விடுதலைப்புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத விநியோகஸ்தரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான போர் நடவடிக்கை மையத்திற்கு சென்று அதனை பார்வையிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதன், விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக இருந்த பேரிலும் புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் நடவடிக்கை மையத்திற்கு சென்றமை இதுவே முதல் முறையாகும்.
இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் வெளிநாடுகளில் இருந்து 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர். இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.