இந்த சிங்கள அரச வாகனகளில் புலிகள் வேறு என்ன தொழில் செய்தார்கள். சமூக சேவையா.? சிங்கள ராணுவம் காவல் நிற்க்க தமிழ் , முஸ்லிம் வீடுகளில் தேடுதல் நடத்தி நடத்திய அட்டூழியங்கள் கொஞ்சமா ?. மறக்கவில்லை. அவர்கள் பாவித்த தூசன வார்த்தைகள் கூட மனதில் நிற்கிறது.

நீங்கள் கேட்டதற்கு சரியாக நோன்பு காலத்தில் பதில் சொன்னேனா ?

கற்பிணி பெண்ணை தட்கொலியாயாளியாக அனுப்பிய புலிகளுக்கும் , அதே மாதிரி மனித உயர்களை மதியாத அல்கைடா / தலிபான்களுக்கும் என்ன வித்தியாசம்.?

//புலிகள் முந்தி கொண்டார்கள் ...இதில் என்ன தவறு ..// ஒரு தவறும் இல்லை. கொலை தவிர வேறு எதையும் சாதிகாதவர்களிடம் வேறு எதனை எதிர் பார்க்கலாம்.

தாங்கள் வாழவேண்டும் என்பதற்காக ஆயரம் தமிழ் உயர்களை "துரோகிகள்" என்ற ஒரே சொல்லில் போட்டு தள்ளிய விடுதலை என்ற பெயரை கொச்சை படுத்திய கொலையாளிகள் .
06-08-2012, 19:43
 - Posted by Irem
சொலமன், உங்களுக்கு மனநலம் சரியில்லை என்று நினைகிறேன். சீக்கிரம் ஒரு நல்ல வைத்தியரை நாடுங்கள். நேற்றுப் பார்த்தால் உயிர் நீத்த தமிழர்களை ஒழிந்தார்கள் என்று கொண்டாடினீர்கள். இன்று உயிரிழந்த தமிழர்களுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்கள். இந்த நோய்க்குப் பெயர் அம்னிஷியா. மனநலம் சரியில்லாதவர் கையில் கணினி வேறு மிகவும் ஆபத்து. வெளிநாட்டில் வாழும் தமிழர்களை கேவலமாகப் பேசும் நீங்களே வெளிநாட்டில் ???? கண்டிப்பாக படித்து வந்திருக்க வாய்ப்பில்லை. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கிறீர்களே உங்கள் பூர்விகம் எது ? இலங்கையின் ஆதி குடிகள் தமிழரும் ,சிங்களவரும் மட்டுமே . தமிழர்களைத் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று பலதடவைகள் ஏளனமாக கருத்து எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் எங்கிருந்து ?????
06-08-2012, 20:00
 - Posted by Anonymous
அண்ணே,பொய் பேசுவது ,.. மாற்றி பேசுவது உங்கள் .. தொழில் ஆகி விட்டது >>>>>>>
உங்களுக்கு அடிப்படை அறிவு இல்லாமல் வெறும் பொய்களை வைத்து புலி பூச்சாண்டி கட்டுகிரிர்கள் ....நீங்கள் சொன்ன மாதிரி புலிகள் மற்றைய குழுக்கள் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து செய்த மாதிரி செய்திரிந்தால் இன்று புலிகள் எங்கள் மக்களின் மனங்களில் இருந்து இருக்க மாட்டார்கள் ..மாறாக புலிகள் அமைப்பு இல்லாத இன்றைய களத்தில் கூட தமிழ் தரப்புக்கு விழும் வாக்குகள் புலிகளுக்காக அவர்களின் தியாகங்களுக்கு ஆக விழும் வாக்குகள் தான்..புலிகள் அப்படி தமிழர்களை காட்டி கொடுக்க வெளிக்கிட்டு இருந்தால் இலங்கை அரசு எவளவு சந்தோஷ பட்டு இருக்கும் ....இலங்கையில் பிரச்சனை இல்லை என்று நிருபித்து இருக்கும் ....
என் வரதராஜ பெருமாள் தமிழீழ பிரகடனம் செய்தார் ?????? ஐம்பது தடவைகளுக்கு மேல் இலங்கை அரசோடு பேசியும் அவர்கள் தீர்வு சரியாக தரவில்லை என ... அவரே சொல்லி இருக்கிறார் ????? இன்றைய GTN செய்தி பாருங்கள் ...கரிகரன் தெளிவாக சொல்லி இருக்கிறார் ..தங்கள் சொந்த நலனை அடைவதற்காக இது செய்யபட்டது என்று ????
இந்த கிழக்கு மாகாணசபை ஏன் காணி அபகரிப்பை தடுக்கவில்லை ???? முஸ்லிம் குழுக்கள் நடத்திய கோவில் கொலைகள் ,கிராம அழிப்புகள் உட்பட்ட விடயங்களை தடுக்கவில்லை ???ஏன் அஸ்ரப் இதை ஏற்று கொள்ள வில்லை ???// ஒற்றுமையாக இருந்ததாக நீங்கள் சொல்லுவது உங்கள் அடிமட்ட கற்பனை ..புலிகள் ஒடுக்கபட்டு இருந்த இந்திய ஆமி நேரம் ...நீங்கள் சொன்ன குழுக்கள் நடத்திய கொலைகள் ,கற்பழிப்புகள் ,கடத்தல்கள் இன்றும் எல்லா மக்களுக்கும் நினைவு இருக்கிறது ......முஸ்லிம் குழுக்கள் துண்ட்டி விடபட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் .....
