தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில்வாழும் தழிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் உறவு நீடித்து வருவதாக பயங்கரவாதம் ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வந்த புலி ஆதரவாளர்கள் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடடுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் ஈழக் கனவு தொடர வேண்டுமென விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சட்டவிரோத ஆட்கட்டதல்காரர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றர் என அவர்குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையானது சர்வதேச குற்றச் செயலாகும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கைஅரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே அநேகமானவர்குள்அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்றனர் என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
கனடாவைப் போன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியஅரசாங்கம் கடுமையான சட்டங்களை பின்பற்றினால், புகலிடக் கோரிக்கையாளர்களின்படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முடியும் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.