செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

விடத்தல்தீவு- உப்புக்குளம்- கோந்தைபிட்டி- எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் - நடராஜா குருபரன்

 

நடராஜா குருபரன்

விடத்தல்தீவு- உப்புக்குளம்- கோந்தைபிட்டி- எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் -

 அண்மையில் மன்னாரில் வாடிவீடு ஒன்று தொடர்பான உரிமைப்பிரச்சனையை சிறுபான்மை இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாகச் சித்தரிக்கப்பட்டு அதில்  இறந்து போன விடுதலைப் புலிகளின் அல்லது புலிகளின் சித்தாந்தங்களை ஏற்றுகொண்டவர்களின் ஆதிக்கம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முஸ்லீம்களின் முடியேற்றத்திற்கு புலிகள் தடை என்று கோசமும் எழுப்பப்பட்டது. நீதியான நிர்வாக அணுகுமுறை மூலம் மிக இலகுவாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டிருக்க கூடிய ஒரு முரண்பாட்டுக்கு ஒரு இனவாதச் சாயதைப்பூசிய அரசியற்தற்கொலை தற்கொலை மீண்டும் அரங்கேறியது.

இது குறித்து ரிஸாத் பதியுதீனும் புலிகளின் ஆத்மசாந்தியும் என நான் எழுதியகட்டுரையில் சுட்டிக் காட்ட முற்பட்ட விடயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்கள் என்னைப் பக்கச் சார்பான ஊடகவியலாளர், காகிதப்புலி, புலம்பெயர்ந்த புலி என்றெல்லாம் எழுதினார்கள் . எனது சுய அறிவிற்கெட்டியவரை ஊடகதர்மத்தைக் கடைப்பிடித்தே வருகிறேன். தவறுகள் விடும்போது அதனை ஒத்துக் கொள்வதற்கோ திருத்திக் கொள்வதற்கோ தயங்கியதில்லை எதிர்காலத்திலும் இவ்வாறுதான் இருப்பேன். புலிகளின் அரசியற் தவறுகளை சனநாயக மறுப்பை அவர்கள் அழிந்த பின்னரும் கூட குளோபல் தமிழ் விமர்சித்தே வருகிறது. எமது ஊடகத்தின் அடித்தளம் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளைப் பெறுவதுடன் தம்முள்ளும் பெரும்பான்மை இனத்துடனும் பரஸ்பர அங்கீகாரத்துடனும் மதிப்புடனும் தத்தமது அடையாளங்களை இழக்காமல் வாழக்கூடிய ஒரு நிலையைப் பெறவேண்டும் என்பதுதான். இதற்கு ஊறுவிளைவிற்கும் செயற்பாடுகளை  ஒரு ஊடகவியலாளன் என்ற தளத்தில் நின்று தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் போது அவற்றை வெளியிடுவேன்.   இதனை எமது தளத்தின் உண்மையான வாசகர்களும் என்னை நன்கறிந்த உண்மையான அரசியற் செயற்பாட்டாளர்களும் அறிவார்கள். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் மன்னார்ப் பிரச்சனையையும் நான் அணுகினேன். எனது கட்டுரைக்கு வைத்த விமர்சனங்களுக்கு பதிலாக கீழே நான் பகிரப்போகும் விடையங்கள் அமையும்.

இஸ்லாமிய சகோதரர்களே தமிழர்களாகிய நாங்கள் கடந்த மூன்றுதசாப்தங்களாக எமது சொந்த அதிகாரத்தை விமர்சித்தல் என்பதில் தவறுகளை விட்டு  மாயைகளுக்குள் சிக்கி இருந்ததால் பல மோசமான  அரசியற்தவறுகளை எமது போராட்டம் விடக்காரணமானோம். அதன்தாக்கத்தை இன்னும் அரை நூற்றாண்டுக்கு அனுபவிக்கப்போகிறோம் தமிழ்த் தேசியத்தின் பிற்போக்கான பக்கங்களை எங்கடை பொடியள் என்று நினைத்து விமர்சிக்காமல் அடக்கி வாசித்தன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.

இஸ்லாமிய ஊடக நண்பர்களே, முஸ்லீம் புத்திஜீவிகளே பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அதற்கு தலைமை தாங்குபவர்களின் தவறுகளைப் பாதிக்கப்படும் இனம் என்ற அடிப்படையில் விமர்சிப்பதில் எல்லைகளை வரையறுத்திருந்தோம். அதன் விளைவுகளை இப்போ அனுபவத்துக் கொண்டு இருக்கிறோம்.

