தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் சிங்களமயப்படுத்தல் குறித்த கொள்கைகளை ஆளும் கட்சி பிரச்சாரம் செய்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், அதனை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அநேக சந்தர்ப்பங்களில் தமிழர்களிடம் இருந்துபறிக்கப்படும் காணிகள் பல்தேசிய கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மிகவும் வலுவிழந்தN;தால்வியடைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி விமான நிலைய அபிவிருத்தி சாதாரண பொதுமக்களுக்குஎந்த வகையிலும் நன்மைகளை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு ஆதரவளித்துவந்ததாகவும், அதன் பின்னர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோருவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது - விக்ரமபாகு
ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா.) இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரத்ன சென்னையில் தெரிவித்துள்ளார். டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இதனை கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்.
உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சென்னையில் நடந்த டெசோ மாநாடு மக்களைத் திரட்டும் முயற்சி என்பதால் அதில் கலந்து கொண்டேன். இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.
சிங்கள தேசியவாதம் என்று கூறி தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழர் மறுவாழ்வுக்காக ராஜபக்ஷ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் இப்போது டெசோ மாநாட்டுக்கு வந்துள்ளேன் என கருணரத்ன தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற டெசோ மாநாட்டில் பேசிய கருணரத்ன, தமிழர்களுக்கு ராஜபக்ஷ அரசு ஒன்றும் செய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார். இதனால் அவருக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சிங்கள அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சென்னையிலேயே கருணரத்ன தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.