உங்களுக்கு நான் சவால் விடுகிறேன் ..இலங்கை ராணுவத்தோட சேர்ந்து புலிகள் கிராமம் ஒன்றில் நடத்திய கொலை ஒன்றின் பெயர் சொல்லுங்கள் ..உங்கள் கோமாளி மந்திரி மார் மாதிரி கற்பனையில் கதைகதிர்கள் ???
வரதர்ச பெருமாள் அடாவடியாக சேர்த்த ராணுவ படை புலிகளால் கலைக்க பட்டது ..இதன் பொது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் தான் ..ஆனால் இந்த குழுக்கள் இந்திய ,இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து நடத்திய கொலைகள் ,காட்டி கொடுப்புகள் ,துரோகம் ,கடத்தல்கள் ,களவுகள் என்பவற்றை தடுக்க இதை தவீர வேறு வழி இருக்க வில்லை ....வெள்ளை வான் கலாசாரம் ஒழிந்து போனதற்கு இது ஒரு காரணம்.....
புலிகள் தற்கொலை போராளிகள் ஒரு போதும் கர்ப்பிணி பெண் இருக்க வில்லை ..இது ஒன்று போதும் உங்களை நிருபிப்தர்க்கு ..;; டக்லஸ் மீது தாக்குதல் நடத்திய பெண் மீது ஆரம்பத்தில் சந்தேகம் சொன்ன போதும் இறுதியில் அது பொய் என இலங்கை அரசு தெளிவாக அறிவித்து விட்டது .....உங்கள் சொந்த மக்களையே காட்டி கொடுக்கும் உங்களுக்கு அவர்களின் தியக்க்கங்கள் விளங்காது தான் .......
புலிகளுக்கு என்றைக்குமே ராணுவம் பாதுகாப்பு தர வேண்டி ஏற்பட வில்லை ...முஸ்லிம் குழுக்கள் உடபட மற்றய குழுக்கள் சின்ஹல அரசுக்காக செய்தமாதிரி எப்போதாவது தமிழர்களை காட்டி கொடுத்த ,கற்பழித்த ,கடத்திய ,கொள்கையில் இருந்து விலகிய ஒரு சம்பவம் சொல்லுங்கள் என்று கேட்டன் ..இன்னும் பதில் இல்லை .......இலங்கை அரசே சொல்ல்லாத புது கதை ..கிராமங்களை தாக்கினார்கள் என்பது .........புலிகள் வரலாற்றில் தப்பு செய்தவர்கள் தண்டிக்க பட்டனரே தவீர ஒரு போதும் அந்த குடும்ப உறுப்பினர்கள் தண்டிக்க பட வில்லை ......இது எல்லோருக்கும் தெரியும்
நீங்கள் பொய்களுக்கு மேல் பொய் பேசுவது உங்கள் சமூகத்தையே கேவல படுத்தி விடும் ..........அண்ணே ....பிறமதச பேசும் வரை பேசி தமிழர்களை தலைமையை இல்லாதொழிக்கும் கைங்கரியத்தில் அவர் இறங்கிய பொது ராணுவ அமைப்பான புலிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதில் என்ன தப்பு ??/? புலிகளுக்கு பிரேமதாசா அரசு பணம் ,வாகனம் கொடுத்தது உண்மை ..இது புலிகள் வெளிபடையாக சொன்னார்கள் ..களவாக பாதுகாப்பு அமைச்சில் வங்கி கொண்டு தமிழர்களை கொல்ல கொடுக்க வில்லை ......
07-08-2012, 01:22
 - Posted by Anonymous User
அட கொக்கா மக்கா சிங்களப் படையுடன் சேர்ந்து எத்தனை தமிழ் கிராமங்களை கிழக்கில் தீயிட்டு சாம்பலாக்கியது முஸ்லீம் ஊர்காவல் படை, கிரான் இராணுவ முகாமில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் என்று பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்த காடையர் கூட்டம் யார்??? சரி கடந்த காலத்தை விட்டு நிகழ் காலத்தை பார்ப்போம் முள்ளிவாய்க்கால் கொலைகாரர் மாடு மேய்க்க வேன்டியவரை மந்திரியாக்கிவிட, மன்னார் நீதிமன்றத்தை தாக்கவில்லையா,?? மன்னாரில் அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தது, முல்லைத்தீவில் அபகரிப்பு , வன்னியில் சகல கால்நடைத் திருட்டுக்களை செய்பவர் யார்?? சிறுவர்களை கடத்தி மதம்மாற்றுபவர் யார்?? மாற்றுதிறனாளியை கற்பழிப்பது யார்?? இன்று இப்படியென்றால் அன்று எப்படி நடந்திருப்பார்கள் கற்ப்பிணி பெண்களை புலிகள் தற்கொலைப் படையாக அனுப்பியவர்களாம் அது யாராப்பா, உனது உறவினரா, அல்லது ???, அது சரி நீதி நியாயத்தை பற்றி பேசும் உமக்கு ஏன் தெரியவில்லை முள்ளி வாய்க்காலில் 40000, மக்களை கொலைசெய்து நரமாமிசம் தின்றவர் முதலாவது மனைவியை கொலை செய்ததை பற்றி, அட அவரைப்பற்றி நாங்கள் என்ன சொல்லுவது நாங்களும் அதே பக்கம் என்று சொல்லவருகின்றீரோ, ராஜன்.
07-08-2012, 09:46
 - Posted by Anonymous User

