தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண இன்று (11) சென்னை பயணமாகவுள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கருணாரட்ண முன்னதாக சமர்ப்பித்திருந்த வீஸா அனுமதிக் கோரிக்கை இந்திய தூதரகத்தால்ட மறுக்கப்பட்டிருந்தது. ஆயினும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் தான் அம் மாநாட்டில் கலந்து கொள்வதை தடுக்க பலமான பின்னணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கருணாரட்ண குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று கருணாரட்ண இந்தியா செல்வதற்கான வீஸா அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர் மாநாட்டில் பங்குகொள்ளும் நோக்கில் இன்று சென்னை செல்லவுள்ளார்.
2ம் இணைப்பு - விக்ரமபாகு கருணாரட்னவுக்கு வீசாவை வழங்குமாறு கருணாநிதி இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
10-08-2012-01:44
தமிழக தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவு மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்;னவுக்கு வீசாவை வழங்குமாறு திமுக தலைவர் கருணாநிதி இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாரத்ன இந்தியாவுக்கு செல்ல கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் வீசா அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை தூதரகம் நிராகரித்தது. எதிர்வரும் 12 ஆம் திகதி சென்னை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த மாநாடு குறித்து கூட்டமைப்பிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விக்ரமபாகு கருணாரட்னவிற்கு வீசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது ?
09-08-2012 -01:48
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு வீசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள டோசோ மாநாட்டில் கலந்து கொள்ளும ;நோக்கில் விக்ரமபாகு கருணாரட்ன வீசா விண்ணப்பம் செய்திருந்தார்.
எனினும், விக்ரமபாகுவின் இந்திய விஜயத்திற்கு வீசா வழங்க முடியாதுஎன இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக விக்ரமபாகு முன்னர்அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்கஜயசூரியவும் டொசோ மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிதுங்க ஜயசூரியவிற்கு வீசா வழங்கப்பட்டாத இல்லையா என்பதுஇதுவரையில் தெளிவாகவில்லை.
இதேவேளை, டொசோ மாநாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிழையானபிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி சென்iனியல் டொசோ மாநாடு நடைபெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.