செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர ஆதாரங்கள் உள்ளன – சட்ட மா அதிபர் திணைக்களம்

 

அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர ஆதாரங்கள் உள்ளன – சட்ட மா அதிபர் திணைக்களம்
 
அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக வழக்குத் n;தாடர ஆதாரங்கள் காணப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு போதியளவு ஆதாரங்கள் காவல்துறை அறிக்கையில் காணப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல்துறை அறிக்கை சிரேஸ்ட சட்டத்தரணிகளினால் ஆராயப்பட்டு வருவதாகவும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
அமைச்சர் பதியூதீன் மற்றும் சிலருக்கு எதிராக வழக்குத் தொடர சட்ட மா அதிபர் திணைக்களம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
08-08-2012, 06:08
 - Posted by Solomon
சட்டம் தன் கடைமையை செய்யும்.!.

பசில் ராஜபக்ஷே தன் நண்பருக்காக தன் கடைமையை செய்வார். உலக அரசியலில் நடக்காததா.!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.