// இன்று புலிகள் எங்கள் மக்களின் மனங்களில் இருந்து இருக்க மாட்டார்கள் ..மாறாக புலிகள் அமைப்பு இல்லாத இன்றைய களத்தில் கூட தமிழ் தரப்புக்கு விழும் வாக்குகள் புலிகளுக்காக அவர்களின் தியாகங்களுக்கு ஆக விழும் வாக்குகள் தான்.// அஹா ..தமிழ் ஈழம் எங்கள் யாப்பிலேயே இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் கட்ட்சிக்கு மக்கள் போடும் வாக்கு எப்பிடி "புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்" என்று பல உயர்களை பலி எடுத்தவர்களுக்கு விழும் வாக்காக கருதுவீர்கள்.

போன தடவை வடக்கு கிழக்கு இணையாத மாகாணத்தில் போட்டி இடமாட்டோம் என்று வீர வசனம் பேசிய TNA இந்த முறை அதை பற்றி ஒரு வார்த்தை கூறாமல் "தொப்பி " மாற்றி த்ருதலில் கொக்கரிப்பது உங்கள் அதி புத்தி சாலித்தன மூளைக்கு படவில்லையா?

// ஏன் அஸ்ரப் இதை ஏற்று கொள்ள வில்லை ???// தலைவர் அஷ்ரப் வரதராஜ பெருமாள் போன்ற மனித கொலைகளை விரும்பாத முஸ்லிம்களை துரத்தி கொள்ளை அடிக்காத, பளிவாசல்களில் கொலைசெய்யாத தமிழ் தலைவர்களுடன் உடன் பாட்டின் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு இணைந்த மாகான சபையில் முஸ்லிம் காங்கிரசு போட்டி இட ஏற்றுக்கொண்டார். முஸ்லிம்களை விரட்டி விட்டு முப்பது வருடங்கள் முஸ்லிம்கள் என்றால் யாரு என்று வளர்ந்த வடக்கு மாந்தர் உங்களுக்கு முஸ்லிம்கள் பற்றி பேச ஒரு கருகதையும் இல்லை.

கிழக்கில் மன்னார் ஆயர் போன்றோ , ரிச்சர் பதியுதீன் போன்றோ அக்கப்போர் நடக்கும் அளவுக்கு கிழக்கில் துவேசம் இல்லை . அண்ணன் கருணா , பிள்ளையான் போன்றுடன் எங்கள் முஸ்லிம் தலைமைகளும் கொள்கை முரண் பாடு இருந்தாலும் ஒன்று சேர்ந்து வாழும் தேவையை உணர்ந்தே செயல் படுகின்றோம். சுரேஷ் பிரேமா சந்திரன் போன்றோர் கனேடிய வானொலிகளில் கொடுக்கும் பெரும் துவேச கதைகள் அவர்கள் எதிர்பார்ர்க்கும் இன ஒட்ட்ருமைக்கு வலு சேர்பதாக இல்லை.

// புலிகள் தற்கொலை போராளிகள் ஒரு போதும் கர்ப்பிணி பெண் இருக்க வில்லை . // அப்போ சரத் பொன்சேகாவை கொல்ல முயன்று மரணித்துப்போன கற்பிணி தற்கொலை போராளி யாரோ ? தமிழ் சிசு பிறக்கும் முன்பே தன தமிழ் ஈழத்துக்காக மாவீரனானது என்று வீரம் பேசினு ?.

வரதஜற பெருமாளை தீர்துகாட்ட சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து காட்டி கொடுக்காமல் வேறு எந்த தொழில் புலிகள் அந்த காலத்தில் செய்தார்கள். அவர்கள் கடத்திப்போய் போட்டு தள்ளிய தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை ஆயரத்தை தாண்டும். பாண்டிருப்பு , களுதாவளை, மண்முனை ,கல்முனை உடையார் வீதி, மட்டுமல்ல காரைதீவு கிராமத்தை புலிகள் சூறையாடிய பொது முஸ்லிம்கள் புதினம் பார்த்த காலஞக்ளையும் மறக்கவில்லை. ஆட்கடத்தல் , கப்பம் கேட்டடல் புலிகளின் கொள்கை களில் ஒன்று என்பது கைவிரல் சூப்பும் குழந்தைகளுக்கும் தெரிந்த உண்மை.,.

எல்லை கிராமனகளில் வாழ்ந்த சிங்கள குடும்பங்களை உயருடன் கிழித்து எறிந்த ஈவு இரக்கம் இலாத அரக்கர் கூட்டம்.