எங்களுடைய அனுபவங்களில் இருந்து ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இன்று எழுச்சி பெற்று வரும் சிறுபான்மை அப்பாவிமுஸ்லீம்களின் உணர்வுகளை சுயநல அரசியல் போக்குடையோர் தமது நலன்களுக்காக பயன்படுத்தி அவர்களை பலிக்கடாக்களாக்க முனைகிறார்கள்.இவற்றை சரியாக இனம் கண்டு முளையிலேயே ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலமாக கிள்ளி எறியத்தவறினால் இன்னும் ஒரு 5 அல்லது 10 வருடங்களில் எங்களுடைய இடத்திற்கு நீங்களும் வந்து விடுவீர்கள்  என்பதனைத்தாழ்மையுடன் கூற விரும்புகிறேன்.

சரி விடயத்திற்கு வருவோம் மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினதும்படைத்தரப்பினரதும் நில ஆக்கிரமிப்பு விபரம் இங்கு வெளியிடப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான ஏறத்தள 300 ஏக்கர்காணிகளை அரசாங்க படையினர் தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கின்றனர்.  இதில் குறிப்பாக முசலிப் பிரதேசத்தில் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 56 ஏக்கர்நிலத்தையும் எஞ்சிய 50 ஏக்கர்ருக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களின் வளமான காணிகளையும் கடற்படையினர் படையினர் தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கின்றனர். இதில் 50 ஏக்கரில் கடற்படையினர் விவசாயம்செய்கின்றனர். ஆவர்களின் குடும்பங்களும் அங்கு குடியேறி இருப்பதாகக்கூறப்படுகிறது.

இது போல் 500 ஏக்கர் காற்றாலை மின்சார உற்பத்திக்கென மன்னார் பிரதேசசெயலர் பிரிவில் வர்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ளது. அதில் -  300ஏக்கருக்கு மேலான தனியார் காணியில் 150 ஏக்கர் வரை முஸ்லீம் மக்களுக்கு சொந்தமானது.

மன்னார் நடுக்குடாப் பகுதியில் 10 ஏக்கர் முஸ்லீம் மக்களின் காணியைகடற்படையினர் வைத்திருக்கிறார்கள்.

இதேபோல் மாந்தைமேற்கு சன்னார் 3500 ஏக்கர் இராணுவபயிற்சிக் கல்லூரிக்கு நிலஅளவைத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்டுள்ளது. இதில் 600 ஏக்கர்வரையில் யப்பான் உறுதி என்று சொல்லப்படுகின்ற ஆட்சி முதிச உறுதிமுஸ்லீம் மக்களுக்கு சொந்தமாக உள்ளதென கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இஸ்லாமிய சகோதரர்களே இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு சொந்தமாக இருக்கிற காணிகளை அபகரித்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளியாக  அதன் அதி உச்ச நம்பிக்கைக்கு உரியவராகத் தானே அமைச்சர் ரிஸாத் பதியுதீன் இருக்கிறார் அவர் ஏன் இந்தக் காணிகளை உங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்துமீளப் பெற்றுத் தரமுடியாது எனக் கேளுங்கள்.

முசலிப் பிரதேசத்தில் உங்கள் காணிகள் போக மன்னர் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 56 ஏக்கர் காணியில் மன்னார் கடற்படைத் தலமையகமும், 25வீட்டுத் திட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் இராணுவ முகாமும் இருக்கிறது. மன்னாரில் ‘நாட்டாமை” காட்டுகிறதாகக் கூறப்படுகிற ஆயர் ராயப்பு யோசப்பு  அவர்களுக்கு இவற்றை மீளப்பறித்துக்கொள்ள முடியாமல் ஏனிருக்கிறது?  மன்னாரில் அரச மற்றும் அதன் சார்பு நாட்டாமையைத் தவிர  வேறெதுவும் இல்லை என்பதே அடிப்படை உண்மை.

முஸ்லீம் மக்களின் குடியேற்றத்திற்கு புலிகளின் மறுபிறப்புக்கள் தான் புலிகளின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் தான் தடையென்றால் உங்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் கடற்படையினர், இராணுவத்தினர்,அவர்களை வழிநடத்தும் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரிசாத்பதியுதீன் எல்லோருமே புலிகளின் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று வருகிறது. புலிகள் தன்னும் உங்களை வெளியேற்றியதற்கு ஒப்புக்காகவாது மன்னிப்புக் கேட்டார்கள் அனால் இவர்கள் உங்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இழைக்கப்படப்போகிற அநீதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்புக்கூடக் கேட்க மாட்டார்கள்.

கோந்தைப்பிட்டியில் இப்போ உங்களை மீளக் குடியேற்றி இருக்கும் காணி தேசியநூதனசாலைக்கு உரியது. மன்னார் கோட்டையுடன்  அதன் எல்லையோடு கடற்கரையை அண்மித்து இருக்கும் இந்தக் காணி முறையான நிர்வாகநடைமுறைகளோடு உங்களுக்கு தரப்பட்டதா? 

