கடந்த 12 மாதங்களில் சுமார் 40 அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டபலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைகள், பாலியல் சித்திரவதை, சிறுவர்துஸ்பிரயோகம், தாக்குதல், கப்பம் கோரல், கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச்சேர்ந்தவர்களே அதிகளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு சில பாராளுமன்றஉறுப்பினர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றச் செயல்களுடன் தொடர்புடையஅரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரின் விசாரணைகளுக்கு பிரத்தியேகமாகஜனாதிபதி விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.