அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரரே மன்னார் நீதவான் அந்தனிப்பிள்ளை ஜூட்சனை அச்சுறுத்தியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நீதவானை தாம் அச்சுறுத்தியதாக சகோதரர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அமைச்சரே தம்மை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாக நீதவான் ஜூட்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.
அமைச்சர் பதியூதீனை நீதிமன்றில் அஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.