விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இசட் புள்ளி சர்ச்சைக்கு தீர்வுவழங்கப்படாவிட்டால் மாணவர் நம்பிக்கை இழக்கக் கூடும் - பிரதம நீதியரசர்

 

இசட் புள்ளி சர்ச்சைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மாணவர் நம்பிக்கை இழக்கக் கூடும் - பிரதம நீதியரசர்
 
 
இசட் புள்ளி சர்ச்சைக்கு உரிய தீர்வுவழங்கப்படாவிட்டால் நாட்டின் எதிர்கால பரீட்சை முறைமை தொடர்பில் மாணவ மாணவியர் நம்பிக்கைஇழக்கக் கூடும் என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இசட் புள்ளி மீள் மதீப்பிட்டின் மூலம் தமக்குஅநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மாணவ, மாணவியர் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இசட் புள்ளி சர்ச்சைக்கு உடனடியாக காத்திரமானதீர்வுத் திட்டமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
இசட் புள்ளி பெறுபேறு தொடர்பில் உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரியமுறையில் பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, சர்ச்சைக்கு தீர்வு காண போதியளவுகால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ நீதிமன்றில்கோரியுள்ளார்.
 
உயர்கல்வி அமைச்சர் மற்றும் பரீட்சை ஆணையாளர்ஆகியோரின் சார்பில் சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
 
சர்ச்சையுடன் தொடர்புடைய சகல தரப்பினரையும்இணைத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்ட முயற்சிக்கப்படும் என சட்ட மா அதிபர்தெரிவித்துள்ளார்.
 
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர்களானகே.ஸ்ரீபவன் மற்றும் எஸ்.ஐ. இமாம் ஆகிய மூவர் அடங்கிய இந்த நீதியரசர் குழாம் இந்த மனுவைபரிசீலனை செய்தது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.