புலிகள் மட்டுமல்ல புலிகள் சார்ந்த "பணம் பிடிங்கிகளும்"மனித தன்மையாக நடந்ததாக சரித்திரமே இல்லை.

//.புலிகள் வரலாற்றில் தப்பு செய்தவர்கள் தண்டிக்க பட்டனரே தவீர ஒரு போதும் அந்த குடும்ப உறுப்பினர்கள் தண்டிக்க பட வில்லை // அப்போ விடுதலை புலிகள் மற்றைய இயக்கங்களை தடை செய்த பொது மாற்று இயக்கத்தில் இருந்த சகோதரர்களை அவர்களின் உடன் பிறப்புக்கலலேயே கொலை செய்ய வைத்தது எந்த கணக்கில் சேரும்.

//களவாக பாதுகாப்பு அமைச்சில் வங்கி கொண்டு தமிழர்களை கொல்ல கொடுக்க வில்லை ......// களவாக சந்திரிகா முதல் ரணில் வரை வாங்கி "துரோகிகளை" போட்டு தள்ளசிங்கள ராணுவம் உதவிய கதைகள் மறந்துவிட முடியாது.

//இலங்கையின் ஆதி குடிகள் தமிழரும் ,சிங்களவரும் மட்டுமே . தமிழர்களைத் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று பலதடவைகள் ஏளனமாக கருத்து எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் எங்கிருந்து ?????// இப்படி ஒரு போதும் எழுதியதில்லை. என் உடலில் ஓடுவது ஒரு ஹிந்து ரத்தம் என்று பெருமையாக சொல்லி இருக்கிறேன். இலங்கை முஸ்லிம் கள் இலங்கைக்கு வந்த அராபிய இஸ்லாமியகளுக்கும் இலங்கை வாழ் ஹிந்து தமிழ் தாய்க்கும் பிறந்த வழி தோன்றல்களே. பல ஆயரம் வருடங்களுக்கு முன் இருந்து இன்று வரை இலங்கை முஸ்லிம்களின் கலை கலாச்சாரத்தில் ஹிந்து கலாச்சாரம் பின்னி பிணைந்து இருக்கின்றது. புலிகள் வந்து முழுமையாக கூறு போடும்வரை சிறு குழப்பங்கள் இருந்தாலும் "தமிழனாய்" வாழ்ந்தோம்.


