மட்டக்களப்பில் உள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலகம் இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஈரோஸின் தலைவர் எனக் கூறப்படும் ஆர். பிரபாகரன் என்பவரின் வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி அலுவலகம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகில் அமைந்துள்ளது. சம்பவம் குறித்து மட்டக்களப்பு காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.