விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இணைப்பு - 5 அரசாங்கத்தின் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட டீல்ரூக்ஸனின் உடலும் தகனமாகியது

 

தடைகளையும் மீறி பெருந்திரளானோர் இறுதி உலாவில் பங்கேற்பு

இணைப்பு - 5 அரசாங்கத்தின் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட டீல்ரூக்ஸனின் உடலும் தகனமாகியது

சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட டில்ரூக்ஸனின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கெடுபிடிகள் நிபந்தனைகளை மீறி பெருமளவிலான மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொண்டனர். குறிப்பாக தென்பகுதியில் இருந்தும் பல முக்கியஸ்த்தர்கள் இதில் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கதாகும்-

 

 

 

அடித்துக் கொல்லப்பட்ட கைதிகளின்  உயிரற்ற சடலங்களுக்கும் நிபந்தனை விதிக்கும் மகிந்த சிந்தனை- - வாத்தியங்கள் ஊர்வலங்கள் - சுலோகங்கள்-கோசங்களுக்கு தடை - இணைப்பு - 4

10-08-2012 - 7 - 42

வவுனியாவினில் தாக்கப்பட்டு கோமா நிலையினிலிருந்து உயிரிழந்த டெல்றுக்ஸனது இறதிக்கிரியைகளை கூட நிம்மதியாக நடத்த அரசு அனுமதி மறுப்பதாக குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர். 

இன்று காலையே டில்றுக்ஸனது சடலம் அவரது சொந்த ஊரான பாசையூரை சென்டைந்திருந்தது. அவ்வேளை அங்கு சென்ற யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரே நேற்று மாலையினுள் சடலத்தை அடக்கம் செய்யும்படியான யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜாவின் உத்தரவொன்றை சமர்ப்பித்தார். எனினும் நேற்று மாலையினுள் அடக்கம் செய்வதற்கான உத்தரவை இன்று காலை சமர்ப்பித்தனை ஏற்றுக்கொள்ள மறுத்த குடும்;பத்தவர்கள் நாளைய தினமே அடக்கம் செய்ய விண்ணப்பித்தனர். எனினும் மீண்டும் திரும்பி வந்த சமன்சிகாரே இன்று மாலையினுள் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யவுத்தரவிட்டார். எனினும் மதக்கிரியைகளை நடத்த வேண்டிய பாசையூர் சென்.அன்ரனீஸ் தேவாலயத்தினர் நாளைய தினமே அனுமதிவழங்கியுள்ளதாக மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதையடுத்து நாளைய தினமே இறுதி கிரியைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசிற்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியிருக்க கூடாது கோசங்களை எழுப்பகூடாது ஆட்கள் திரளக்கூடாது என பல்வேறு நிபந்தனைகளை விதித்தே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரணத்தின் பின்னரும் கூட இலங்கை அரசு இவர்களுக்கு பயம் கொண்டுள்ளதான ஊர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இணைப்பு 3 - டில்றொக்சனின் பூதவுடல்  சொந்தக் கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது

படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டில்றொக்சனின் பூதவுடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ் டெல்றொக்சனின் பூதவுடன் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை 5.30 மணியளவில் பூதவுடன் ராகம வைத்தியசாலையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது பூதவுடன் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை இன்று காலை மரணச் சடங்கு நடைபெறும் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், வாத்தியங்கள் இசைக்க கூடாதெனவும், ஊர்வலம் நடத்தப்படக் கூடாதெனவும் எச்சரித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இணைப்பு 2 - டில்றுக்ஸனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது:-

10-08-2012 -01:42

டில்றுக்ஸனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது நேற்று இரவு கொழும்பில் இருந்து புறப்பட்ட  பூதவுடல் தாங்கிய வாகனம் இன்று காலை யாழ்ப்பாணத்தை அடையும்.

                                      

டில்றுக்ஸனது பூதவுடல் நாளை யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது:-

09-08-2012 - 18:14

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து கோமாநிலையில் போராடி உயிர் இழந்த மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் நாளை யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை அவரது சொந்த இடமான பாசையூரில் நடைபெறவுள்ளது. அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன் கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக நீண்ட இழுபறிகளின் பின்னரே மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரது பூதவுடலுடன் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் செல்கின்றனர்.

இந்தக் கட்சியினரின் பாதுகாப்புடன் இன்றிரவே பூதவுடல் தாங்கிய வாகனம் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் போராளியான அவர் தகவலொன்றின் அடிப்படையினில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியினில் குற்றப்புலனாய்;வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.