 அரசாங்கம் எந்த அறிவித்தலின் கீழ் இதனை உங்கள் குடியிருப்பிற்கு ஒதுக்கி இருக்கிறது? இந்த காணியை உங்களுக்கு வழங்குமாறு பிரதேச செயலருக்கு  உத்தரவிட்டது அமைச்சர் ரிசாத் பதியுதீன். அமைச்சரவை அனுமதி வர்த்தமானி அறிவித்தல் போன்ற நிர்வாக ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் உங்களிடம் வழங்கப்பட்டுள்ள இந்தக் காணிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுற்றாடல் வனத்துறை அமைச்சராக வருபவர் தேசிய நூதன சாலைகளுக்கு சொந்தமான காணி இது எழுந்து சென்றுவிடுங்கள் என உங்களை குடி எழுப்பினால் அதற்கு நிவாரணம் தருவதற்கு இந்த அமைச்சர் இருக்கமாட்டார்…

இந்த இடத்தில் உங்களுக்கு இன்னுமொரு விடயத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். புலிகள் இருந்த காலத்தில் புலிகள் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் வழங்கிய காணிகளையோ அல்லது தீர்ப்புக்களையோ அரசாங்கம் நிராகரித்துள்ளது. எந்த விதமான சட்ட அந்தஸ்துடைய ஆதாரங்கள் இல்லாது நீங்கள் இதற்கு முன்பு உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்ற காரணத்தை மட்டும் வைத்து மட்டும் கோந்தைப் பிட்டி வலைப்பாடை உரிமை கோருகிறீர்கள். இதற்கு சட்ட அடிப்படை இல்லை என எவரும் நிராகரிக்க முடியும். அவ்வாறு இருக்க இதனை நிர்வாகம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கமால் இனம்சார்ந்த பிரச்சனையாக மாற்றியதன் பின்னுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன என்று சிந்தித்தீர்களா? சிந்தியுங்கள்

மன்னாரில்  இலங்கை வன திணைக்களத்திற்கு உரிய 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காடு அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் ஏற்பாட்டில் புல்டோசர்கள் கொண்டு சட்டவிரோதமாக அழிக்கப்படுகிறது. காணிக் கச்சேரியோ பீஎல்பீ அனுமதியோ இதற்கு வழங்கப்படவில்லை. கேட்டால் ஜனாதிபதியின் உத்தரவு என்கிறார்கள். வனத் திணைக்களத்திடம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட காணி அதிகாரமுடைய அதிகாரிகளும் மௌனம் காக்கின்றனர். இந்த 1000 ஏக்கர் முஸ்லீம் மக்களைக் குடியேற்றுவதற்காகவே  என அமைச்சர் தரப்பால் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே அரசாங்க மற்றும் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்ட வளமான நிலங்களை மீளப் பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை விடுத்து கடும் வறட்சிகளை சந்திக்கும் மன்னார் மாவட்ட காட்டு வளத்தில் 1000 ஏக்கரை அழிப்பது என்பது எத்தகைய சூழலியல் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதனை ஆராய வேண்டும்.

31.7. 2012 இல் காணிப் பயன்பாட்டுப் பங்கீட்டு குழு கூட்டம் மாந்தை நகர்ப்பிரிவில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் நடைபெற்று அங்கு எடுக்கப்படும் முடிவுகள்  பின்னர் மாவட்டத்திற்கு  அனுப்பப்பட்டு பின்னர் ஆளுநருக்கு காணிப் பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அனுப்பப்படும.; ஆனால் இதற்கு மாவட்ட மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் மாந்தையில் ஏறக்குறைய 5422 ஏக்கர் காணிக்கும் அரசாங்க தரப்பில் சட்டப்படியான அதிகாரத்தை அரசாங்கம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளது.

இப்படி மன்னார் மாவட்டத்தில் ஆயர் இல்லக் காணிகள் தனியார் காணிகள், அதில் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் என்று அனைவரது காணிகளும் அரசாங்கமும் படையினரும் நாளாந்தம் அபகரித்து கொண்டு செல்லும் போது அதனை தடுத்து நிறுத்த முடியாத அமைச்சரும் அவரின் சகபாடிகளும் பிரச்சனையை திசை திருப்பி அனைத்திற்கும் காரணம் புலிகள் புலிகளின் மறு பிறப்புக்கள், ஆயர், நீதவான் என அரசியல் செய்வது எந்த வகையில் நியாயம் என்றே எம்மால் கேள்வி எழுப்பப்பட்டது.  எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினதும் படைத்தரப்பினரதும் நில ஆக்கிரமிப்பு விபரம்:-

வடமாகாணத்தில் கடல் வளமும், விவசாய வளமும் ஒருங்கே நிறைந்த வளம் மிக்கமாவட்டம் மன்னார் ஆகும். 2002..5 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பையும் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியது ஆகும். பல வளம் மிக்க நிலங்களை அரசாங்கமும், படைத்தரப்பும் தன்னகத்தே நாளாந்தம் அபகரிக்கின்றன. இதனால் மக்களின் பொதுவாழ்வு பாதிப்பதுடன் வாழ்வாதாரமும், வளமும் குன்றிவருகின்றது.

யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதுபுதிதாய் நில அபகரிப்பு தொடர்கின்றது. இவை தனியார், மற்றும் அரசகாணிகளாகும். அவற்றில் இதுவரை எமக்குக் கிடைத்த புள்ளி விபரங்களுக்கமைவாக கீழ்வரும் விபரம் பிரதேசசெயலர் பிரிவு ரீதியாகதரப்படுகிறது.

மன்னார் பிரதேசசெயலளார் பிரிவு:

1. 500 ஏக்கர் காற்றாலை மின்சார உற்பத்திக்கென                        வர்த்தமானி அறிவித்தல் -  300 ஏக்கர் மேல்                                 தனியார் காணி. தாழ்வுபாடு கடற் கரை தொடக்கம்                  கட்டுக்         காரண் குடியிருப்பு வரை.

2. பறவைகள் சரணாலயம் -  15ஆயிரம் ஏக்கருக்கு மேல்                நாகதாழ்வு தொடக்கம் வங்காலை முன்பகுதி மன்னார்               நகர் நுளை வாயில் வரை.  

3. தள்ளாடி வடக்கே திருக்கேதீஸ்வரம் வரை- 272 ஏக்கர்                   விமான படைத் தளம் அமைப்பதற்கு கோரிக்கை                            விடப்பட்டு உள்ளது.

4. கோந்தைப் பிட்டி துறைமுக அதிகாரசபைக்கு                             சொந்தமான  09 ஏக்கருக்கு மேலான காணி -                               பொலிஸ்  /     இராணுவம்.

5. தலை மன்னார் வீதி-தொழிநுட்பக் கல்லூரியல்                        விசேட              அதிரடிப் படை  05 ஏக்கர். 

6. சௌத்பார் தனியார் காணி- 5 ஏக்கர் இராணுவமுகாம்.

7. தள்ளாடிகோவிலடி, தள்ளாடிமுகாம், தனியார் காணி -           15 ஏக்கர் மேல்.

8. பள்ளி முனை 25 வீட்டுத் திட்டத்தில் 06 வீட்டில்                           இராணுவ             முகாம்.

9. மன்னார் நுளை வாயிலும், கூட்டுறவு சங்க சமாச                      கட்டட          வளாகத்தில் 20 வருடங்களுக்கு மேல்                     இராணு வமுகாம்.

மன்னார் பிரதேசத்திற்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:
 
1. தலை மன்னார் கிராமம் கடற் படையினர் 5 ஏக்கர்
 
2. குருசுப்பாடு கடற்படையினர் 5 ஏக்கர்
 
3. கட்டுக்காரன் குடியிருப்பு இராணுவம் 2 ஏக்கர்
 
4. செல்வபுரம் இராணுவம் 12 அரசாணி
 
5. நடுக்குடா கடற் படையினர் 10 ஏக்கர்
 
6. பேசாலை (கறட்றொழி கூட்டுத்தாபனம்) (FR CO-OP               இராணுவம்   20 ஏக்கர்
 
7. பேசாலை வெற்றி மக்கள் குடியிருப்பு கடற்                                   படை யினர் 10 ஏக்கர்
 
8. பேசாலை 4ம் வட்டாரம் கடற் படையினர் 5 ஏக்கர்
 
9. பேசாலை பிரதான வீதி பொலிஸ் நிலையம் 2 ஏக்கர்
 
10. சிறுத்தோப்பு கடற் படையினர் 5 ஏக்கர்
 
11. கீரிசனிவிலேச் நேவி 8 ஏக்கர்
 

 மாந்தைமேற்கு:

1. சன்னார் 3500 ஏக்கர் இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு நில            அளவைத் திணைக் களத்தால் எல்லை இடப்பட்டுள்ளது.

2. பரப்புக்கடந்தான் இராணுவமுகாம் - 3 ஏக்கர்.

3. ஆண்டாங் குளம் இராணுவ முகாம் - கூட்டுறவுச்                              சங்கத்தின் காணி - 01 ஏக்கர்.                

4. சாளம்பன் சந்தி இராணுவமுகாம் - தனியார் காணி,                          ½ஏக்கர்.

5. கள்ளியடி, 25 ஏக்கர். 542 பாடைத்  தலைமையகம், 3                  ஏக்கர்   தனியார் காணி.