07-08-2012, 20:28
 - Posted by Anonymous
நித்திரை கொள்பவன் போல நடிக்கும் உங்களை எழுப்ப முடியாது ???.....உங்களை மாதிரி ஆக்கள் என்னதான் சொன்னாலும் தமிழ் கூடமைப்புக்கு விழும் வாக்குகள் புலிகளுக்கு விழும் வாக்குகள் தான்..இது சின்ஹல அரசு முதல் கொண்டு எல்லோருக்கும் தெரியும் ......இதை தமிழ் கூட்டமைப்பு பாராள மன்ற உறுபினர்களே ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் ...என் நாங்கள் கூட அந்த காரணத்துக்காக தான் வாக்களிக்கிறோம்
தமிழீழ கோரிக்கை பற்றி இப்போது அவர்கள் விளக்கம் இலங்கை நீதித்துறை சம்பத பட்ட விடயம் ....இது கூட புரிந்து கொள்ளாமல் நட்டிக்கும் நீங்கள் உண்மையான மன நலம் குன்றிய ஒருவர் தான் .....
நீங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி ஒரு வார்த்தை கூறவில்லை என்று சொல்வது மிக கீழ்த்தரமான பொய்......முதலாவது கூட்டத்திலேயே தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்புக்கோன ஆணையகத்தான் வாக்கு கேட்டது ....கடந்த தடவை .....புலிகள் இருந்த காலம் ....அதற்குரிய தேவை இருக்க வில்லை ...மாறாக சின்ஹல அரசு துணை குழுக்கள் (உங்கள் அண்ணன் மார் ) பயன்படுத்தி கொலை,கடத்தல் செய்து கொண்டு இருந்த காலம்..தமிழ் கூட்டமைப்பு எத்தனையோ புத்தி ஈவிகளை இழந்த காலம் ....இதில் என்ன கொள்கை மாற்றம்?????????
தெளிவக எந்த கொள்கைக்காக போன முறை கேட்க்கவில்லோயோ அந்த கொள்கைக்காக கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இருக்கிறது ......தமிழ் சிவில் சமூகமும் இதை ஏற்று கொண்டு இருக்கிறது ??????மாறாக தொப்பி பிரட்டி என்றால் அரசாங்கத்தை எதிர்த்து அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் வென்று அடுத்த நாளே அரசாங்கத்தில் சேர்ந்து விடுவது அல்லது ஒரு கிழமைக்கு முன்னால் அரசை விமர்சித்து அடுத்த நாளே அப்படி சொல்லவில்லை என ஊடகங்கள் மீது பலி போடுவது என பொருள் படும் ....உங்களை பாருங்கள் இன்று ஒரு பொய் ..பிறகு தலைப்புக்கு சமந்தமில்லாமல் அடுத்தநாள் மற்றுமொரு பொய் என நீங்களே மிக சிறந்த ஊதர்ணம் .....
வரதராஜ பெருமாள் என்ன செய்தற் என எங்களுக்கு தெரியும் ..அவர் செய்த கொலைகள் ,கடத்தல்கள் ,காட்டி கொடுப்புகள் தான் அவரை தமிழ் அரசியல் உலகில் இன்று ஒதுக்கி வைத்திருகிறது ????? தமிழ் அரசியல் விரோத்திகளை உங்கள் நண்பர்களாக கதைப்பது உங்கள் எதிரிக்கு எதிரி அரசியல் ?????
கடந்த தடவை மாகாணசபை பற்றி நிறைய கதைத்த நீங்கள் இந்த தடவை எதுவும் பேசவில்லை ....என் உங்கள் நல்லவர் தமீழீழ பிரகடனம் செய்தற் என சொல்லவில்லை >>>இதுவும் உங்கள் தனமா ....புலிகள் கொலை செய்தார்கள் ,துரத்தினார்கள் என திருப்பி திருப்பி சொல்லுவதால் எந்த பிரஜோசனமும் இல்லை ..மாறாக அதற்க்கு காரணமான உங்கள் தரப்பு கொலைகள் ,கடத்தல்கள் ,கற்பழிப்புகள் பற்றி தெளிவக ஒத்து கொள்ள வேணும் ....கடந்த கிழமை கதாந்குடியில் முஸ்லிம்கள் கொலை செய்ய பட்ட தினம் .....நாங்கள் இதை கண்டிக்க தயார் ..ஆனால் இதே பள்ளிக்கு முன்னால் 21 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டத்தை எப்படி மறப்பது ....இதற்க்கு முன் தமிழ் கோவில்களில் நடத்தப்பட்ட தாக்குதலை எப்படி நியாயம் செய்வது ???????????
வடக்கில் முஸ்லிம்கள் நிலைமை குறித்து குருபரன் மிக அருமையான இரு கட்டுரைகள் எழுதி இருந்தார் >>>>>>மன்னர் பொது அமைப்புகள் எழுதிய மடல் என்பன மிக சிறந்த ஆதாரம்.....படிக்க தெரிந்தால் படித்து பாருங்கள் ..உண்மை புரியும் .....
சுரேஷ் உட்பட எல்லோரும் சொல்லும் விடயங்களில் ஒரு உண்மை இருக்கிறது ...அவர்கள் எதாவது பொய் சொல்லு கிறார்களா ????/ அவர்கள் உண்மையை சொன்னால் அதை நீங்கள் இன துவேசம் என்கிரிகள் ......மாறாக இலங்கை அரசு செய்வதை ,பாள்ளிகள் இடிப்பதை ஒன்றும் சொல்லவதில்லை ..
இங்கே கருணா ,பிள்ளயான் என்போர் கருவிகள் ..அவர்கள் இந்த தேர்தலுடன் காணமல் போய் விடுவார்கள் ....இந்த அரசு மீதும் உங்கள் அண்ணன் மர மீதும் முஸ்லிம்கள் எவளவு கோபமாக இருக்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும் ...
உங்களுக்கு வசிக்கும்,கேட்க்கும் ஆற்றல் குறைவு ..இலங்கை ராணுவ இணைய தளம் பாருங்கள் ....இந்த கர்ப்பிணி விடயத்தை அவர்களே நிராகரித்து இருக்கிறார்கள் ...உங்களை மாதிரி சந்தற்பவதிகளுக்கு எப்படி தான் கெட்ட எண்ணங்கள் இருக்கும் ...
உங்களுக்கு பொய் சொல்ல வாய் கூசுவதில்லிய ???? .....புலிகள் தாக்குதல் நடத்தியவர்கள் அப்பாவிகளா என்பதற்கு பதில் சொல்லவில்லை //////.....சின்ஹல இராணுவத்தோடு சேர்ந்து காட்டி கொடுக்க வேண்டிய தேவை இல்லை ....உங்கள் அண்ணன் பிள்ளையன் இப்போது தமிழ் கூட்டமைப்பில் இர்ருக்கும் உங்கள் வரதராஜ பெருமாளின் கூட்டாளி துறைரத்னம் அவர்களின் அமைப்பு (அவர் மனம் திருந்தி விட்டார் என்பது வேறு விடயம் ) பற்றி அவர்கள் கடந்த காலங்களில் செய்த கொலைகள் ,கடத்தல்கள் ,கற்பழிப்புகள் பற்றி சொல்லி திரிகிறார் ..அது பொய்யா???/ என வலு கட்டாயமாக வரதராஜ பெருமாள் ராணுவம் ஒன்றை கட்டி அமைத்தார் >>>>>>>>>எங்கே புலிகள் தமிழர்களை பிடித்து இராணுவத்திடம் கொடுத்தனர் .....தமிழ் பெண்களை கற்பழிக்க ராணுவத்துக்கு இடம் கொடுத்தனர் .......ராணுவம் கொலை செய்ய காவல் நின்றனர் ??????? எங்கே தலையாட்டிகளாக இருந்தனர் ???????/ இவை புலிகள் தவிர்ந்த மற்றய குழுக்கள் செய்த வேலை ??????ராணுவதுக்குகாக கொலை செய்தனர் ?????
புலிகள் கொலை செய்த சின்ஹல மக்கள் அப்பாவிகள் தான் ...இது பிற்காலத்தில் புலிகள் பெரிதும் தவிர்த்து வந்தார்கள் ??????//
அப்போது வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ,கடத்தபட்ட ,கற்பளிகபட்ட பல் ஆயிரகணக்கான மக்கள் ...........அதற்கு காரணமான சின்ஹல அரசு ,சின்ஹல ராணுவம் எல்லாம் புனிதர்களா?????இதற்க்கு துணை போன ஒட்டு படைகள் எப்படி உங்களுக்கு அண்ணன் ஆனார்கள் ??????இது தான் சந்தர்பவாதம் ??????
மீண்டும் பொய் சொல்லாதிர்கள் ..ஒரு போதும் சகோதரர் ,நண்பர் என்பதற்காக புலிகள் தண்டிக்க வில்லை ????????
இலங்கை அரசிடம் காசு வாங்கி புலிகள் மற்றய அமைப்புகள் போல எங்கள் கோரிக்கைகளை கை விட்டல் முதலில் சந்தோசபடுவது இலங்கை அரசு தான் ????என் இந்திய கூட புலிகளுக்கு காசு கொடுக்க தயாராக இருந்தது ???? இப்படி பொய் பேசி பேசி தமிழர்களை காட்டி கொடுத்து கொலை செய்து கடத்தி கற்பழித்து கோவில்களை அழித்து கிராமங்களை இல்லாமல் ஆக்கி திரிந்த பொது புலிகள் பதிலுக்கு எதாவது செய்தல் அதை வியாபாரமாக்கி திரிந்த உங்கள் நிலைமை இன்று ???????????? பள்ளி வாசலை உஅடைக்க மகிதர் ஆணை வழங்கி ஒரு கிழமை ,ஒரு முஸ்லிம் வியாபாரியும் வாய் திறக்க வில்லை ???????? எல்லாம் காலம் தான்
08-08-2012, 03:44
 - Posted by Anonymous User
ஐயோ ..ஐயோ...இந்த விளக்கம் இல்லாத புள்ளைகளோட பெரிய "கரதர".

