செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஹக்கீம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றார் என பைசர் முஸ்தபா கூறுகிறார்:-

 

ஹக்கீம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றார் என பைசர் முஸ்தபா கூறுகிறார்:-

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரதி; அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றம் சுமத்தியுள்ளார்.

குறுகிய அரசியல் லாபத்தை ஈட்டும் வகையில் ஹக்கீம் இவ்வாறு கருத்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹக்கீமின் கருத்து பொறுப்புணர்ச்சி அற்ற வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் இன அல்லது மத குரோத கருத்துக்களை வெளியிடக் கூடாது எனவும் இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாகக் பிரதி அமைச்சர் முஸ்தபா குற்றம் சுமத்தியுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.