கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 4வது காணி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட தேசிய செயல்திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணி பிரச்சினை தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய செயல்திட்டக் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 24 மாத காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 1927 ஆம், 1936 ஆம் 1985 ஆம் ஆண்டுகளில் காணி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.