குஞ்சு.! முதலாவது நீங்கள் கூறியது போல் TNA இக்கு எதிராக வழக்கு போடவில்லை (குளோபல் தமிழ் நியூஸ் இல் தேடிப்பார்க்கவும்).தமிழ் அரசு கட்சியின் யாப்பை யாரோ ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து எங்களை வம்பில் மட்டிவிடுவதட்காக செய்த சதி என்று கண்ணீர் விட்டு கதறி அழுத கதை முடியவில்லை. "ஒரு நாட்டுக்குள்" தீர்வு தானே "லேட்டஸ்ட் தீம் ". TNA இன் தலைவர் சம்பந்தரோட கட்சிதான தமிழ் அரசு கட்சி. அவரே சிங்க கொடி பிடிபதுவும், இலங்கை பிரஜைகள் நாங்கள் என்று முழங்குவது என்ன கொள்கையை காட்டுகிறது?. புலிகள் இப்போது வாலாட்ட முடிந்தால் அவர்கள் இவர்களை போட்டு தள்ளிய பட்டியலில் ஐயாவும் சேர்ந்திருப்பார். கதையோட கதையா TNA ஐ ஒரு சாதாரண அரசியல் கட்சியாக பதிவு செய்யவே வக்கிலாத கூட்டம் அவர்களுக்கு ஒரு யாப்பு ஒரு கேடா ?. சுரேஷ் ஒருகதை சொன்னால் சம்பந்தர் "அப்பிடி இல்லை" என்று சொல்லி விளக்கம் தருவார். அந்த விளக்கத்துக்கு சுரேஷ் "கட்ட்சியின் ஒற்றுமைக்காக" என்று அடுத்த விளக்கம் தந்து "தொப்பி" பிரட்டுவார். இதுதானே நடக்குது. அதுசரி "வட்டுக்கோட்டை தீர்மானம்" தொடங்கி இதுவரை இந்த அரசியல் வாதிகள் வாங்கிய ஆணைகள் எல்லாம் என்ன ஆச்சு ?. ஆணை வாங்கியவரையே புலிகள் போட்டுதள்ளிவிடார்கள். பிறகு ?

//எந்த கொள்கைக்காக போன முறை கேட்க்கவில்லோயோ அந்த கொள்கைக்காக கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இருக்கிறது // அது என்ன கொள்கையுங்கோ ?. கொள்கையே இல்லாத குழம்பின கொள்கையா.?. தெளிவாக கேட்டால் சுரேஷ் பிரமே சந்திரனின் கொள்கையா ? சம்பந்தரின் கொள்கையா?..சிவாஜி லிங்கத்தின் கொள்கையா? தேறுதல் விங்க்சாபனதிலேயே இல்லாத கொள்கையா? கொள்கையே இல்லாமல் கொள்கைக்காக கேட்கிர்ரர்களா?

//மன்னர் பொது அமைப்புகள் எழுதிய மடல்// அந்த மடல் வந்த பொது என் நண்பர்கள் சொன்ன ஒருவிடயம். இந்த "பொது அமைப்புகளில்" எத்தனை முஸ்லிம் அமைப்புகள் இருந்தன என்று சொல்லுங்கள்.? யாருக்கு காது குத்த பாக்குறீங்க.?

