கண்டி தித்தவெல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற றகர் போட்டியின் போது, ஏற்பட்ட மோதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கண்டி அணிக்கும், இலங்கை கடற்படை அணிக்கும் இடையில் நடைபெற்ற இந்த றகர் போட்டியில் கடற்படை அணி தோல்வியடைந்தது.
போட்டி முடிவடைந்த பின்னர், தோல்வியினால் ஆத்திரமடைந்த கடற்படை அணியினர், கண்டி அணியை சேர்ந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கை கடற்படை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதியின் புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் ரோஹித்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.