இலங்கை பங்குப் பரிவர்த்தனையின் தலைவர் திலக் கருணாரட்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சற்று முன்னர் திலக் கருணாரட்ன தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒருசில பங்குச் பரிவர்த்தனை முதலீட்டாளர்கள் பிரயோகித்த அழுத்தம் காரணமாக தாம் பதவி விலகத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
திலக் கருணாரட்ன இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கொழும்பு பங்குவர்த்தனையின் வர்த்தக நடவடிக்கைகள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பங்குப் பரிவர்த்தனை தலைவர் பதவி விலகியமை குறித்து IMF கவலை
பங்கு பரிவர்த்தனை தலைவர் திலக் கருணாரட்ன பதவி விலகியமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
மிகவும் வலுவமான மற்றுமொரு உயர் அதிகாரியை இலங்கைப் பங்குப் பரிவர்த்தனை இழந்துள்ளதாகவும், அதுவும் குறுகிய காலத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையின் சில முதலீட்டாளர்கள் பிரயோகித்த கடுமையான அழுத்தம் காரணமாக திலக் கருணாரட்ன பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேபோன்று அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதம் தலைவராக செயற்பட்ட இந்திராணி சுகததாச பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
பங்குச் சந்தையை சரியான வழிக்கு இட்டுச் செல்லும் நோக்கிலேயே திலக் கருணாரட்ன செயற்பட்டு வந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிப்பாளர் கோஷி மாத்தாய் தெரிவித்துள்ளார்.