விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மலேசிய வர்த்தகரிடம் கொள்ளையிட்டு இலங்கை சென்ற பெண் கட்டுநாயக்க

 

விமான நிலையத்தில் கைது :

மலேசிய வர்த்தகரிடம் கொள்ளையிட்டு இலங்கை சென்ற பெண் கட்டுநாயக்க

 

மாணிக்கம் மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை மலேசியாவை சேர்ந்த வர்த்தகரிடம் கொள்ளையிட்டு, இலங்கை சென்ற பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
 
 
 
கேகாலையைச் சேர்ந்த 31 வயதான இந்த பெண்ணிடம் இருந்து 25 லட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களும், வெளிநாட்டு நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேக நபரான இந்த பெண், தனது தாயார் இறந்து விட்டதாக, தனது கணவர் ஊடாக தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவரை அந்த வீட்டு உரிமையாளர் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பெண் மலேசியாவுக்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.