ரஸ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எம்-17 ரக ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வது தொடர்பான சாத்தியம்குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடன் அடிப்படையில் சுமார் 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய ரஸ்யாஉதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
எனினும் சாத்திய ஆய்வின் பின்னர் எத்தனை ஹெலிகொப்டர்களை கொள்வனவுசெய்வது பற்றித் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ம் ஆண்டு ரஸ்யாவிற்கு விஜயம்செய்திருந்த போது 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை பத்தாண்டு கால கடன் அடிப்படையில்பெற்றுக் கொள்வது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இராணுவ நோக்கங்களுக்கு ஹெலிகொப்டர்கள் தேவையில்லை எனவும்,பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த ஹெலிகொப்டபர்களைபயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.