நிகழ்ச்சி நிரல் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த நிகழ்ச்சி நிரலொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் பெண்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, தீர்மானம் நிறைவேற்றுவதில் பெண்கள் மற்றும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி ஆகிய நான்கு பிரதான விடயங்களின் கீழ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வரும் பெண்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.