தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தனைப்பே hன்று அரசாங்கம் இலவசக் கல்வி முறைமையையும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழவிடுதலைப் புலிகளை தோற்கடிக்க காட்டிய வீரியத்தை, அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கவும் காட்டுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் கல்வித் துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை முன்வைக்க அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியும் கல்வி அமைச்சர்களும் கூடுதல்கரிசனையுடன் கல்வித்துறை தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
இலவசக் கல்வியின் பயனாளி என்ற வகையில்எதிர்கால சந்ததியினரும் இலவசக் கல்வியின் பயனை அடைய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.