இல்லேயேல் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை - இந்தியா எச்சரிக்கை-
வடக்கு தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு இல்லேயேல் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை
வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம், இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
தற்போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த வரும் ஆகஸ்ட் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, இந்தியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.