விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நீதி அமைச்சரையே கணக்கெடுக்காத காவற்துறை தாக்குதலுடன் அமைச்சருக்கும் பொலிஸ் உயரதிகாரிக்கும் தொடரப்பு

 

ரவூப் ஹக்கீம்:-

நீதி அமைச்சரையே கணக்கெடுக்காத காவற்துறை  தாக்குதலுடன் அமைச்சருக்கும் பொலிஸ் உயரதிகாரிக்கும் தொடரப்பு

நீதி அமைச்சரையே கணக்கெடுக்காத இலங்கையின் காவற்துறை - தாக்குதலுடன் அமைச்சருக்கும் காவல்துறை உயரதிகாரிக்கும் தொடர்பு - ஹக்கீம்:-

அண்மையில் அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். அதாவுல்லாவும், அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் பிரேமலால் ரனகலாவும் செயற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமது ஆதரவாளர்களுக்கும், அதாவுல்லாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கல்முனையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாம் சென்று கொண்டிருந்த போது அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தம்மை தடுத்து, திருப்பி அனுப்பியதாகக் குற்றம் சமத்தியுள்ளார்.

இதற்கு முன்னரும் கல்முனையில் வைத்து தமது பயணத்தை ஆதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததாகவும் இது தொடர்பில் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது தடவையாகவும் தம்மை தடுத்தாகவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திட்டமிட்டு இவ்வாறு தமது பயணத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் அதாவுல்லா நீர்ச் சபையின் சொகுசு விடுதியில் தங்கியிருந்து, தமக்கு எதிரான தாக்குதல்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அட்டாளைச்சேனைக்குள் பிரவேசித்தால் தாக்குதல் நடத்துமாறு அமைச்சர் அதாவுல்லாஹ் துண்டு பிரசூரங்களை வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் காவல்துறையினரும் செயற்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
15-08-2012, 00:04
 - Posted by Siva.
இரண்டு தோணியில் கால் வைத்ததன் விளைவை அனுபவிக்கத்தானே வேண்டும்!கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால், அது மகிந்தவிடம் பலிக்குமா? தேர்தலை தனித்து எதிர்கொள்வோம், பின் அரசுடன் இணைந்து செயல்ப்படுவோம், என்று இவர் சொல்லும் புதுக் கதையைக் கேட்க கிழக்கு இஸ்லாமிய மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை! நீதி அமைச்சரையே காவல் துறை அதிகாரியும் சக அமைச்சரும் கண்டுகொள்ளாது விட்ட பின்பும் அப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் இவரை, மகிந்த கலைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
15-08-2012, 00:22
 - Posted by Solomon
ராப் ஹகீம் ஒன்றுக்கும் பிரயோசினம் இல்லாத "பே...".
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.