விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் - ரணில்

 

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் - ரணில்

 

 
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, ஜனநாயக ஆட்சியை உருவாக்கக் கூடிய ஒரே வழி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரித்துள்ளார்.
 
இந்த அரசாங்கம் எதேச்சாதிகார போக்கில் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் சட்டம் இரண்டு விதமாக அமுல்படுத்தப்படுவதாகவும் ஆளும் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒருவிதமாகவும், மாற்று சிந்தனையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு வேறொரு விதமாகவும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த அரசாங்கம்  ஆட்சியில் இருக்கும் வரைகயில் நாட்டில் ஜனநாயகத்தையோ சுதந்திரத்தையோ எதிர்பார்க்க முடியாது என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.