6. கூராய் - 05 ஏக்கர் நீர்ப்பாசனத் திணைக்களக் காணி.

7. படகுதுறை- 3 ஏக்கர் கடற்படைஅரசகாணி.

8. நாயாற்றுவெளி- 2 ஏக்கர் அரசகாணி.

9. மூன்றாம்பிட்டி- 3 ஏக்கர் இராணுவம் - தனியார் காணி.

 
 நானாட்டானுக்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:
 
1. இராணுவமுகாம் அமைத்தல் - பரிகாரிகண்டல் 5 ஏக்கர்
- (விண்ணப்பம்) அருவியாறு,அச்சங்குளம் 2 ஏக்கர்
- செ. ம. க. அடம்பன் 1 ஏக்கர்
- முருங்கன் 4 ஏக்கர்
- பெரிச்சார்கட்டு 4 ஏக்கர்
- (விண்ணப்பம்) மடுக்கரை 4 ஏக்கர்
- (விண்ணப்பம்) நறுவிலிக்குளம் 4 ஏக்கர்
- அச்சங்குளம் 1 ஏக்கர்
 
2. கடற்படைமுகாம் - பஸ்ரிபுரி 10 ஏக்கர்
- நறுவிலிக்குளம்    2 ஏக்கர் (10ஏக்)
- அச்சங்குளம் 1 ஏக்கர்
- எருவிட்டான் ½ஏக்கர்
        தனியார் காணி - K.S மொறாய்ஸ் ¾ஏக்கர்
 
3. பொலிஸ் வங்காலை - ஸ்ரனிஸ்லஸ் டலிமா 20
 
வங்காலை - யூஜின் டலிமா 20P
 
        வங்காலை - தாசன் லெம்பேட் 20P
 
        வங்காலை - றோபட் லெம்பேட் 20P
 
        வங்காலை - டேவிற் பீரிஸ் 20P
 
         முருங்கன்- தபுலிங்கம் (தனியார் காணியும்                                  சேர்க்கப்பட்டு)  ¼ ஏக்கர்

         இரட்டைக்  குளம்- பெணாண்டோ 13ஃ4 ஏக்கர்
 

 மடுபிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்டகாணிகளில் படையினர் ஆக்கிரமிப்புசெய்துள்ள இடங்கள்:

1. பாலம்பிட்டி - இராணுவம் அரசகாணி 14 ஏக்கர்

2. குஞ்சுக்குளம் - இராணுவம் 600 ஏக்கர்

3. இரணை இலுப்பைக்குளம் - இராணுவம் 10 ஏக்கர் மேல்

4. மண்கிண்டி - இராணுவம் 4 ஏக்கர் மேல்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:

1. சிலாவத்துரை - இராணுவம் தனியார் காணி 25             ஏக்கர்

2. அரிப்பு - நேவிமுகாம் 4 ஏக்கர்

3. பொலிஸ்படையினர் 10 ஏக்கர் - நேவிமுகாம்

4. முள்ளிக் குளம் ஆயர் காணி 56                    ஏக்கர்

5. பொதுமக்கள் தனியார் காணி- 30 ஏக்கர், வயல் நிலம்             25                ஏக்கர்

 

ரிசாட் பதியுதீனும் புலிகளின் ஆத்ம சாந்தியும்…. நடராஜா குருபரன்-

 

இதற்கு பதில் எழுதுபவர்கள் எமது மின்அஞ்சல் முகவரிக்கு தம்மை உறுதிப்படுத்தி சொந்தப் பெயரில் அனுப்பிவைத்தால் அதனை எந்த வித தணிக்கையும் இன்றி வெளியிடத் தயாராக இருக்கிறோம். radiokuru@yahoo.com 
குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(3) அபிப்பிராயங்கள்
08-08-2012, 05:37
 - Posted by Solomon
மிக தெளிவான , ஆதரங்களுடன் வெளியாகி இருக்கும் முதலாவது காணி அபகரிப்பு சம்பந்தமான கட்டுரை. தமிழ் உலகுக்கு இப்படி ஆதாரபூர்வமாக புள்ளி விபரத்துடன் அமைதியாக தகவல் தருவது புதியது. உங்களை பற்றியும் உங்கள் "வடக்கு மேலாதிக்கம்" இல்லாத வெளிப்படையான நல்ல நோக்கமும் எலோராலும் மதிக்கப்படுகின்றது.

ஆனால் உங்களை மிக மதிப்பவன் எண்ட ஒரே காரணத்தினால் முஸ்லிங்கள் எதற்க்கு எடுத்தாலும் புலிகளை சம்பந்தபடுதுவது (எதற்க்கு எடுத்தாலும் வடக்கு தமிழர்கள் சிங்களவர்களை சாட்டு சொல்லுவது போல் ) பின் வரும் காரணங்களால் என்பதனையும் கூறி கொள்ள விரும்புகிறேன்.

