செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை குறித்து இலங்கை அதிருப்தி

 

பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை குறித்து இலங்கை அதிருப்தி


 

பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை தொடர்பில் இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்வது ஆபத்தானது என அண்மையில் பிரித்தானியா தனது புதிய பயண எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக தேசிய வாத சக்திகள் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்றவற்றினால் தமது நாட்டுப் பிரஜைகள் பாதிப்புக்களை எதிர்நோக்கக் கூடுமென இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், பிரித்தானியாவின் இந்த பயண எச்சரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொருத்தமற்ற தருணத்தில் பொருத்தமற்ற விதத்தில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் உண்மை நிலைமைக்கு புறம்பான வகையில் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பெண்கள் சிறிய ஆயுதங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டுமென பயண எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியாக அல்லது சிறு குழுக்களாக பெண்கள் செல்லும் போது மேலதிக பாதுகாப்பு ஏற்பாகள் செய்து கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இவ்வாறான பயண எச்சரிக்கையின் மூலம் இலங்கையர்கள் அனைவரும் பாலியல் குற்றவாளிகள என பிரித்தானியா சித்தரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த இந்த பயண எச்சரிக்கையை பிரித்தானியா வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.