//சுரேஷ் உட்பட எல்லோரும் சொல்லும் விடயங்களில் ஒரு உண்மை இருக்கிறது ...அவர்கள் எதாவது பொய் சொல்லு கிறார்களா ????/ // அவர் சொல்லுவதை அவருடைய தலைவர் சம்பந்தனே பிழை என்று சொல்லுகிறார். பிறகு நாங்க அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு சொல்லனுமாக்கும். அந்த ஆள் கிழக்கில் முஸ்லிம்களையும் ஹிந்டுத்த்க்ளையும் "வடக்கில்" செய்ததுபோல் அவர் செய்ய முற்படுகிறார் என்பது மட்டும் அவருடைய வானொலி பேட்டிகள் பறை சாற்றி நிற்கின்றன !. சிலவேளை ஆத்திரமாக கூடவரும். பிறகு முஸ்லிம் களுடன் வாழ்ந்து பழகிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தர் அதற்க்கு மறுதலிப்பார் என்று மன சாந்தி அடைந்து கொள்வேன்.

//உங்கள் வரதராஜ பெருமாளின் கூட்டாளி துறைரத்னம் அவர்களின் அமைப்பு (அவர் மனம் திருந்தி விட்டார் என்பது வேறு விடயம் ) பற்றி அவர்கள் கடந்த காலங்களில் செய்த கொலைகள் ,கடத்தல்கள் ,கற்பழிப்புகள் பற்றி சொல்லி திரிகிறார் ..அது பொய்யா???/ // TNA கூட்டமைப்பில் சம்பந்தர் சம்பந்தமானவர்கள் தவிர மிகுதி எல்லோருமே ஒரு காலத்தில் பயங்கரவாத அம்மைபுக்கள் என்று கூறப்பட்ட நீங்கள் கூறும் செய்யகளை செய்த கூடங்களின் தலைவர்கள் தானே . பிறகு என்ன ?

//வலு கட்டாயமாக வரதராஜ பெருமாள் ராணுவம் ஒன்றை கட்டி அமைத்தார் // பிரபாகன் மட்டும் என்ன பாடசாலை செல்லும் பிள்ளைகளை வலுகடாயமாக கடத்தி கொண்டு போய் சேர்க்காமல் 'பிள்ளைகாள் நான்றாக படிக்கவேண்டும் . என்னைக்குதான் படிக்க வரல்ல . நீங்களாவது படிச்சு நல்ல புள்ளைகளாக வாங்கோ " என்று நல் மொழி கூறினாரா?.

//ராணுவம் கொலை செய்ய காவல் நின்றனர் ??????? எங்கே தலையாட்டிகளாக இருந்தனர் ???????/// கிழக்கில் இந்திய ராணுவம் இருந்தகாலங்களில் புலிகள் எங்கள் கண்ணனுக்கு முன்னால் நீங்கள் கூறுவதை விட மோசமாக செய்தார்கள். அவர்களின் "துரோகிகள்" "காடிகொடுபவர்கள்" என்று வசனம் பேசியது இன்னமும் மனதில் நிற்கிறது. எத்தனை தமிழ் இளைன்கர்கள் "கதறினார்கள்" எங்களை விடுங்கள் அண்ணா . தெரியாமல் செய்து விட்டோம் என்று. இலங்கை ராணுவ வாகனங்களில் வந்து , அவர்களின் பாதுகாபுடனே புலிகள் செய்த கொடுமைகள் மன்னிக்க பட முடியாதவை. இதில் யார் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று நாங்களே குழம்பிப்போனோம் என்றால் பாருங்களேன். ஹி ஹி ..



