விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையதள ஊடகவியலாளர்களின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி:-

 

ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையதள ஊடகவியலாளர்களின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி:-

 

ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணைய தள ஊடகவியலாளர்களின் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மற்றும் இரண்டு ஊடகவியலாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணைய தளத்தின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
 
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றிற்கு பிழையான தகவல்களை வழங்கியதாக சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் கணனி உள்ளிட்ட உபகரணங்கள் சீல் வைக்கப்பட்டமை அடிப்படை உரிமை மீறலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே இல்லாதொழிக்கப்பட்ட சட்டமொன்றின் மூலமே ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஊடகவயிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நட்டஈடாக 50 மி;ல்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.