செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிரபல வர்த்தகரான சாள்ஸ் ஞானகோன் அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் :

 

பிரபல வர்த்தகரான சாள்ஸ் ஞானகோன் அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் :

 

 
பிரபல வர்த்தகரான சாள்ஸ் ஞானகோன் அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார். இவர் முன்னாள்  வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, அரசாங்கத்தினால் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
 
2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி கல்கிஸ்சையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது, ஞானகோன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
 
விடுதலைப்புலிகள் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்ய மாட்டார்கள் என, கதிர்காமரின் வீட்டுக்கு சென்று, ஞானகோன் தெரிவித்திருந்தாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. 
 
எவ்வாறாயினும் சார்ள்ஸ் ஞானகோன் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவர் எனவும் கொழும்பு வெள்ளவத்தையில் ஹெம்டன் ஒழுங்கையில் ஆடம்பர வீடொன்றில் வசித்து வந்த அவர், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளுக்காக டொலர் நிதியும் ஒன்றை ஆரம்பித்திருந்தாகவும் திவயின தெரிவித்துள்ளது. 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.