08-08-2012, 11:38
 - Posted by Anonymous
அண்ணே ,எங்களுக்கு விளக்கம் சொல்ல முதல் நீங்கள் எதாவது முறையில் விளக்கம் பெற முயற்சியின்கள்.இங்கே தமிழர்கள் புலிகள் உட்பட இலங்கை அரசு சரியான தீர்வு தந்திருந்தால் தனி நாடு குறித்து பேசி இருக்க மாட்டார்கள் ...இன்று வரை எந்த அரசாவது ஒரு நல்ல தீர்வு என்றாலும் முன் வைத்து இருகிறதா ???? தலைவரை பொருத்தமட்டில் இலங்கை அரசு என்றைக்குமே உள்நாட்டில் தீர்வு தராது என்பதை உண்மையாக நம்பினர் ....இது தான் உண்மை ...இதே விடயத்தை சம்பதணும் சொல்லி இருக்கிறார் .....இங்கே மீண்டும் ஒரு தடவை இலங்கை அரசு உல் நாட்டில் தீர்வு தராது என்பதை நிருபிக்க வேண்டி இருக்கிறது...ஆனால் இலங்கை அரசு சுய நிர்ணய தீர்வு தருமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம் ..ஆனால் இலங்கை அரசு என்றும் தீர்வு தராது .....தமிழ் கூடமைப்பு செய்வது எல்லாம் சரி கிடையாது ..ஆனால் இன்றைய இடைவெளியில் தமிழர் அபிலாசைகளை பிரதி பலிக்கும் ஒரே கட்சி அவர்கள் மட்டும் தான் .....1977 இலிருந்து இன்று வரை தமிழர் தரப்பின் நிலைபாடுகள் மாறவில்லை ..இலங்கை அரசு சரியான தீர்வு தராது என உண்மையாக நம்புகின்றோம் ..அதுதான் உண்மை ..ஒரு அரசியல் கட்சியில் பல்வேறு கருத்துகள் இருபது வழமை ..ஆனால் கொள்கை சார்ந்து எந்த முரண்பாடுகளும் இது வரை ஏற்பட வில்லை .....முஸ்லிம் அரசியல் தலைமையே இதை இன்று வரவேற்கிறது .....மாறி மாறி வரும் வேறுபட்ட கொள்கை உடைய அரசில் சேர்ந்து புது கதை பேசும் உங்களுக்கு இது பற்றி அறிவு இருக்காது தான்
உங்கள் முட்டல் தனங்களுக்கு என்ன பதில் சொல்லுவது ..போன தடவை என்ன கேட்கவில்லை என்பதை தெளிவாக சொன்ன பிறக்கும் இப்போது என் கேட்கிறார்கள் என்ற அரசியல் சூழ்நிலையை சொன்னபிறக்கும் ...இப்படி பேசினால் ..அது சரி வியாபார புத்தியில் பேசும் உங்களுக்கு கொள்கை உரிமை பற்றி என்ன தெரியும் ...
பொது அமைப்பின் அறிக்கையின் உண்மை பற்றி கேட்டல் அதில் எதனை முஸ்லிம்கள் என பதில் சொன்னால் அது உங்கள் போக்கிரித்தனம் .....
அண்ணே சம்பந்தன் ஒரு போதும் சுரேஷ் சொன்ன தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான விடய்நஅகழி மறுக்கவில்லை ....அவர்களுக்கு இடையான ஆரோகியமான கருத்து பரிமாற்றங்களை உங்கள் கோமாளிதனகளுக்கு பயன்படத்த பக்கிர்ர்கச்ல் ..
அதை தான் நான் சொன்னேன் ...இப்போது ஆவது புரிகிறதா ..உங்கள் நண்பன் வரதரஜபெருமாலின் கோமாளித்தனம் ..இனியாவது தமிழ் அரசியல் விரோதிகளை நட்பு பாராட்டாமல் இருங்கள் ....
புலிகள் இறுதி களத்தில் வலு கட்டாயமா ஆட்கள் செர்தகர் என்பது உண்மை ..புலிகள் செய்த தவறி கொண்டு எப்படி உங்கள் நண்பர் செய்த கோமாளித்தனத்தை நியாசம் செய்வது ????இது உங்கள் அடிமட்ட போக்கிரித்தனம்
ஆனால் அதற்காக அவர்களின் காலத்தில் கல்விக்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும் ,ஆசிரிய நியமனங்கள் ,பயிற்சி புத்தகங்கள் ,பாட புத்தகங்கள் ,கல்வி கட்டடங்கள் ,அரசியல் தலியீடு ஒழிப்பு,தேசிய மட்ட பரிட்ச்சைகள் என அவை நீண்ட பட்டியல் ....அந்த காலத்தில் வடக்கு கிழக்கில் புலிகளின் கட்டுபட்டு மாணவர்கள் புரிந்த சாதனைகளை இலங்கை சந்திரிக்கா அரசே பரடியது ...
உங்களுக்கு வரும் குழப்பங்களுக்கு வேறு கரன்க்கள் ..எத்தனை தடவை சொன்னாலும் பொய் உண்மையாகாது .....புலிகள் என்றைக்குமே இராணுவத்தோடு சேர்ந்து தமிழர் கொள்கையை காட்டி கொடுக்க வில்லை ....தமிழர்களை பிடித்து கொடுக்க வில்லை ....


08-08-2012, 13:50
 - Posted by Siva.
நாட்டில் நடப்புப் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும் போது, நடந்தவை பற்றி ஆளாளுக்கு உப்புச் சப்பில்லாமல் அறிக்கைப் போர் செய்வது, ஆரோக்கியமாகப் படவில்லை! இன அழிப்பு முதல் நில ஆக்கிரமிப்பு வரை, அரசின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! அவற்றைத் தடுக்கும் பொருட்டு, சர்வதேச அரங்குக்கு அந் நிகழ்வுகளைத் தெரியப்படுத்த ஏதாவது செய்ய முயற்சிப்பது, நம் எல்லோரினதும் கடமையாகும்! சொலமனின் விதண்டாவாதக் கருத்துக்களை யாருமே கண்டு கொள்ளாமல் விடுவது நல்லதென்பது, எனது தாழ்மையான கருத்தாகும்! TNA பற்றியும், நமது விடுதலைப் போராளிகள் பற்றியும் எமக்குத் தெரியும்! சகஜமப்பா!, என்று சொல்லும் அரைவேக்காட்டுக்கு, போராட்டமும் ஒருவித அரசியல் என்பதும், அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களும் சகஜமே!, என்பதும் தெரியாது போனமை துர்லபமே! மாரித் தவளை கத்திச் சாவதைக் கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.