முப்பது வருடங்களாக தமிழ் அரசியல் வாதிகளும் ,வெளிநாட்டில் வாழும் வடக்கு தமிழர்களும் புலிகளுடன் சேர்ந்து "தமிழ் எண்டால் புலி புலி எண்டால் தமிழன்" என்ற முறையில் புலிகள் செய்த அத்தனை அடூளியங்களையும் (நலவைகள் என்று ஒன்றுகூட சொல்ல முடியாது என்பதுவும் உண்மை) வெடி கொளுத்தி
வீரம் பேசியதுவும், வேலிக்கு ஓனான் சாட்சி போல பேசியதுவுமே , இன்று கூட முஸ்லிம்களுக்கு ஆதரவு இல்லாத எந்த ஒரு வார்த்தையும் "புலிகளின்" எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறதோ என்ற அச்சத்தை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறைக்கு மேல் புலிகள் நடாத்திய கொடூரங்கள் மூன்று வருடத்தில் மறையாது.

முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களும் கொலைகளும் ,புலிகள் முஸ்லிம்களுக்கு தினம் தினம் செய்த அட்டூழியங்களும் இன்னமும் நடக்காது என்ற நம்பிக்கை மீண்டும் வர வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரன் "முச்ளிமக்ளுடன் கிழக்கில் ஆட்சி அம்மைக்க கிடைத்தால் சர்வதேசத்துக்கு தமிழரின் பலத்தை தெருவிப்பதன் மூலம் தமிழ் ஈழம் காண முடியும்" என்று முஸ்லிம்களை முட்டாள்கள் ஆக்கி நாங்கள் ஈழம் வெல்லுவோம் ,,இன்னமும் முஸ்லிம்களுக்கு ஆப்பு வைப்போம் என்பதுபோல் பேசுவது நீங்கள் எதிர்பார்க்கும் இன ஒட்ட்ருமையை உண்டாக்காது.

கடந்த சில ஆண்டுகள் தான் ராகுப் ஹகீம் ஆட்சியில் இருக்கும் ராஜபக்சையுடன் சேர்ந்து இருக்கிறார் . (ஏதோ முஸ்லிம் காங்கிரசு ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஆளும் கட்சியுடன் நக்கி பிழைப்பதாக கூறுவது சரியில்லை) ஹகீம் இடம் முஸ்லிம் காங்கிரசு கிடைத்ததில் இருந்து புலிகளுடனும் , தமிழ் கட்சிகளுடனும் தான் சேர்ந்து கூத்து அடித்து திரிந்தார் என்பதை மறைக்க கூடாது. அப்போது அவரை பாவிக்காத அல்லது உரிய இடம் கொடுத்து மதிக்காத தமிழ் அரசியல் வாதிகள் இப்போது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவது முறையல்ல. இந்த தெருதலில் கூட ஆளும் கட்சியுடன் சேராமல் தனித்து போட்டி இடுவதுவும் ஆளும் கட்ட்சிக்கு எதிராக அறிக்கைகள் விடுவதையும் கண்டு கொள்ளாமல் விடுவது முறையல்ல. "புலிகளின் ரத்த தாகம்" பற்றி ஜால்ரா அடித்தால் தான் உண்மை தமிழர்களுக்கு ஆதரவான முஸ்லிம்கட்சி என்று எதிபார்ப்பது சரியான் முறையில்லை.

முஸ்லிம்களின் அராஜகம் என்று பேசும் மத தலைவர்களும் வானொலிகளும் ,வெளிநாட்டு ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்று எண்ண வேண்டும்.

சும்மா கிடந்த ரிஷாத் ...ஹகீமை விட முஸ்லிம்களின் உரிமை காக்கும் வீரனாக உருவெடுத்து மாயா ஜாலம் காட்டுவது காலத்தின் கொடுமை.

நீங்கள் கூறி இருக்கும் தகவகள முஸ்லிம்களினதும், அரசியல் வாதிகளினதும் கவனைத்தை ஈர்க்கும் என்று நம்புபோமாக..

