ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின்பொதுச் செயலாளர் பான் கீ மூனும் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறும் ஓர் உயர்பதவியை வழங்குவதாகத் தெரிவித்து, பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தக் கோரிக்கையை நவனீதம்பிள்ளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இது தொடர்பில் பகிரங்கப்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதாகவும் சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாகவே நவனீதம்பிள்ளையின் நான்காண்டுபதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறு தம்மிடம் எவரும் பதவிவிலகுமாறு கோரிக்கை விடுக்கவில்லை என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.