இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், தேசியவாத சக்திகளின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்குலக நாடுகளுக்கு எதிரான குறிப்பாக பிரித்தானியாவிற்கு எதிரான ஓர் நிலைப்பாடு உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரஜைகளுக்கு எதிராக இலங்கையில் N;பாராட்டங்கள் நடத்தப்படவில்லை என்ற போதிலும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தமது நாட்டு பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.