எறும்பு ஊர கல்லும் தேயும்
09-08-2012, 02:50
 - Posted by Anonymous
உங்கள் குறுக்கு புத்தி உங்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது ...தமிழர்கள் எப்போதும் சின்ஹலவர்களை தேவை இல்லாமல் குற்றம் சாட்டவில்லை.உங்கள் போகிரிதனம் வடக்கு தமிழர் என புது பெயர் வேற ??????......முஸ்லிம்களுக்கு தமிழர்கள் என்றுமே விரோதமாக இருதந்ததில்லை ..மாறாக முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் சின்ஹல அரச வழி காட்டலில் தமிழர் கிராமங்களை அழித்து தமிழர் காணிகளை இல்லாமலாக்கி கொலை ,கரபளிப்பு ,கடத்தல் என அடாவடி செய்த போது தான் தமிழர் தரப்பில்,புலிகள் தரப்பில் பதில் நடவடிக்கைகள் நடந்தன ..சில சம்பவங்கள் மிக கடுமையானவை என்றாலும் முஸ்லிம் குழுக்கள் செய்தவை மிக மோசமான சம்பவங்கள் ..இங்கே புலிகள் சம்பந்தபடாத சில சம்பவங்களில் புலிகளின் பெயரை பயன்படுத்தி சின்ஹல அரசு முஸ்லிம் குழுக்களை பயன்படுத்தி நடத்திய வெறியாட்டங்களும் அடங்கும் ....கொலைகள் என்ற அடிபடியில் புலிகளின் நடவடிக்கைகள் விரும்பதகதவை என்றாலும் அந்த கால நேரத்தில் முஸ்லிம் கூத்தாடிகளை தவிர்க்க வேறு வழி இருக்க வில்லை ....
புலிகளை தமிழர் ஆதரிப்பதால் புலி பூச்சாண்டி காட்டுவதாக நீங்கள் சொல்லுவது உங்கள் கற்பனை ..தமிழர்கள் புலிகளை தம் தேசிய சக்திகளாக நேசிக்க காரணம் அவர்களின் தியாகம் ..அதனை விமர்சிக்க கோமாளிகளுக்கு எந்த அருகதையும் இல்லை ...முஸ்லிம்கள் செய்த துரோக்கங்கள் ,காட்டி கொடுப்புகள் என்றுமே மாறது ...இன்று கூட என்ன நடக்கிறது ????? சட்டவிரோத காணி பிடிப்பு ,மாடு அறுத்தல் ,மத மாற்றம்,கடத்தல் ....இவைகள் என்றைக்குமே தமிழ் முஸ்லிம் உறவுக்கு உதவாது .....இவற்றை ஆரம்பத்தில் தமிழர் தரப்பு தட்டி கேட்டல் அதனை தமிழ் முஸ்லிம் பிரச்சனையாக மாற்றியது இந்த முஸ்லிம் கோமாளி குழுக்கள்
தமிழர்கள் தமிழீழம் கேட்பது இலங்கை அரசு தீர்வு தர மறுப்பதால் தான் ..இலங்கை அரசு தீர்வு தருமாக இருந்தால் எந்த பிரச்சனியும் இல்லை ..கிழக்கு தேர்தலில் தமிழரசு கட்சியோடு சேர்வது முட்டாள்தனம் எனின் பள்ளிகளை அழிக்கும் சின்ஹல அரசின் அமைச்சரவையில் இருப்பது ,அதனை வழி மொழிந்து தெரிவது என்ன தியாகமா???/ தமிழர்களை விடுங்கள் ...அரசில் இருக்கும் முஸ்லிம்கள் இதுவரை தங்களுக்கு ஒரு அரசியல் தீர்வுக்கு என்ன முயற்சி செய்ய வில்லை ????/தமிழர் தரப்பு மயற்சி செய்தல் அதனை குழப்பும் விதமாக சின்ஹல அரசோடு சேர்ந்து செயற்படுவது ஏன்??? முல்சிம்களின் காணி பிரச்சனை ,வீட்டு திட்டம் ,வேலை என்று எந்த நாளாந்த பிரச்சநிக்கும் ஏன் தீர்வு காணவில்லை ????/
அண்ணே ,,பொய் உங்கள் தொழில் ......முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்கா ,மகிந்த ,ரணில் என்று எல்லா அரசிலும் இருக்க வில்லைய ????இடை பட்ட சிலகலங்களில் சந்தற்பவதமாக தமிழர் தரப்போடு இணைந்து வேலை செய்வதாக நடித்தார்கள் ..இருந்தாலும் அந்த காலங்களில் தமிழர் தரப்பில் இவரின் கெளரவதிற்கு மாறாக தமிழர் நடந்த ஒரு சம்பவங்கள் சொல்லுங்கள் ..காலையில் ஒன்று ,மாலையில் இன்னொன்று பேசும் இவர்களோடு வேலை செய்வது எவளவு கடினம் ..இப்போது அரசுக்கு வழங்ககும் வாக்கு பள்ளியை அழிக்கும் வாக்கு என கிழக்கில் சொல்லும் இவர்கள் மற்றய இடங்களில் அரசுடன் சேர்ந்து தேர்தலில் இருக்கிறார்கள் ..காலம் பூராகவும் இப்படித்தான் இவர்கள் செய்கிறார்கள் ..எப்படி இவர்களை நம்புவது >>>>>>.
தமிழர் தரப்பில் 2002 பிறக்கு அப்பாவி முஸ்லிம் (முஸ்லிம் ஆயுத குழுக்கள் தவர்ந்த ) மீது யாரும் என்னவும் செய்ய வில்லை ..முஸ்லிம் நபருக்கு பாரல மன்ற ஆசனம் கூட வழங்க பட்டது .....முஸ்லிம் வியாபார நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரப்பட்டது ..மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஒத்துழைப்பு தரப்பட்டது ....கிழக்கு காணி பிரச்னைக்கு மட்டுபடுத்தபட்ட அளவில் ஆதரவு தரப்பட்டது ....
ஆனால் முஸ்லிம் தரப்புகள் செய்தது என்ன ????இறுதியாக மன சாட்சிக்கு விரோதமாக ஜெனீவா வரை சென்று பொய் சொன்னார்கள் >>>>இன்று மன்னர் பிரச்சனையை சமூக பிரச்சனையாக மாற்றி அதில் அரசியல் செய்ய பார்கிறார்கள் ..எப்படி நாங்கள் நம்புவது ???/
16-08-2012, 06:19
 - Posted by Nadarajah Kuruparan
இது எனது மின் அஞ்சல் முகவரிக்கு கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது:-

