பொது நலவாய நாடுகளின் 58 ஆவது பாராளுமன்ற மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
பொது நலவாய நாடுகளின் 58 ஆவது பாராளுமன்ற மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என சபாநாயர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறையில் இலங்கையில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் 58 ஆவது பாராளுமன்ற மாநாடு 'மாற்றத்துக்கான கொள்கைகளைப் பலப்படுத்தல்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுவுள்ள இந்த மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
54 நாடுகளைச் சேர்ந்த 179 பிராந்தியங்களின் 800 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இது வரையில் சபாநாயகர்களும் அமைச்சர்களுமாக 600 பேர் தமது வருகையை உறுதிப்படுத்தி உ10ள்ளதாகவும் தெரிவித்தார்.