உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுது;த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என திறைசேரியின் பணிப்பாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை பல அமைச்சுக்கள் அமுல்படுத்த ஆரும்பிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.