செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு அஞ்சுகின்றன – ஜனாதிபதி

 

எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு அஞ்சுகின்றன – ஜனாதிபதி

 


 

எதிர்க்கட்சிகள் தேர்தலைக் கண்டு அஞ்சுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த காலத்தில் தேர்தல்களை நடாத்துமாறு அரசாங்கங்களுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய எதிர்க்கட்சிகள் எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டுமென்றே விரும்புகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு நன்றி பாராட்ட இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரட்சி மற்றும் ஏனைய பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், 27 ஆண்டுகளாக நாட்டில் நிலவிய யுத்தத்தை இந்த அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.