மன்னார் கோந்தைபிட்டியும் கோணலாகும்இனநல்லுறவுமும் மற்றும்

விடத்தல்தீவு உப்புக்குளம் கோந்தைபிட்டியும்- எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்.

அன்புடன் குருபரண்ணைக்கு,

'எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்.'
இந்த வரிகளை நாங்கள் இறக்கும் வரை மறவோம்.
தங்கள் இருஆய்வுக்கட்டுரைகளும் தரமானவை. மிகவும் தெளிவான மொழிநடையில் பாமரமக்களும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அதிலும் சிறப்பம்சம் என்னவெனில் தங்களது புள்ளிவிபரக் கணிப்புகள்.

பலநூற்றுக்கணக்கான ஏக்கர் தாய்நிலம் பறிபோவதுபற்றி நம்மவர்க்கு சிந்தனை இல்லை. யார் காலைபற்றியாவது அரசியல் நாற்காலிகளை பிடித்து வைத்து கொள்வோம் என்ற சிந்தனைதான். வரலாற்றில் இவர்கள் துரோகி என்ற பெயரைதமது சந்ததிக்கு பொறித்து செல்லட்டும். இவர்கள் மட்டுமல்ல அரசஅதிகாரிகளும் வரலாற்று துரோகத்திற்கு துணைபோகின்றனர்.

நேர்மையான, நடுநிலையான, துணிச்சலான, மிகதிறமையான ஆற்றலுள்ள உங்களை போன்ற ஊடகவியலாளர்கள் மட்டுமே தொட்டுக் கொள்ளக்கூடிய தலையங்கம்; இவை. வெறும் நுனிப்புல் மேயும் நடவடிக்கையாக இருக்கமுடியாது. ஆழமாக அக்குவேறு ஆணிவேறாக ஆராய வேண்டிய விடயம். இதற்கு ஆழமான அறிவு வேண்டும். தங்களிடம் இது நிறையவே உண்டு.
தங்களின் ஆய்வுரைகளில் காணக்கூடிய சிறப்பம்சங்கள் தங்கள் ஆய்வுகளை எவ்வளவு வேலை இருந்தாலும் வாசிப்பதற்கான ஆவலை தூண்டுகின்றன.

தாங்கள் கடந்த காலத்தில் வெள்ளை வான் கடத்தலுக்கு உள்ளான போது பலர் தங்கள் விடுதலைக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொண்ட போது பத்தோடு பதினொன்று என்றுதான் என்மனம் எண்ணியது. ஆனால் இப்பதான் புரிகிறது ஒரு சிறந்த அறிவாளியை நாங்கள் அன்று இழந்திருப்போம் என்று.
வன்னி போரினால் எனது அநஅழசல கரடட. ஏனெனில் போர் சம்பவங்கள் மட்டும்தான் நினைவிலிருக்கு. அவை hயசன னளைம ல ஏற்றின மாதிரி தான் இருக்கு. எப்படி உங்களால் கடந்த அரசியல் நிலமை, ஒவ்வொருவர் கூற்றுக்களும் நினைவிருக்கு. அப்ப தொழிநுட்ப வளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. எல்லாம் ஒரு கொடைதான் என நினைக்கின்றேன்.

அண்ணை தொடர்ந்து உங்கள் ஆய்வுகள் வெளிவர எங்கள் நல்ஆதரவுகள். குருபரண்ணைக்கு 'தில்' இருக்கு அதனால எழுதுகிறார்.

அன்புடன்,
ச.பாரதி
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.