செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நொச்சிக்குளத்தில் புலனாய்வு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபர் பிணையில் விடுதலை

 

நொச்சிக்குளத்தில் புலனாய்வு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபர் பிணையில் விடுதலை


 

வவுனியா, நொச்சிக்குளம் பிரதேசத்தில் வைத்து முதியவர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு நாள் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்று ஊடாக பிணையில் விடுவிக்கப்படடுள்ளார்.

இவ்வாறு கைதாகி விடுதலையானவர் 65 வயதான வவுனியா, நொச்சிக்குளத்தை சேர்ந்த கந்தையா சபாரத்தினம் என்பவராவார்.

கடந்த ஞாயிற்றுகிழமை மதியம்  இவரது வீட்டுக்கு இராணுவத்தினருடன் சென்ற 3 புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வீட்டில் ஆயுதம் மறைத்து வைத்துள்ளதாகவும் அதை எடுத்து தம்மிடம் தரவேண்டும் என்றும் வெளிநாட்டில் உள்ள  மகனின் தொலைபேசி இலக்கத்தை தரவேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளனர்.

தம்மிடம் ஆயுதம் இல்லை எனவும், மகன் வெளிநாடு ஒன்றில் முகாமில் வாழ்கிறார் அவரிடம் தொலைபேசி இல்லை எனவும் வீட்டார் உண்மையைத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதனைக் கேட்காது முதியவரை விசாரிக்கவேண்டும் தம்முடன் வரும்படி அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

இரண்டு தினங்கள் வவுனியா ஜோசேப் முகாம் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்திவிட்டு கடந்த 15ஆம் திகதி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தார் என்று குற்றசாட்டு சுமத்தப்பட்டு அவர் காவற்துறையினரிடம் ஒப்படைப்பட்டு அன்றைய தினம் வவுனியா நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டு இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்ட்டுள்ளது.

அடிக்கடி வீட்டுக்கு வரும் புலனாய்வாளர்கள், துப்பாபக்கியை மறைத்துவைத்திருப்பதாகவும் அதனை தம்மிடம் ஒப்படைக்குமாறும், வெளிநாட்டிலுள்ள தனது மகனின் தொலைபேசி இலக்கத்தைத் தரும்படியும் வற்புறுத்தி வருவதாகவும், இவ்வாறே கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தான் கைது செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.