யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டமொன்றை அரசாங்கத்தின் சார்பில் ஏற்றுக் கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தர்மதாச மற்றும் நோபள் விருதாளர் லெய்மா கொப்வீ உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதியளவு முனைப்புக்கள் காட்டப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் காரணமாக பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன,மத மற்றும் ஏனைய பேதங்களை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆண் பெண் இருபாலாரும் சம அளவிலான பங்களிப்பை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.