கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்குள் முரண்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒர்அரசியல் சந்தர்ப்பவாதி என ஆளும் கட்சி பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றம ;சுமத்தியுள்ளார்.
தேசிய பிரச்சினைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சிக்கு வாக்களித்தலானது முஸ்லிம்பள்ளிவாசல்களை இடிப்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளதாகஇ பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்இ ஆளும் கூட்டணியில்அங்கம் வகித்துக் கொண்டே அரசாங்கத்தை கடுமையாக தாக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல தேர்தல் பிரச்சாரங்களையும் தமிழ் பேசும் மக்கள் நிராகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளைஇ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிட எடுத்தத் தீர்மானமானது அரசாங்கத்தின் ஓர் தந்திரோபாயம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன விபரித்துள்ளார்.
தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஆளும்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான பிரச்சினைகளின் போது இரு தரப்பிற்கும்இடையில் இணக்கப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஒரே ஊடகவியலாளர் சந்திப்பில் இருவரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.